29 Nov 2016

ஹகீமுல் உம்மஹ் அஷ்ரப் அலி தானவி ரஹிமஹுல்லாஹ் .

ஹகீமுல் உம்மஹ் அஷ்ரப் அலி தானவி ரஹிமஹுல்லாஹ் 




     அறிவு வானில் ஒரு நட்சத்திரமாகஉளப்பரிசுத்தப் பாதையின் ஒரு ஒளி விளக்காக வாழ்ந்து மறைந்த அறிவுக் கடல் மௌலானா அஷ்ரப் அலி தானவி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் பற்றி சிறிதளவாவது அறிந்திருப்பது மிகப் பொருத்தமாகும். 

☪ பெயர் : அஷ்ரப் அலி தானவி இப்னு அப்தில் ஹக் இப்னி அல்- ஹாபிழ் பைஜ் அலி

☪  பரம்பரை : உமர் ரழியல்லாஹு அன்ஹ் அவர்களுடன் சென்றடைகின்றது

☪  பிறப்பு : ஹி -1280/ றபீஉனில் ஆகிர்/ வியாழன் காலை  1867/09/10

☪  பிறப்பிடம் : தானாபவன் என்ற கிராமம்

☪ வபாத் : ஹி- 1262/ 7/16 ஆ- 1943/7/20 

☪  அடக்கம் : பொது அடக்கஸ்தலமாக அவர்கள் வக்பு செய்த இடத்திலேயே அடங்கப்பெற்றார்கள்

• சிறு வயது முதலே அனைவருடைய அன்பையும் சம்பாதித்திருந்தார்கள். 

• ஷைக் அப்துல் ஹக் திஹ்லவி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் மௌலானா அவர்களுக்கு சிறு வயதிலே மார்க்க அறிவுகளை கற்றுக்கொடுத்தார்கள். 

• 5 வயதாகும் போது அன்புத் தாய் இறையடி சேர்ந்தார்கள். அத்துடன் தந்தையின் பராமரிப்பின் கீழ் வந்தார்கள். 

• வயது வெறும் 12ஆக இருக்கும் போதே இறவுத் தொழுகையில் அதீத ஆர்வம் செலுத்தினார்கள். 

• " ஆகூன் ஜீ " என்பவர்களிடம் குர்ஆன் மனனத்தை ஆரம்பித்து இறுதியில்
 " ஹாபிழ் ஹுஸைன் அலி " என்பவர்களிடம் நிறைவு செய்தார்கள். 

• பார்சி மொழியையும் சில ஆரம்ப நிலை புத்தகங்களையும் சில மகான்களிடம் கற்றுத் தேர்ந்ததுடன்மௌலானா பத்ஹ் முஹம்மத் தானவி என்பவர்களிடம் நடு நிலை புத்தகங்களை இனிதே கற்றார்கள். 

• வயது 15ஆக ஆகிய வேளை " தேவ்பந்த் " எனும் ஊருக்கு புறப்பட்டுச் சென்று அங்குள்ள " ஜாமிஆ தாருல் உலூம் தேவ்பந்த் " என்ற கலாசாலையில் ஹி- 1295ம் ஆண்டு சேர்ந்து பல கலைகளையும் கற்று பட்டம் பெற்றார்கள். 

• படிக்கும் காலத்திலேயே கிருஸ்தவர்களுடன் விவாதங்கள் செய்து வெற்றி பெற்றுள்ளார்கள். 

• நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அழகிய வழிமுறைகளை அடி மனதால் நேசித்ததுடன் நூதன கொள்கைகளை அடியோடு வெறுத்தொதிக்கினார்கள். இவ்விடயத்தை அவர்களுடைய " இஸ்லாஹுர் ருஸூம் " மற்றும் " தஃலீமுத்தீன் " என்ற இரு நூல்களின் மூலம் தெளிவாகவே விளங்க முடியும். 

• தஸவ்வுப் எனும் மெய்ஞானப் பாதையை நூதனக் கொள்கைகள்அடிப்படையற்ற கட்டுக்கதைகள் போன்றவற்றை விட்டும் பரிசுத்தப்படுத்தி புதிது படுத்தினார்கள். 

• அவர்கள் மொத்தமாக ஏறக்குறைய 800க்கும் அதிகமான நால்களை தொகுத்தளித்துள்ளார்கள். 

• அவர்களுடைய முக்கியமான ஆசான்கள் சிலர்கள்: 

 1. முஹம்மத் யஃகூப் நானூத்தவி
 
2. ஷைகுல் ஹின்த் மஹ்மூதுல் ஹஸன்  தேவ்பந்தி
 
3. மன்பஅத் அலி தேவ்பந்தி

 4. முல்லா மஹ்மூத்

 5. ஸைய்யித் அஹ்மத் 
 
6. முஹம்மத் அப்துல்லாஹ் முஹாஜிர் மக்கி 

• மௌலானா அவர்களுடைய முக்கிய இரு உபதேசங்கள் : 
 
1. நான் அனைவரையும் மன்னித்து விட்டேன் அனைவரும் என்னை மன்னித்து விடுங்கள். 
 
2. மார்க்க அறிவில் ஆர்வம் காட்டுங்கள். 

தொகுப்பு : ஹனீபா றஹ்மதுல்லாஹ் ரஹ்மானிஉமரி
உஷாத்துனை : இனையம்

0 comments:

Post a Comment

 

makkah live

Sample Text

madina live