8 Mar 2016

பரேல்விகளின் குற்றச்சாட்டு க்கு தக்க பதில் : 16

முதலில் ஷாஹ் இஸ்மாயில் ஷஹீத் (ரஹ்) அவர்கள் மீது சுமத்தப்படும் சுருக்கமான
குற்றச்சாட்டை முதலில் விளங்கி கொள்வோம்!

எந்தளவிற்கு அபாண்டத்தை மறுமையின்
அச்சமின்றி அள்ளிவீசியுள்ளார்கள். ஷாஹ் இஸ்மாயில் ஷஹீத் (ரஹ்) அவர்கள் மீது
பரலேவிகள் பொய்யாக குப்ரை இணைத்துவிட்டனர்.

ரிளாகான் பரலேவி கூறுகிறார்:

முஸ்லிம்களே! ஏமாற்றுக்காரன் தூய்மையற்ற, சபிக்கப்பட்ட ஷைத்தானின் வார்த்தையை
கவனித்துப் பாருங்கள்! விபச்சாரியின் பக்கம் கவனம் செல்வதை விட, அவளுடன்
விபச்சாரம் செய்வதாக, கழுதை,மாடு சிந்தனையை விட முஹம்மது நபி (ஸல்) அவர்கள்
பக்கம் கவனம் செலுத்துவதானது மிகக் கெட்டது என்பதானது அநியாயத்திலும்
மிகப்பெரிய அநியாயமாகும்.( ﺍﻟﮑﻮﺑﺔ ﺍﻟﺸﮩﺎﺑﯿﺔ )

 அடுத்து மற்றோர் இடத்தில்
கூறுகிறார்:

 முஸ்லிம்களே! நான் அல்ஹம்து மட்டும் சொல்லவில்லை.குர்ஆனின் ஆயத்து
ஒன்று இரண்டு இருக்க கூடும்.அதனை தவிர குர்ஆனில் உள்ள மற்ற சூராக்களை
தொழுகையில் ஓதுவதால் இணைவைப்பிலிருந்து எவரும் தப்பிக்க முடியாது.அதாவது
குர்ஆனில் நபிமார்கள்.நல்லோர்கள், ஸஹாபாக்கள், வானவர்கள் முஹாஜிரீன்கள்,
இறையச்சமிக்கவர்கள், அல்லாஹ்வின் அடியார்களான நல்லோர்களைப் பற்றி குர்ஆன்
புகழ்ந்துரைக்கிறது.இந்த வசனங்களை ஓதுவதால் அவர்களின் சிந்தனை வரும்.எனவே அதனை
ஓதுவதால் இணைவைப்பு ஏற்பட்டுவிடும்.எனவே இணைவைப்பிலிருந்து தப்பிக்க
முடியாது.(சுருக்கமான கருத்து)

அல்லாமா அஷ்ரப் அலி ஸய்யாலவி பரலேவி
கூறுகிறார்:

இந்த வார்த்தையானது இஸ்மாயில் ஷஹீத் அல்லது ஸய்யித் அஹ்மத்,அல்லது
அப்துல்ஹை எவர் வேண்டுமானாலும் இருக்கட்டும் இதில் ஒருவரை குறிப்பாக்குவது
நோக்கமில்லை.நமக்கு நோக்கம் இது மட்டும்தான் தேவ்பந்த் உலமாக்களால்
அங்கீகரிக்கப்பட்ட நூலில் ஒரு பக்கம் நபி (ஸல்) அவர்களின் சிந்தனை மற்றும்
எண்ணம் மற்றொரு புறம் எதிரில் கழுதை,மாடு சிந்தனை கூறப்பட்டுள்ளது.நபியுடன்
இவைகளை ஒப்பிடுவது அவமரியாதை இல்லையா? (ﻣﻨﺎﻇﺮ ﺟﮭﻨﮓ )

"ஆயிஷா (ரளி) முன்பாக ஸஹாபாக்களிடம் வினவப்பட்டது எந்த விஷயம் தொழுகையை
முறிக்கும்? ஸஹாபாக்கள் கூறினார்கள் தொழுகையாளிக்கு முன்பாக கழுதை,நாய்,பெண்
கடந்து சென்றால் தொழுகை முறிந்துவிடும்.இந்த விஷயமானது ஆயிஷா (ரளி) க்கு
வெறுப்பாக இருந்தது.ஏனெனில் ஆயிஷா (ரளி) பெண்மணி.எனவே பெண்களுடன் நாய்,கழுதை
சேர்த்து சொல்லப்படுகிறது. அதனால் ஆயிஷா (ரளி) கூறினார்கள் நீங்கள் எம்மை
நாயாக ஆக்கிவிட்டீர்கள்!  ஆயிஷா (ரளி)அவர்கள் ஏன் கோபம் கொண்டார்கள்காரணம் என்ன? ஸஹாபாக்கள் பெண்களை,நாயுடன் கழுதையுடன் இணைத்து கூறியதால் இதனை
அவமரியாதை என்பதாக எண்ணி அதனை மறுத்தார்கள்.ஆக மனித இனத்தில் ஆண் அல்லது பெண்
இணைத்தை விலங்குகளுடன் ஒப்பிட்டு கூறுவதானது அந்த இனத்திற்கு மிகப்பெரி
அவமரியாதையாக கருதப்படுகிறது எனும் போது மனித இனித்தில் மேன்மை பொருந்திய
அண்ணலாரை விலங்குகளுடன் ஒப்பிடுவது அவமரியாதை இல்லையா?

முஃப்தி ஷவ்கத்
ஸய்யாலவி கூறுகிறார்:

ஸிராத்தே முஸ்தகீமின் மேற்குறிப்பிடப்பிட்ட வாக்கியமானது
கெட்ட வழிமுறையாகும்.குர்ஆன், சுன்னாவின் தெளிவான சட்டங்களுக்கும்
ஸஹாபாக்களின் வழிமுறைக்கும் மாற்றமாக உள்ளது.

புகாரியின் ஹதீஸின் கருத்து:

நபி (ஸல்) அவர்கள் தொழுகைக்கு வரும் பொழுது அபூபக்கர் (ரளி) அவர்கள் இமாமத்
செய்து கொண்டிருந்தார்கள். இதனின் கருத்து தொழுகை ஆரம்பமாகிவிட்டது.அந்த
சமயத்தில் நபி (ஸல்) அவர்கள் அந்த ரக்அத்தில் இணைந்தார்கள்.அந்த நேரத்தில்
அபூபக்கர் (ரளி) அவர்கள் அண்ணலாரின் மீதுள்ள மேன்மை கண்ணியத்தின் காரணமாக
பின்னால் வந்தார்கள்.இந்த செயலானது நபி (ஸல்) அவர்களை கண்ணியப்படுத்தியதால்
இணைவைப்பின் பால் கொண்டு சென்று விட்டதா? அபூபக்கர் ரளி அவர்களைப் போன்ற
பெரும் மனிதர்களுக்கு தொழுகையின் முக்கியத்துவம் அல்லாஹ்வின் சந்நிதானத்தின்
ஒழுக்கங்களை அறியவில்லையா? மேலும் அந்த சந்தர்ப்பத்தில் கவனம் நபி (ஸல்)
அவர்களின் பால் சென்று கொண்டுள்ளது. இது இணைவைப்பு இல்லையா?

பரலேவிகளால் எழுப்பப்படும் குற்றச்சாட்டுகள் :

1) ஸிராதே முஸ்தகீம் இஸ்மாயில்
ஷஹீத் (ரஹ்) அவர்கள் எழுதியது.
2)நபி (ஸல்) அவர்களின் சிந்தனை வருவதானது
கழுதையின் சிந்தனை வருவதை விட கெட்டது.
3) நபி (ஸல்) அவர்களின் புனித பெயருடன்
கழுதையை இணைத்து தவறாக ஒப்பிடப்படுகிறது.
4) நபி (ஸல்) அவர்களின் பக்கம் கவனம்
செலுத்துவதானது ஸஹாபாக்களிடமிருந்து நிரூபணமாகியுள்ளது. ஆனால் ஷாஹ் இஸ்மாயில்
ஷஹீத் ரஹ் அவர்களிடம் இந்த செயலானது இணைவைப்பாகும்.
 5) தொழுகையில் அண்ணலாரை
கண்ணியப்படுத்துவது ஷிர்கில் இழுத்து சென்று விடும் என்பது ஷாஹ் இஸ்மாயில்
ஷஹீத் ரஹ் அவர்களிடத்தில் தான்.

ஆனால் ஸஹாபாக்கள் தொழுகையிலே நபி (ஸல்)
அவர்களின் பால் கவனம் செலுத்தினார்கள்.சங்கை செய்தார்கள்.

6) சிராதே
முஸ்தகீமின் வாசகமானது இறைநிராகரிப்பும் அப்பட்டமான அவமரியாதையாகும்.
7)தொழுகையில் தரூத் ஷரீப் ஓதும் போது நபி (ஸல்) அவர்களின் சிந்தனை
வரும்.கண்ணியமும் வெளிப்படும்.இதனால் ஷாஹ் இஸ்மாயில் அவர்கள்கூறுவதானது
குர்ஆன் மற்றும் ஹதீஸின் போதனைக்கு எதிரானது.

சில பரலேவிகள் இந்தளவிற்கு
வரம்பு மீறி புனைந்து கூறியுள்ளார்கள்:

தேவ்பந்த் உலமாக்களிடத்தில்
தொழுகையில் நபி (ஸல்) அவர்களின் சிந்தனை வருவதால் தொழுகை
முறிந்துவிடும்.கழுதையின் சிந்தனையால் முறியாது.

முதலில் சிராதே முஸ்தகீம் எழுதியது யார்?
அதனின் நோக்கம் என்ன?
அதனின் ஆசிரியர் யார்?
 அதனை கோர்வை செய்தவர் யார்?
 இந்த குற்றச்சாட்டு எந்த பகுதியில் இடம்பெற்றுள்ளது? 
என்பதை அறிந்து கொள்வோம்!

ஷாஹ் வலியுல்லாஹ் (ரஹ்)
அவர்களுக்கு நான்கு புதல்வர்கள்.

ஷாஹ் அப்துல் அஜீஜ் (ரஹ்), ஷாஹ் அப்துல்
ரபீஉத்தீன் (ரஹ்) ,ஷாஹ் அப்துல் காதிர் (ரஹ்) இவர்களில் ஷாஹ் அப்துல் கனி
அவர்கள் அனைவரையும் விட சிறியவர். வாலிப பருவத்திலே மரணம் எய்தினார்.

ஷாஹ்
அப்துல் அஜீஜ் (ரஹ்) அவர்கள் மார்க்க கல்வி ரீதியாக,செயல்ரீதியாக ஷாஹ்
வலியுல்லாஹ் (ரஹ்) அவர்களின் பிரதிநிதியாக திகழ்ந்தார்கள்.

இந்தியா
ஆங்கிலேயரின் ஆதிக்கத்தில் சென்ற போது இந்தியா தாருல் ஹர்ப் என்று தீர்ப்பு
அளித்தார்கள்.முழு இந்தியாவிலும் அன்னாரின் குடும்பத்தின் தாக்கம்,
நிலைத்தன்மை இருந்தது.அப்துல் அஜீஜ் அவர்களின் தஸஃவுப்பில் (ஞானப்பாதை)
கலீபாவாக ஸய்யித் அஹ்மத் ஷஹீத் (ரஹ்) அவர்கள் இருந்தார்கள்.
நாற்பதனாயிரத்திற்கு அதிகமான இந்துக்கள் இவரின் கரத்தில் இஸ்லாத்தை
ஏற்றனர்.ஸய்யித் அஹ்மத் ஷஹீத் (ரஹ்) அவர்கள் சுன்னத்தைப் பின்பற்றும்
பெரியோராக திகழ்ந்தார்கள். பரலேவிகளிடத்தில் ஸய்யித் அஹ்மத் ஷஹீத் (ரஹ்)
அவர்களுக்கு இருந்த அந்தஸ்து: மெளலவி அப்துஸ்ஸமீஃ ராம்பூரி இவரின் நூலிற்கு
ரிளாகான் பரலேவி மதிப்புரை வழங்கியுள்ளார். அந்த நூலில் ஸய்யித் அஹ்மத் ஷஹீத்
அவர்களை உண்மையான வழிகாட்டி என்பதாக கூறியுள்ளார் ( ﺍﻧﻮﺍﺭ ﺳﺎﻃﻌﮧ )

பரலேவி அறிஞர்
கூறுகிறார்:

ஜிஹாத் அமைப்பிற்கு அடித்தளமிட்டவர் ஸய்யித் அஹ்மத் ஷஹீத்
அவர்கள் அலி (ரளி) வழித்தோன்றலில் உள்ளவர்.கண்ணியமானர் உற்சாகமானவர் துயர்
போக்குபவர் உடல் ரீதியாக வலிமை,மேலும் தகுதி உடையவராக திகழ்ந்தார்.அவர்களின்
போதனை எளிமையாக இருந்தது.ஆனால் ஆத்மீக வலிமையுடையவராக இருந்தார்.அவரிடத்தில்
இறைஈர்ப்பு நிலை உண்டாகி இருந்தது.அவர்களின் பேச்சிலே தாக்கம்
இருந்தது.அவர்களின் சிந்தனையிலும்,பேச்சிலும் நடுநிலைமை இருந்தது.ஹனஃபி மத்ஹபை
சேர்ந்தவர்.இறுதி வரை ஹனஃபி மத்ஹபிலே நிலைத்து இருந்தார்.( ﻣﻮﻻﻧﺎ ﺣﮑﯿﻢ ﺳﯿﺪ
ﺑﺮﮐﺎﺕ ﺍﺣﻤﺪ ﺳﯿﺮﺕ ﺍﻭﺭ ﻋﻠﻮﻡ )

ஜிஹாத் அமைப்பைவிமர்சிப்பவர்கள் (பரலேவிகள்) ஷாஹ் இஸ்மாயில் ஷஹீத் அவர்களை
குறிவைத்து விமர்சித்தார்கள்.நம்முடைய முன்னோர்கள் அன்னாரிடத்தில் (ஸய்யித்
ஷஹீத் அஹ்மத் (ரஹ்)) எந்த ஒரு கருத்து வேறுபாடும் கொள்ளவில்லை. அவர்களைப்
பற்றி ஒழுக்கத்துடன் நினைவு கூர்வார்கள்.அவர்கள் உயிரோட்டமான ஜிஹாதிற்கு
புத்துணர்வு ஊட்டினார்கள்.போரிட்டு ஷஹீதானார்கள்.அவர்கள் விஷயத்தில்
எங்களிடத்தில் நல்லெண்ணமும் கண்ணியமும் உள்ளது.( ﻣﻮﻻﻧﺎ ﺣﮑﯿﻢ ﺳﯿﺪ ﺑﺮﮐﺎﺕ ﺍﺣﻤﺪ ,
ﺳﯿﺮﺕ ﺍﻭﺭ ﻋﻠﻮﻡ )

ஆக இதன் மூலம் பரலேவிகளிடத்தில் ஸய்யித் அஹ்மத் ஷஹீத் (ரஹ்)
அவர்களை பரலேவிகள் போற்றியுள்ளனர் என்பதை அறிய முடிகிறது.

சிராதே முஸ்தகீம்
மல்பூஜாதின் தொகுப்பாகும்.தஸவ்வுஃப் மற்றும் தரீகதின் தலைப்பில் ஒன்று
திரட்டப்பட்டது.இந்த மல்பூஜாதை இருவர் ஒன்று சேர்த்தனர்.ஷாஹ் இஸ்மாயில் ஷஹீத்
ரஹ் அவர்கள் மற்றும் மெளலானா அப்துல்ஹை பட்டானவி ரஹ் அவர்கள் மெளலானா அப்துல்
ஹை பட்டானவி அப்துல் அஜீஜ் அவர்களின் மருமகனார் ஸிராதே முஸ்தகீம் நூலின்
நோக்கம் தஸவ்வுஃப் மற்றும் தரீகதாக இருந்தது.ஸய்யித் அஹ்மத் ஷஹீத் அவர்கள்
இந்த நூலில் அறிவற்ற சூபியாக்களின் குர்ஆன்,ஹதீஸிற்கு மாற்றமான செயல்பாடுகளை
எச்சரிக்கிறார்.இந்த நூலில் நான்கு பகுதிகள் உள்ளது.

அவற்றில்
முதலாம்வது,நான்காவதும் ஷாஹ் இஸ்மாயில் ஷஹீத் (ரஹ்)அவர்கள்
தொகுத்தது.இரண்டாவது மூன்றாவது பகுதி மெளலானா அப்துல் ஹை பட்டானவி (ரஹ்)
அவர்களுக்கு உள்ளதாகும்.


ஸிராதே முஸ்தகீமின் தொகுப்பாளரின் முன்னுரை பலகீனமான
அடியானாகிய முஹம்மத் இஸ்மாயில் கூறுகிறேன்.அடியேனாகிய எனக்கு அல்லாஹ் எண்ணற்ற
அருட்கொடைகளை வழங்கியுள்ளான்.அதில் மிகப்பெரிய அருட்கொடை இக்காலத்தின்
மிகப்பெரிய வழிகாட்டி ஹள்ரத் ஸய்யித் அஹ்மத் அவர்களின் சபை மற்றும்
நேர்வழியின் இடத்தில் இருப்பதுதான். அல்லாஹுதஆலா அன்னார் வாழும் காலம் வரை
பலனை தருவானாக!

அவர்களின் சொல் செயல் நிலைகளின் மூலம் அனைத்து
தேட்டமுள்ளவர்களுக்கும் அல்லாஹ்வின் நெருக்கத்தின் பலனை அளிப்பானாக!

(இதனை
ஒட்டி பல்வேறு விஷயங்களை கூறிய பிறகு) இவ்வாறு சொல்கிறார்கள்:

ஸய்யித் அஹ்மத்
அவர்களின் சபையில் ஆஜரான பொழுது அவர்களின் பேச்சுக்களை மற்றவர்களுக்கு
எத்திவைப்பதற்காக அதனை நான் எழுத ஆரம்பித்தேன்.

அடுத்து ஷஹீத் அவர்கள்
கூறுவதன் சுருக்கம்:

மார்க்க அறிஞர்களில் சிறந்து விளங்குபவருமான மேன்மை மிக்க
மெளலானா அப்துல் ஹை அவர்கள்,அன்னாரின் உபதேசங்களை எழுதி வைத்திருந்தார்கள்.
அதனையே இந்த நூலின்இரண்டாவது மூன்றாவது தலைப்பில் இணைத்துவிட்டேன்.
இவைகள் மூலம் நாம் சில விஷயங்களை புரியலாம் சிராதே முஸ்தகீம் ஸய்யித் அஹ்மத்
ஷஹீத் ரஹ் அவர்களின் உபதேசங்கள் தொகுக்கப்பட்ட நூலாகும் முதல் பகுதியையும்
நான்காவது பகுதியையும் ஷாஹ் ஷஹீத் ரஹ் அவர்கள் ஒன்று சேர்த்தும்
வரிசைப்படுத்தியும் உள்ளார்கள் இரண்டாவது மூன்றாவது பகுதி மெளலானா அப்துல்ஹை
பட்டானவி ஒன்று சேர்த்து எழுதிவைத்திருந்ததை ஷாஹ் இஸ்மாயில் ஷஹீத் ரஹ் அவர்கள்
அதனை எடுத்தெழுதியுள்ளார்கள்.அதிலும் குற்றச்சாட்டு சுமத்தப்படும் பகுதியானது
இஸ்மாயில் ஷஹீத் ரஹ் எழுதியதுமல்ல;தொகுத்ததுமல்ல!


பரலேவிகளிடத்தில் முதல் கேள்வி மெளலவி ரிளாகான் பரலேவி, ஷவ்கத் ஸய்யாலவி,
ஹனீஃப் குறைஷ் அனைவரும் இந்த வாக்கியங்களை ஷாஹ் இஸ்மாயில் ஷஹீத் (ரஹ்)
அவர்களின் பால் தொடர்புபடுத்துகின்றனர்.ஆனால் இந்த வாதமானது உண்மைக்கு
எதிரானது என்பதை தெளிவாக நிரூபித்துவிட்டோம்! பரலேவிகள் தங்களது பெரியோர்களை
பொய்யர்கள் என்பதாக கூறத்தயாரா?

எவராக இருந்தாலும் இவ்வாறு கூறுவதானது தவறு
என்று வாதிட்டால் பரலேவிய அறிஞரான மெளலவி அப்துஸ்ஸமீஃ ராம்பூரி அவர்கள்தான்
ஸய்யித் அஹ்மத் ஷஹீத் (ரஹ்) அவர்களை உண்மையான வழிகாட்டி என புகழாரம்
சூட்டினார் எனவே அன்னார் ஸய்யித் அஹ்மத் ஷஹீத் (ரஹ்) காபிர் என்றால் அல்லாஹ்
பாதுகாப்பானாக! அவரின் இறைநிராகரிப்பை பொருந்திக்கொண்ட ராம்பூரி அவர்களையும்
இறைநிராகரிப்பாளர் என கூறத்தயாரா? ராம்பூரியின் நூலிற்கு அணிந்துரை வழங்கிய
ரிளாகானையும் காபிர் என கூறத்தயாரா?

   இனி எதனை விமர்சிக்கப்படுகிறதோ அதனைப் பார்ப்போம்!

ஷைத்தான் கூட
மகிழ்ச்சியினால் குதூகலிக்கும் அளவிற்கு பொய்யை புனைந்துள்ளனர்.இந்த நூல்
நான்கு பகுதிகளைக் கொண்டது.இந்த நூலின் ஆரம்பம் முதல் இறுதி வரை தஸவ்வுஃப்
பற்றியும்,தரீகத் பற்றியும் பேசுகிறது.

இந்த நூலின் தலைப்புகள்:

 1)நுபுவ்வத்
மற்றும் விலாயத்தின்  (நெருக்கம் பெறுதல்) வழிமுறைகளுக்கும் மத்தியில் உள்ள
வித்தியாசம்
2)வணக்கங்களை சரியான முறையில் நிறைவேற்றுதல்
 3)விலாயத் (நெருக்கம்
பெறுதல்) பாதையில் செல்வது
4) நுபுவ்வத்தின் வழியில் செல்வது

இனி சிராதே
முஸ்தகீமில் உள்ள வாக்கியங்களின் மொழி பெயர்ப்பு:

விபச்சாரத்தின் சிந்தனையை
விட மனைவியுடன் தாம்பத்தியம் கொள்வதாக சிந்தனை நல்லது.பெரியோர் மற்றும் அவரைப்
போன்ற கண்ணியம் செலுத்த தகுதியானவர்கள் அண்ணல் நபி ஸல் அவர்களாக இருந்தாலும்
சரி அவர்களின் பால் "ஸர்ப்ஃபே ஹிம்மத்" என்ற அமலில் ஈடுபடுவதானது
மாடு,கழுதையின் சிந்தனையில் மூழ்குவதை விட கெட்டதாகும்.ஏனெனில் பெரியோர்
மற்றும் கண்ணியம் செலுத்த தகுதியானவர்களின் சிந்தனையானது
மேன்மை,மகத்துவத்துடன் இருக்கும்.மனிதனின் உள்ளத்தின் அடி ஆழம் ஊடுருவிச்
சென்றுவிடும்.இது கழுதை மாட்டின் சிந்தனையில் மூழ்குவதற்கு மாற்றமாக ஏனெனில்
இவைகளின் சிந்தனையில் பிரியமோ கண்ணியம் செலுத்துவதையோ காணமுடியாது.மாறாக
அருவருப்பும்,தரம் குறைந்ததாக  இருக்கும்.ஆனால் பெரியோரின் பக்கம் கண்ணியம்
செய்வதானது தொழுகையில் நாடப்படுவதாக ஆகிவிடும்.இது இணைவைப்பின் பக்கம் கொண்டு
சென்றுவிடும்சுருக்கம் என்னவெனில் இந்த இடத்தில் நாடப்படுதல்
ஊசலாட்டத்திற்கும் உள்ள வித்தியாசம்  விளக்கப்படுகிறது.(ஸிராதே முஸ்தகீம்)

விபச்சாரம் செய்கிற நினைப்பும் என்பதானது வாக்கியத்தில் இடையில் இல்லாத
ஒன்று.பரலேவிகள் சுமத்தும் குற்றச்சாட்டிற்கு ஏற்ப 'விபச்சாரம் செய்கிற
நினைப்பு' என்பதாக வரவில்லை.திரித்தும்,புரட்டியும் உள்ளனர். இதில் உள்ள
ஸர்ஃபே ஹிம்மத் என்ற வார்த்தையின் சரியான பொருளை அறிவதற்கு முன்பாக சில
அடிப்படைகளை புரிந்து கொள்ளவேண்டும்.

1)எவரேனும் ஒருவர் ஷைகு இப்னு அரபி (ரஹ்) அவர்களின் நிலையை தனித்தன்மையை
அறியாமல் அவரின் நூலை படிப்பாரானால் மிகவும் எளிதாக வழிகெட்டுவிடுவார்.

2)ஒரு
நூலை விமர்சிப்பதற்கு அல்லது வாசிப்பதற்கு முன்பே அந்த நூலின் தலைப்பு என்ன?
அதனின் நோக்கம் என்ன? அதில் உபயோகிக்கப்படும் வார்த்தையின் சரியான பொருள்
என்ன? என்பதை அறியாதவரையில் அதில் சொல்லப்படும் கருத்தை புரிந்து கொள்ள
முடியாது.

உதாரணமாக ﻗﺒﺾ  என்ற வார்த்தையானது மருத்துவரீதியாக (மலம் வராமல்
இருக்கும் நோய்க்கு சொல்லப்படும்.) இதே வார்த்தையானது தஸவ்வுஃப்பில்
பயன்படுத்தும் போது முரீதுக்கு ஏதேனும் காரணத்தால் அமல்களில் சோம்பல் ஏற்பட்டு
இருக்கும்.ஆரம்பத்தில் தொழுகையில் உள்ளச்சமுமம்,பணிவும் நிறைந்து
இருக்கும்.திடீரென்று முந்திய நல்ல நிலையானது மாறி இருக்கும்.தஸவ்வுஃப்பை அறவே
அறியாத நபர்.அது சம்பந்தமான ஒரு நூலை படிக்கிறார்.முரீத் தனது ஷைகிடத்தில்
வந்து தனக்கு ﻗﺒﺾ ஏற்பட்டுவிட்டதாக கூறுகிறார்.அதற்கு ஷைகு இன்ன மதரஸாவிற்கு
சென்று அங்குள்ள சிறியவர்களின் தலையை அன்போடு தடவுங்கள். உங்களுக்காக துஆ
செய்யுமாறு அவர்களிடத்தில் கூறுங்கள்! என்கிறார்.அந்த முரீதானவர் அவ்வாறு
செய்தார்.அவரின் நிலையும் சீரானது.இப்பொழுது நூலை படிக்கும் நபர் எவருக்கு ﻗﺒﺾ
(மலம் வராமல்இருக்கும் நோய்) இவ்வாறு செய்தால் நோய் நீங்கிவிடும் என
எண்ணுகிறார்.அந்த நபருக்கு சொல்லப்படும் சகோதரரே! இங்கு சொல்லப்படும் ﻗﺒﺾ
என்பது தஸவ்வுஃப் சம்பந்தப்பட்டது.ஏனெனில் இது தஸவ்வுஃப் சம்பந்தமான
நூலாகும்.

3) முஃப்ரத் (தனியொரு வார்த்தை) என்பதானது நஹ்விலே (அரபி
இலக்கணத்தில்) பயன்படுத்தப்படும். மன்திகிலும் (தர்க்க கலை)
பயன்படுத்தப்படும்.ஆனால் அரபு இலக்கணத்தின் படி ஒரு அர்த்தம்.மன்திகில்
மற்றொரு அர்த்தம்.அரபு இலக்கண நூல்களில் அதற்கு ஏற்ப பொருள் கொள்ளவேண்டும்.

4)ஸஹீஹ் (சரியானது) என்ற வார்த்தையானது அகராதியில் அதனின் அர்த்தம் வேறு
ஸர்ஃப் எனும் சொற்புணர் இலக்கணத்தில் அர்த்தம் வேறு ﺑﻨﺪﺭ (குரங்கு) என்பது
உருது மொழியிலாகும்.அதே வார்த்தை அரபுகளிடத்தில் அழகான மனிதருக்கு சொல்வார்கள்.

5)சில ஆசிரியர்களுக்கென்றே குறிப்பிடத்தக்க புழக்க வார்த்தைகள் இருக்கும்
(உதாரணமாக) ஷாஹ் வலியுல்லாஹ் (ரஹ்) அவர்களின் "ஹுஜ்ஜத்துல்லாஹில் பாலிகா"
என்ற நூலில் பலதரப்பட்ட இஸ்திலாஹாத் (புழக்க வார்த்தைகள்) குறிப்பிட்டு
இருப்பார்கள் அதற்கு ஷாஹ் வலியுல்லாஹ் (ரஹ்) அவர்கள் தனியானதொரு பொருள்
கொள்வார்கள்.அந்நூலை படிக்கும் போது அன்னார் புழங்கும் பொருளை பயன்படுத்த
வேண்டும்.

6) ஒரு நூலின் ஆசிரியர் தனது நூலில் உள்ள வார்த்தைகளுக்கு அவர்சொல்கிற விளக்கத்தை ஏற்கவேண்டும்.மேலும் குர்ஆன் ஹதீஸின் திறமையின்றி
நேரடியாக ஆய்வு செய்ய முற்பட்டால் அல்லது அறிவிப்பாளரின் விமர்சனங்களைப்
பற்றிய விதிகளை அறியாமல் படிக்க ஆரம்பித்தால் என்ன விளைவு ஏற்படும்? என்பது
அறிவுடையோருக்கு தெளிவானது. இந்த விஷயங்களை நன்றாக மனதில் பதிய வைத்துக்
கொள்ளவேண்டும்.

சிராதே முஸ்தகீமை படிப்பதற்கு முன்பாக இந்த விஷயங்களை
கவனத்தில் கொள்ள வேண்டும்

.முதல் பதில்:

இந்நூலானது தஸவ்வுஃப் சம்பந்தப்பட்ட
தலைப்பில் எழுதப்பட்டுள்ளது என்பதை ஆரம்பத்திலேயே நாம்
தெளிவுப்படுத்திவிட்டோம்.இதனால் அதில் பயன்படுத்தும் வார்த்தைக்குரிய
விளக்கத்தை

1)தஸவ்வுஃப்பிற்கு ஏற்ப செய்ய வேண்டும்.

2) நூலை எழுதியவரின்
விளக்கம் கிடைக்கப்பெற்றால் அதனை ஏற்க வேண்டும்

3)ஆசிரியரின் நம்பிக்கைக்குரிய
மாணவரின் விளக்கங்கள் பெறப்பட்டால் அதற்குரிய விளக்கமாக கருதவேண்டும்.

 இனி
விமர்சனம் எழுந்த வாசகம் ﺻﺮﻑ ﮨﻤﺖ ஸய்யித் அஹ்மத் ஷஹீத் (ரஹ்) அவர்கள்
கூறுகிறார்கள்:

ஷைகு மற்றும் அவரைப் போன்ற கண்ணியம் செலுத்த தகுதியானவர்கள்
அது நபி (ஸல்) அவர்களாக இருந்தாலும் சரி "ஸர்ஃபே) ஒரு நூலின் ஆசிரியர் தனது நூலில் உள்ள வார்த்தைகளுக்கு அவர்
சொல்கிற விளக்கத்தை ஏற்கவேண்டும்.மேலும் குர்ஆன் ஹதீஸின் திறமையின்றி
நேரடியாக ஆய்வு செய்ய முற்பட்டால் அல்லது அறிவிப்பாளரின் விமர்சனங்களைப்
பற்றிய விதிகளை அறியாமல் படிக்க ஆரம்பித்தால் என்ன விளைவு ஏற்படும்? என்பது
அறிவுடையோருக்கு தெளிவானது. இந்த விஷயங்களை நன்றாக மனதில் பதிய வைத்துக்
கொள்ளவேண்டும்.


ஷைகு மற்றும் அவரைப் போன்ற கண்ணியம் செலுத்த தகுதியானவர்கள்
அது நபி (ஸல்) அவர்களாக இருந்தாலும் சரி "ஸர்ஃபேஹிம்மத்" என்ற அமலானது
கெட்டது.தனது மாடு,கழுதையின் சிந்தனையில் மூழ்குவதை விட. இந்த "ஸர்ஃபே
ஹிம்மத்" என்ற வார்த்தையின் பொருள் என்ன?
இதற்கான விளக்கத்தை அரபி மொழிக்கு ஏற்ப செய்யப்படுமா? ஒரு போதும் இல்லை.

இந்த
"ஹிம்மத்" என்ற வார்த்தைக்கு தஸவ்வுஃப்பிற்கு ஏற்ப பொருள் செய்யவேண்டும்.இந்த
ஹிம்மத் என்ற வார்த்தைக்கு இரண்டுவிதமான வரைவிலக்கணம் உள்ளது.முதல்
வரைவிலக்கணத்தில் இரண்டுவிதமான பொருள் உள்ளது.ஆக மொத்தம் மூன்றுவிதமான பொருள்
உள்ளது.

 ﻗﺎﺿﯽ ﻣﺤﻤﺪ ﺍﻋﻠﯽ ﺗﮭﺎﻧﻮﯼ இவர் ஸய்யித் அஹ்மத் (ரஹ்) முன்னால் ஹிஜ்ரி 1191
ம் ஆண்டு வாழ்ந்தவர்கள்.அவரின் பிரபல்யமான நூல் "கஷ்ஃபு இஸ்திலாஹில்
ஃபுனூனில்" ஹிம்மத் என்ற வார்த்தைக்குரிய வரைவிலக்கணம்

ﻓﻰ ﺍﻟﻠﻐﺔ ﺍﻟﻘﺼﺪ ﺍﻟﻰ
ﻭﺟﻮﺩ ﺍﻟﺸﻴﺊ ﺍﻭﻻ ﻭﺟﻮﺩﻩ ﺍﻋﻢ ﻣﻦ ﺍﻥ ﻳﻜﻮﻥ ﺍﻟﻰ ﺷﺮﻳﻒ ﺍﻭ ﺧﺴﻴﺲ ﻭﺧﺼﺖ ﻓﻰ ﺍﻟﻌﺮﻑ ﺑﺤﻴﺎﺯﺓ
ﺍﻟﻤﺮﺍﺗﺐ ﺍﻟﻌﻠﻴﺔ ﻭ ﻗﺪ ﺗﻄﻠﻖ ﻋﻠﻰ ﺍﻟﺤﺎﻟﺔ ﺍﻟﺘﻲ ﺗﻘﺘﻀﻰ ﺫﻟﻚ ﺍﻟﻘﺼﺪ ﺍﻭ ﺍﻟﺤﻴﺎﺯﺓ

அகராதி
ரீதியான அர்த்தம் ஏதேனும் பொருளின் பக்கம் நாடுவது பொதுவில் அந்தப் பொருளானது
மேலாக இருந்தாலும் சரி கீழாக இருந்தாலும் சரி (அதே சமயம்) இந்த வார்த்தையானது
புழக்கத்தில் குறிப்பாக்கப்படும் உயர்ந்த தகுதிகள்,அந்தஸ்துகளை பெறுவதற்கும்
மொழியப்படும்.அந்த சமயத்தில் (அந்தப் பொருளின் பக்கம்) நாடுதல் அல்லது பெறுதலை
தேடும்.
(கஷ்ஃபு இஸ்திலாஹில் ஃபுனூன்) 

இதில் இரண்டு விஷயங்களை விளங்கலாம்
ஹிம்மத் என்ற அமலானது இரண்டு விஷயங்களில் நிகழும் நாடுதல் அல்லது
பெற்றுக்கொள்ளுதல் இதனை எளிதாக கூறுவதானால் பலனை அடைவித்தல் அல்லது பலனை
பெறுதல் ஏனெனில் பெறுதல் (ﺣﺎﺻﻞ ﮐﺮﻧﺎ )

என்பதும் பலன் பெறுதல் (ﺍﺳﺘﻔﺎﺩﮦ)
என்பதும் ஏறக்குறைய ஒன்றுதான்.நாடுதல் என்ற பொதுவான வார்த்தையில் பலனை
அடையச்செய்தல்,பலன் பெறுதல் இரண்டும் பெறப்படும்.

முக்கிய குறிப்பு:

நாடுதல்,பலன் பெறுதல் என்பதன் விளக்கமானது ஷைகிடமிருந்து முரீதானவர் "பைஜ்"
எனும் ஆன்மீக வளர்ச்சியை பெறுவதாகும். ஷாஹ் இஸ்மாயில் ஷஹீத் ரஹ்
அவர்கள்,ஸய்யித் அஹ்மத் ஷஹீத் ரஹ் அவர்களின் குறிப்பிடத்தக்க முரீதும்
மாணவருமாவார்கள்.

ஷாஹ் ஷஹீத் ரஹ் அவர்கள் ﻋﺒﻘﺎﺕ ல் ஹிம்மத் என்பதற்கு
கொடுக்கும் வரைவிலக்கணத்தின் கருத்து ஹிம்மத் என்பது குறிப்பிடப்பட்ட அமலின்
பெயராகும்.அதில் மற்றவர்களுக்கு பலனை அடையச்செய்வதற்காக அல்லது தனது பலனை
பெறுவதற்காக சிந்தனையை (ﺗﻮﺟﮧ ) ஓர்மைப்படுத்துதலாகும். இங்கு ﺗﻮﺟﮧ என்பதின்
கருத்தானது அகராதி அடிப்படையில் அல்ல.மாறாக சூபியாக்களின்புழக்கத்தின்
அடிப்படையில் பொருள்கொள்ள வேண்டும். (ஹிம்மத் என்பதற்கு இதே விளக்கத்தைதான்
பரலேவிகளால் ஏற்கப்படும் அறிஞர் மியான்ஜி முஹம்மத் ரஹ் அவர்கள் ஷர்கபூர்
ஷரீஃபிலும் மற்ற ஆதாரங்களின் மூலமும் நிரூபணமாகியுள்ளது.)

முஃப்தி அஹ்மத் யார்
நயீம் இவரை பரலேவிகள் ஹகீமுல் உம்மத் என்பதாக அழைக்கின்றனர்.இந்த அறிஞர் ﺗﻮﺟﮧ
என்பதற்கு கொடுக்கும் விளக்கமாவது தவஜ்ஜுஹ் என்பதின் பொருளானது சிந்தனை
செய்தல் தனது உள்ளத்தை வேறு ஒருவரின் பக்கம் செலுத்துதல் ஸுபியாக்களின்
உள்ளமானது பரிபூரணமான ஒளியால் நிறைந்து இருக்கும்.உயர்ந்த ஜோதியில்
குறிப்பிடத்தக்க பிரகாசம் இருக்கும். உதாரணமாக சூரியனின் ஒளிக்கதிர்கள்
அசுத்தமான பூமியை காயவைத்து தூய்மைப்படுத்துகிறது. அதில் விவசாயமும்
செய்யப்படும். நட்சத்திரத்தின் ஒளியால் பழங்களில் சுவையும்,நிறமும்
கிடைக்கப்பெறுகிறது. இவ்வாறுதான் ஷைகின் உள்ளத்தின் பிரகாசமானது முரீதின்
உள்ளத்தில் தூய்மையும்,ஈமானிய சக்தியையும்,மற்ற அனைத்தையும்
உருவாக்குகிறது.( ﺭﺳﺎﺋﻞ ﻧﻌﯿﻤﯿﮧ )



பரலேவிய அறிஞர் கூறுகிறார் :

ஆஜராகும் நாட்களில் சில சமயம் உள்ளத்தின் மூலம்,
சில சமயம் உடலின் மூலம், சில சமயம் கைகளின் மூலம், சில சமயம் முராகபா நிலையில்
தவஜ்ஜுஹ் செய்வார்கள் (ﺍﻧﻘﻼﺏ ﺣﻘﯿﻘﺖ )

ஷாஹ் குலாம் அலி நக்ஷபந்தி ரஹ்
உள்ளத்திலே "ஹிம்மத்" என்ற அமலின் மூலமாகவும் "தவஜ்ஜுஹ்" மூலமாகவும்
பெரியோரிடமிருந்து தேட்டமுள்ளவருக்கு பைஜ் எனும் ஆன்மீக வளர்ச்சியானது
அந்நபரின் உள்ளத்தில் உண்டாகும்.உணர்வு பிறக்கும் ( ﻣﮑﺎﺗﯿﺐ ﻏﻼﻡ ﻋﻠﯽ )

ஆக இதன்
மூலமும் ஹிம்மத் மற்றும் தவஜ்ஜுஹ் என்பதற்கு எண்ணம்,சிந்தனை, நினைப்பது என்ற
அகராதி ரீதியான பொருள் அறவே இல்லை என்பதை விளங்க முடிகிறது.

ஷாஹ் வலியுல்லாஹ்
(ரஹ்) அவர்கள் தனது "கவ்ல் ஜமீல்" என்ற நூலில் ஹிம்மத் என்பதற்கு விளக்கம்
கூறுகிறார்கள்

ﺍﻟﻬﻤﺔ ﻋﺒﺎﺭﺓ ﻋﻦ ﺍﺟﺘﻤﺎﻉ ﺍﻟﺨﺎﻃﺮ ﻭ ﺗﺎﻛﺪ ﺍﻟﻌﺰﻳﻤﺔ ﺑﺼﻮﺭﺓ ﺍﻟﺘﻤﻨﻰ ﻭ
ﺍﻟﻄﺎﻟﺐ ﺑﺤﻴﺚ ﻻ ﻳﺨﻄﺮ ﻓﻰ ﺍﻟﻘﻠﺐ ﺧﺎﻃﺮ ﺳﻮﻯ ﻫﺬﺍ ﺍﻟﻤﺮﺍﺩ ﻛﻄﻠﺐ ﺍﻟﻌﻄﺸﺎﻥ ﺍﻟﻤﺎﺀ

ஹிம்மத்
என்பது ஆசையோடும் தேட்டத்தோடும் உள்ளத்தில் நினைவு முழுவதையும்
செலுத்தி,மனஓர்மை ஏற்படுத்தி தனது முழு கவனம் வேறு எதன்பாலும் செல்லாமல்,எதன்
பக்கம் தேடப்படுகிறதோ (அதன் பக்கம் மட்டும் முழு சிந்தனை இருக்க வேண்டும்)
கடின தாகம் கொண்டவன் தனது கவனம் முழுவதையும் நீரின் பால் செலுத்துவது
போல் சில சமயங்களில் இந்த ஹிம்மத் என்ற அமலின் மூலம் ஷைகிடம் அல்லது
நபியிடம் தொடர்பு ஏற்படுத்திகொள்ளமுடியும்.அந்த நேரத்தில் உள்ளத்தில் உள்ள
நல்ல சிந்தனை,
தீய சிந்தனை முற்றிலும் நீக்கி அவர்களின் பக்கமே ஓர்மைப்படுத்தப்படும்.
எந்தளவிற்கெனில் அந்த நேரத்தில் அல்லாஹ்வின் சிந்தனை கூட இருக்காது.



இதற்கு
சூஃபியாக்களின் புழக்கத்தில் ﺷﻐﻞ ﺭﺍﺑﻄﮧ என்று சொல்லப்படும்.

 இதனைப் பற்றி
ஷாஹ்வலியுல்லாஹ் (ரஹ்) கூறுகிறார்கள் தனது உள்ளத்தை தனது குருவின்
பிரியத்தை தவிர மற்ற எல்லா சிந்தனையை விட்டு விட்டு அவரின் பக்கம் கவனத்தை
திருப்பி பெருகிவரும் பைஜ் எனப்படும் ஆன்மீக வளர்ச்சியை எதிர்பார்த்து
இருக்கவேண்டும். கண்களை மூடியவாறு அல்லது கண்களை திறந்தவாறு எப்பொழுது
ஷைகிடமிருந்து பைஜ் வருமோ அதனை தன்னுள் முழு ஓர்மையுடன் ஏற்றுக்கொண்டு அதனை
கண்காணித்துக் கொள்ள வேண்டும்.அவரது ஷைகு அந்த நேரத்தில் இல்லையென்றாலும்
அவரின் உருவத்தை ஆசையோடும் கண்ணியத்தோடும் தனது கண்களுக்கு முன்னால்
சிந்தனையில் கொண்டு வரவேண்டும்.அந்த உருவத்தின் சிந்தனையே பைஜ்ஜாக
அடையும்.

மேலும் அவரின் தொடர்பும் அடையும். இதன் மூலம் நாம் தெளிவாக
புரியலாம் ﺷﻐﻞ ﺭﺍﺑﻄﮧஎன்பது அந்த நேரத்தில் உள்ளத்தை அனைத்து சிந்தனைகளை
விட்டு நீக்கி மனதை ஓர்மைப்படுத்தி முழு கவனமும் அவரின் பக்கம் செலுத்த
வேண்டும்.மேலும் அந்த நேரத்தில் மற்ற எதனின் சிந்தனையும் உள்ளத்தில் நுழைந்து
விடக்கூடாது. எந்தளவிற்கெனில் சுவனம்,நரகம்,அர்ஷ்,குர்ஸி,லவ்ஹுல்
மஹ்ஃபூல்,எழுதுகோல், வானவர்கள் அது மட்டுமின்றி அல்லாஹ்வின் சிந்தனை கூட
வரக்கூடாது.

இதன் பிறகு சிராதே முஸ்தகீமில் அதனின் கெடுதிகள் கூறப்பட்டுள்ளது. நாம் இந்த
சமயத்தில் இந்த அமலானது கூடுமா? கூடாதா? என்ற ஆய்விற்கு செல்லவில்லை.சில
சூபியாக்களின் தரீகாவிலே இந்த அமலானது உள்ளது.அதே சமயத்தில் அவர்களிடத்தில்
கூட இந்த அமலானது தொழுகையில் செயல்படுத்த அனுமதி இல்லை.இது தொழுகை அல்லாத
நேரங்களில் நிறைவேற்றப்பட வேண்டும் என்கின்றனர். இந்த அனைத்து விஷயங்களையும்
நன்றாக மனதில் வைத்த பிறகு இனி அசலான வாசகத்தின் பால் பார்ப்போம்!

தனது ஷைக்
அல்லது யாராவது பெரியார் நாயகமேயானாலும் சரி! அவர்களின் பால் "ஷர்ஃபே ஹிம்மத்"
அதாவது எல்லாவற்றையும் விட்டு தனது கவனத்தை திருப்பி அவர்களின் பால் கவனம்
செலுத்துவதானது மாடு கழுதை எண்ணத்தில் மூழ்குவதை விட கெட்டதாகும்.ஏனெனில்
பெரியார்களின் பால் "ஸர்ஃபே ஹிம்மத்" அமலில் ஈடுபடுவதானது அது அவர்களைப்
பற்றிய கண்ணியமும் மேன்மையும் கொண்ட எண்ணத்தோடு உள்ளத்தில் இடம் பிடிக்கும்.

இது போன்ற சிந்தனையானது தொழுகையின் நோக்கத்திற்கு முரணானது. வணக்கம் என்பது
நாம் அல்லாஹ்வை பார்ப்பது போன்று வணங்குவது அல்லது அல்லாஹ் நம்மை பார்க்கிறான்
என்பதாக எண்ணி வணங்குவதாகும்.ஸர்ஃபே ஹிம்மத் என்ற அமலின் மூலம் அல்லாஹ்வை
மறந்துவிடும் நிலை உண்டாகிவிடும்.அது மட்டுமின்றி அல்லாஹ் அல்லாத ஒரு பொருளை
தொழுகையில் கண்ணியத்தோடும், மரியாதையோடும் நினைத்து அந்த நிலையில்
மூழ்கிவிடுவதென்பது சில சமயம் இணைவைப்பில் கொண்டு சென்று விடும்.ஆனால் மற்ற
உலகப் பொருட்களின் எண்ணம் வருமானால் உள்ளத்துக்கு அந்தப் பொருட்களுடன்
மேற்சொன்ன அளவு தொடர்பு ஏற்படமுடியாது ஏனெனில் அவை அருவருப்பானவை அல்லது
தரக்குறைவானவை எனவே மனிதன் தானே அவற்றை விட்டு மனதைத் தூய்மைப்படுத்திக் கொள்ள
முற்படுவான். ஆக சிராத்தே முஸ்தகீமில் எழுதப்பட்டுள்ள அசல் விஷயமானது ஞாபகம்
வருவது என்பதைப் பற்றி இங்கு அறவே பேசப்படவில்லை. அடுத்து அதில் கண்ணியம்
அளிப்பதானது நாடப்படும் போது அது இணைவைப்பின் பால் கொண்டு சென்று விடும்
என்பதற்கான ஆதாரங்களை இனி காண்போம்!

புகாரியில் வருகிற ஹதீஸ்

ﺍﻥ ﺍﻭﻟﺌﻚ ﺍﺫﺍ ﻛﺎﻥ ﻓﻴﻬﻢ ﺍﻟﺮﺟﻞ ﺍﻟﺼﺎﻟﺢ ﻓﻤﺎﺕ ﺑﻨﻮﺍ ﻋﻠﻰ
ﻗﺒﺮﻩ ﻣﺴﺠﺪﺍ ﻭ ﺻﻮﺭﻭﺍ ﻓﻴﻪ ﺗﻠﻚ ﺍﻟﺼﻮﺭ ﻓﺄﻭﻟﺌﻚ ﺷﺮﺍﺭ ﻟﺨﻠﻖ ﻋﻨﺪ ﺍﻟﻠﻪ ﻳﻮﻡ ﺍﻟﻘﻴﺎﻣﺔ .

கருத்து: ஆயிஷா (ரலி) அவர்கள்கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் நோய்வாய்ப்பட்டிருந்த போது,
அவர்களின் மனைவியரில் ஒருவர்
அபிசீனியாவில் தாம் பார்த்த மாரியா
எனப்படும் ஒரு கிறித்தவ ஆலயத்தைப் பற்றிக்
கூறினார். அப்போது (ஏற்கெனவே)
அபிசீனியா சென்றிருந்த உம்முசலமா
(ரலி), உம்முஹபீபா (ரலி) ஆகிய இருவரும்
அதன் அழகையும் அதிலுள்ள ஓவியங்களையும்
பற்றி வர்ணிக்கலாயினர். உடனே தலையை
உயர்த்திய நபி (ஸல்) அவர்கள், "அவர்களில்
நல்லவர் ஒருவர் இறந்து விட்டால் அவரது
அடக்கத் தலத்தின் மீது பள்ளிவாயில் எழுப்பி
அதில் அவரது உருவப் படங்களை வரைந்து
வைப்பார்கள்; அல்லாஹ்விடத்தில்
படைப்பினங்களில் மிக மோசமானவர்கள்
இவர்களே!'' என்று கூறினார்கள்.
நூல்: புகாரி (1341)

புகாரி விரிவுரையில் இப்னு பத்தால் கூறுகிறார்கள்:

அவர்கள் கெட்டவர்கள் என்பதற்கான காரணம் யஹுதிகள் நபிமார்களின் மண்ணறைகளை
வணக்கஸ்தலமாக ஆக்கினார்கள். வணக்கத்தின் மூலம் மண்ணறைகளை நாடினார்கள்.எந்த
சந்தேகமின்றி அல்லாஹ், இஸ்லாம் மற்றும் ஓரிறைக் கொள்கை மூலமாக அனைத்து
வணங்கப்படுபவைகளை அழித்துவிட்டான். இணையில்லாத ஏக இறைவன் ஒருவனையே வணங்கும்படி
கட்டளையிட்டுள்ளான். கப்ருகளை ஸஜ்தா செய்யும்
இடமாக ஆக்குவது, உருவப்படங்களை
வரைவதை தடுத்துள்ளான்.

 முஹ்லப் கூறுகிறார்கள்:

நபி (ஸல்) அவர்கள் இணைவைப்பின்
காரணிகளை களைந்தெறிவதற்காக, அவர்களின் சிலை வணக்கத்தின் அருகில் செல்வதையும்,
கப்ருகளையும் உருவப்படங்களையும் வணங்குவதற்குரியதாக ஆக்குவதையும்
தடுத்துள்ளான். அதாவது யஹுதிகள் அவர்களின் நபிமார்களின் கப்ருகளை
வணக்கஸ்தலமாக ஆக்கிவிட்டனர்.மண்ணறைவாசிகளின் வணக்கத்தை நாடுகின்றனர்.இந்த
செயலானது வணங்கும் நேரத்திலாகும்.இதனால் இந்த செயலும் இபாதத்தின் ஒரு
பகுதியாகி விடுகிறது.நபிமார்களை வணங்குவது என்பதானது சரியில்லை.இதன் மூலம்
நமக்கு தெளிவாகிறது.யஹுதிகள் தொழுகையின் மூலம் நபிமார்களின் கப்ரின் பக்கம்
நாடினார்கள்.நபிமார்களின் மீதுள்ள மேன்மை, கண்ணியத்தினால் இந்த செயலை
செய்துள்ளனர்.கப்ருக்கு செய்யும் கண்ணியமானது உண்மையில் மண்ணறை வாசிக்கும்
கண்ணியமாகும்.யஹுதிகளின் இந்த செயலைதான் இப்னு பத்தால் ரஹ் இணைவைப்பு
என்கின்றனர்.

அதைப்  போலதான் "ஹிம்மத்" என்ற அமலானது தொழுகைக்கு மத்தியில் நிகழும் போது
அதிலும் நபி (ஸல்)அவர்களின் அல்லது ஷைகின் கண்ணியமும் மேன்மையும்
நாடப்படுகிறது.அந்த கண்ணியப்படுத்துவதானது நோக்கமாக ஆக்கப்படும் போது ஷிர்கின்
பால் இழுத்து சென்று விடுகிறது.

ஹாபிள் இப்னு ரஜப் ஹன்பலி (ரஹ்) "பத்ஹுல்
பாரியில்" இதே ஹதீஸின் விரிவுரையில் குறிப்பிட்டுள்ளார்கள் கப்ருக்கு கண்ணியம்
செய்வதால் கப்ருக்கு அருகில் தொழுகையானது தடுக்கப்பட்டுள்ளது. (பத்ஹீல் பாரி)

கப்ருக்கு அருகில் சங்கையுடன் தொழுவதினால் தடுக்கப்பட்டுள்ளது. எதார்தத்தில்
கப்ரின் மண்ணிற்கு சங்கை செய்வதில்லை மாறாக கப்ரில் இருப்பவருக்குதான் சங்கை
செய்யப்படுகிறது. கப்ருவாசிக்கு செய்யப்படும் சங்கையானது தொழுகையில்
நாடப்படுவதாக இருப்பதால் கூடாது எனும் போது ஹிம்மத் என்ற அமலின் போதும்
தொழுகையில் இந்த சங்கையானது நாடப்படும் போது ஷிர்க் ஆகாதா?

அதனை தொடர்ந்து மேலும் ப்னு ரஜப் ஹம்பலி ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்:

கப்ருகளை முன்னோக்கி தொழுவது தடுக்கப்பட்டதின் காரணத்தை மார்க்க அறிஞர்கள்
விளக்குகிறார்கள் கப்ருகளை முன்னோக்கி தொழுவதானது தடுக்கப்பட்டதின் காரணம்
இணைவைப்பு நிகழும் காரணிகளை அடைப்பதற்காகும். ஏனெனில் இணைவைப்பின்
அடிப்படையானது கப்ருகளை கண்ணியப்படுத்துவதுதான் (பத்ஹுல் பாரி)

இதன் மூலம்
காரணம் நமக்கு தெளிவாக விளங்குகிறது.கப்ருகளை சங்கை செய்வதன் காரணமாகதான்
தொழுவதானது தடுக்கப்பட்டுள்ளது.எவரும்மண்ணிற்கு சங்கை
செய்வதில்லை.மண்ணறைவாசிக்குதான் சங்கை அமைந்துள்ளது.மண்ணறைவாசிக்கு தொழுகை
நிலையில் சங்கை செய்வதானது இணைவைப்பின் பக்கம் இழுத்து சென்றுவிடும் என்பதானது
தெளிவாக உள்ளது. தொழுகையின் நேரத்தில் அதாவது வணக்கத்தின் சமயத்தில் இந்த
சங்கையானது நோக்கமாக ஆகிவிடும் போது இணைவைப்பாகிவிடும்.

ஹாபிள் இப்னு ஹஜர்
(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள் :

சந்தேகமின்றி நபி (ஸல்) அவர்கள் கப்ருகளில்
தொழுகையை விட்டும் தடுத்ததன் காரணமாவது சபிக்கப்பட்டவர்கள் (யஹுதிகள்,
கிறிஸ்துவர்கள்) அவர்களது நபிமார்களின் கப்ரில் செய்ததைப் போன்று தனது
கப்ருடன் இதுபோன்ற செயலானது நடைபெற்றுவிடலாம் என்ற அபாயத்தினாலாகும். ஆனாலும்
இதில் மனநிறைவு ஏற்பட்டுவிட்டால் (ஷிர்க் ஏற்படாது) பிரச்சனையில்லை. எவர்கள்
இணைவைப்பின் வழிகளை தடுப்பதற்குதான் தடைவிதிக்கப்பட்டுள்ளது எனவும் இந்த
தடையானது பொதுவான தடை என்றும் சொல்பவர்களின் கூற்றே வலுவானதாக
உள்ளது.(பத்ஹுல்பாரி)

ஆக தொழுகை தடை செய்யப்பட்ட காரணம் இணைவைப்பின் வழிகளை
தடுப்பதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ளது.
உம்ததுல் காரியில்

 ﺑﺎﺏ ﻫﻞ ﺗﻨﺒﺶ ﻗﺒﻮﺭ ﻣﺸﺮﻛﻲ ﺍﻟﺠﺎﻫﻠﻴﺔ

அல்லாமா பத்ருத்தீன் அய்னி
(ரஹ்) கூறுகிறார்கள் பைளாவி (ரஹ்) கூறுகிறார்கள் யஹுதிகள்,நஸராக்கள்:

நபிமார்களின் கப்ருகளை சங்கை செய்யும் வகையில் அவர்களின் தகுதிக்கு ஏற்ப ஸஜ்தா
செய்கிறார்கள்.அவர்களின் கப்ருகளை கிப்லாவாக ஆக்கி தொழுகையில் அவர்களின்
பக்கம் முன்னோக்குகின்றனர். அவர்களின் கப்ருகளை சிலைகளாக ஆக்கி
கொண்டனர்.

இதனால் நபி (ஸல்) அவர்கள் தடுத்தார்கள்.அதைப் போன்று செய்வதானது
முஸ்லிம்களுக்கும் தடுக்கப்பட்டுள்ளது. (உம்ததுல் காரி)

இந்த ஆதாரமானது நமது
கருத்தை மேலும் வலுப்படுத்துகிறது இந்த கருத்தின் மூலம் பின்வரும் விஷயங்களை
விளங்க முடிகிறது.

(1)நபி ஸல் அவர்கள் யஹுதிகளை,நஸராக்களை சபித்தார்கள்
ஏனெனில் அவர்கள் நபிமார்களின் கப்ருகளை சங்கை செய்யும் விஷயத்தில் எல்லைமீறி
விட்டனர்.மேலும் அவர்களின் கப்ருகளுக்கு ஸஜ்தா செய்தனர்.

(2)தொழுகையிலே
கிப்லாவாக அவர்களை ஆக்கி கொண்டனர்.

(3)தொழுகையிலே அவர்களின் பக்கம்
நோக்கத்துடன் நாட்டத்துடன் முன்னோக்கினர்

(4)முஸ்லிம்கள் இவ்வாறு சங்கை
செய்வதானது அனுமதியில்லை. தடுக்கப்பட்டுள்ளது. இதைப் போன்றே தொழுகையிலே
வணக்கம் என்ற வகையில் அல்லது நாடப்படுதல் என்ற வகையில் சங்கையுடன்
முன்னோக்குவதானது ஹிம்மத் என்ற அமலில் பரிபூரணமாக பெறப்படுகிறது.

எனவே அந்த
அமலானதும் இணைவைப்பின் பக்கம் இழுத்து சென்று விடும் என்பதில் எந்தவித
சந்தேகமுமில்லை.

ஸிராத்தே முஸ்தகீமில் கூறப்பட்ட கருத்தை உம்ததுல் காரியில்
வலுவூட்டப்படுகிறது.

ஜுன்தப் பின் அப்தில்லாஹ் (ரலி)
அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் இறப்பதற்கு ஐந்து
நாட்களுக்கு முன் "உங்களில் ஒருவர் என்
(தேவைகளுக்காக நான் அணுகும்) உற்ற
தோழராக இருப்பதிலிருந்து (விலகி) நான்
அல்லாஹ்வையே சார்ந்திருக்கிறேன்.
ஏனெனில், உயர்வுக்குரிய அல்லாஹ்
இப்ராஹீம் (அலை) அவர்களை (தன்) உற்ற
தோழராக ஆக்கிக்கொண்டதைப் போன்று
என்னையும் (தன்) உற்ற தோழனாக
ஆக்கிக்கொண்டான். நான் என்
சமுதாயத்தாரில் ஒருவரை என் உற்ற தோழராக
ஆக்கிக்கொள்வதாயிருந்தால்
அபூபக்ர் அவர்களையே நான் என் உற்ற
தோழராக ஆக்கிக்கொண்டிருப்பேன்.
அறிந்துகொள்ளுங்கள்: உங்களுக்கு
முன்னிருந்த (சமுதாயத்த)வர்கள் தங்களுடைய
நபிமார்கள் மற்றும் சான்றோர்களின் அடக்கத்
தலங்களை வழிபாட்டுத்தலங்களாக ஆக்கிக்
கொண்டார்கள். எச்சரிக்கை! நீங்கள்
அடக்கத் தலங்களை வழிபாட்டுத்தலங்களாக
ஆக்கிவிடாதீர்கள். அவ்வாறு செய்ய
வேண்டாம் என்று உங்களுக்கு நான் தடை
விதிக்கிறேன்" என்று கூறுவதை நான் கேட்டேன்.

இந்த ஹதீஸ் இரு
அறிவிப்பாளர்தொடர்களில்
வந்துள்ளது. இந்த ஹதீஸானது முஸ்லிம் கிரந்தத்தில் இடம்பெற்றுள்ளது.

இந்த
ஹதீஸின் விளக்கவுரையில்
இமாம் நவவி ரஹ் குறிப்பிட்டுள்ளார்கள் நபி ஸல் அவர்கள்:

தனது கப்ரு அல்லது மற்றவர்களின் கப்ரானது மஸ்ஜிதாக ஆக்குவதையும்,தனக்கு சங்கை
செய்யும் விஷயத்தில் வரம்பு மீறுவதால் குழப்பம் ஏற்பட்டுவிடும் என்பதால்
தடுத்தார்கள்.சில சமயங்களில் குப்ரு வரை கொண்டு சென்று விடும்.

நஸாயி என்ற
நூலில் இடம்பெற்றுள்ள ஹதீஸ் ஆயிஷா(ரலி)
அவர்களும் அப்துல்லாஹ் இப்னு
அப்பாஸ்(ரலி) அவர்களும்
அறிவித்தார்கள்:

இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு
(நோய் அதிகமாம்) இறப்பு
நெருங்கிவிட்டபோது அவர்கள்
தங்களின் கறுப்புக் கம்பளி
ஆடையைத் தம் முகத்தின் மீது
போட்டுக் கொள்ளலானார்கள்.
அவர்களுக்கு மூச்சுத் திணறல்
ஏற்படும்போது தம் முகத்திலிருந்து
அதை அகற்றிவிடுவார்கள். அவர்கள்
அதே நிலையில் இருந்துகொண்டே
'யூதர்களின் மீதும் கிறிஸ்தவர்களின்
மீதும் அல்லாஹ்வின் சாபம்
உண்டாகட்டும். அவர்கள் தம்
இறைத்தூதர்களின் அடக்கத் தலங்களை
வணக்கத் தலங்களாக ஆக்கினார்கள்'
என்று அவர்கள் செய்ததை(ப் போன்று
நீங்களும் செய்துவிடக் கூடாது என
அதைக்) குறித்து எச்சரித்தார்கள்.நஸாயின் இந்த ஹதீஸின் ஓரக்குறிப்பில் அல்லாமா சிந்தி ரஹ் குறிப்பிட்டுள்ளார்கள் நபியின் நோக்கமானது தனது உம்மத்தை
எச்சரிக்கை செய்வதாகும்.

உம்மத்தானது தனது கப்ரில் இவ்வாறு நடந்து
கொள்ளக்கூடாது. யஹுதிகள்,நஸரானிகள் நபிமார்களின் கப்ருகளை மஸ்ஜிதாக
ஆக்கினார்கள். அவர்களுக்கு சங்கை செய்தல் என்ற வகையில் ஸஜ்தா
செய்தார்கள்.தொழுகையில் அவர்களின் பக்கம் முன்னோக்கி அதனை கிப்லாவாக ஆக்கி
கொண்டார்கள். (ஹாஷியா அல்லாமா ஸிந்தி)

 எப்பொழுது கப்ரானது கிப்லாவாக
ஆக்கப்படுகிறது என்றால் தொழுகையாளியின் நோக்கமும் மற்றும் ஓர்முக
சிந்தனையால்  கப்ரு அல்லது கப்ருவாசிக்கு எல்லைமீறி சங்கை செய்யும்
நேரத்திலாகும்.

மிஷ்காத் ஷரீஃபில் இடம்பெற்றுள்ள ஹதீஸ்  ஆயிஷா(ரலி) அறிவித்தார்:

நபி(ஸல்)அவர்கள் மரண நோயுற்றிருந்தபோது,
'யூதர்களையும் கிறித்தவர்களையும் அல்லாஹ்
சபிப்பானாக! அவர்கள் தங்களின்
நபிமார்களது மண்ணறைகளை
வணக்கஸ்தலங்களாக ஆக்கிவிட்டார்கள்'
எனக் கூறினார்கள். ஸய்யித் ஷரீஃப் ஜுர்ஜானி அவர்கள் மிஷ்காதின் ஓரக்குறிப்பில்
குறிப்பிட்டுள்ளார்கள் நபி (ஸல்)அவர்கள் தான் பிரிந்து போவதை
அறிந்திருந்தார்கள்.

யஹுதீ,நஸரானிகள் அவர்களது நபிமார்களின் கப்ருக்கு சங்கை
செய்தார்கள் இதனால் சபிக்கப்பட்டார்கள்.இதைப் போன்று தனது கப்ரிலும் சங்கை
செய்ய ஆரம்பித்துவிடுவார்கள் என்ற அபாயமானது முன்னால் வந்தது.இந்த
எச்சரிக்கையானது தனது சமூகமானது அவ்வாறு நடந்து கொள்ளக்கூடாது என்பதற்காக தான்.

காளி நாஸிருத்தீன் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

 யஹுதி,நஸாரா தனது நபிமார்களின்
கப்ருகளுக்கு ஸஜ்தா செய்தார்கள்.அதனை கிப்லாவாக ஆக்கியிருந்தனர். தொழுகையிலே
அவர்களின் பக்கம் முன்னோக்கினார்கள். எந்த சந்தேகமின்றி யஹுதிகள்,நஸாரா
கப்ருகளை சிலைகளாக ஆக்கிவிட்டனர்.எனவே இதனால் நபி (ஸல்) அவர்கள் சபித்தார்கள்.
முஸ்லிம்களையும் தடுத்தார்கள்.

மிஷ்காதின் விரிவுரையான மிர்காதில் அல்லாமா
முல்லா அலி காரி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள் :

யஹுதி,நஸாரா சபிக்கப்பட்டதின்
காரணம் ஒன்று நபிமார்களின் கப்ருகளுக்கு சங்கை செய்யும் வகையில் ஸஜ்தா செய்து
கொண்டிருந்தார்கள்.இது வெளிப்படையான இணைவைப்பாகும்.அல்லது இது காரணமாக
இருக்கிறது.நபிமார்கள் அடக்கம் செய்யப்பட்ட இடத்திலே தொழுகையை அல்லாஹ்விற்காக
தொழுது கொண்டிருந்தார்கள். தொழுகையின் சமயத்திலே அவர்களின் கப்ருகளின்
இடத்தில் ஸஜ்தா செய்து கொண்டிருந்தார்கள். அதனை முன்னோக்கினார்கள். அவைகளை
பார்த்தவாறு அவர்களின் பக்கம் அல்லாஹ்வை வணங்கியவாறுநபிமார்களுக்கு சங்கை
செய்வதில் எல்லை மீறி நடந்து கொண்டார்கள்.இது மறைமுகமான இணைவைப்பாகும்.
ஏனெனில் படைப்புளுக்கு இவ்விதமாக சங்கை செய்யும் படி ஏவப்படவில்லை.

இதனால் தான்
நபி ஸல் அவர்கள் தனது சமூகத்தை இதிலிருந்து தடுத்தார்கள்.அல்லது யஹுதிகளின்
செயலுக்கு ஒப்பானதின் காரணமாக அல்லது மறைமுகமான இணைவைப்பின் காரணமாக என நமது
இமாம்களில் உள்ள சில விரிவுரையாளர்கள் கூறியுள்ளனர்.
(மிர்காத்)

ஆக
நபிமார்களின் பக்கம் நாட்டத்துடன் இவ்விதமாக வணக்கத்திற்கு மத்தியில் சங்கை
செய்வதானது மறைமுகமான இணைவைப்பாகும் என்பதை புரிய முடிகிறது.

இதே விஷயம்தான்
சிராதே முஸ்தகீமிலே ஸய்யித் அஹ்மத் (ரஹ்) கூறினார்கள் :

ஹிம்மத் என்ற அமலிலே
சங்கை செய்வதானது நோக்கம் என்ற வகையில் அமையும் போது இணைவைப்பின் பால் இழுத்து
சென்றுவிடும். இது அல்லாமல் இன்னும் பல்வேறு நூல்களில் ஆதாரங்களின் மூலம்
நிருவப்படுகிறது.

அடுத்து பரலேவிகள் இப்படி ஒரு கேள்வியை எழுப்பலாம் ஹதீஸ்
விரிவுரை நூல்களில் வணக்கத்தின் பேரில் முன்னோக்குவது என்பதாக
கூறப்பட்டுள்ளது.நாம் நபி ஸல் அவர்களின் பக்கம் வணக்கம் என்ற வகையில்
முன்னோக்குவதில்லை எனும் போது பிறகு எப்படி இணைவைப்பாக மாறும் இந்த
கேள்விற்குரிய பதிலானது வணக்கம் என்பது எதற்கு சொல்லப்படும் என்பதை அறிந்தாலே
இதற்கு விடை கிடைத்துவிடும்.



மக்தூம் அலி (ரஹ் )

ﺍﻟﻌﺒﺎﺩﺓ ﺗﺬﻟﻞ ﻟﻐﻴﺮ ﻋﻦ ﺍﺧﺘﻴﺎﺭ ﻟﻐﺎﻳﺔ ﺗﻌﻈﻴﻤﻪ

கருத்து: வணக்கம்
என்பது தனது விருப்பத்தின் பேரில் மற்றவருக்கு சங்கை செய்வதில் இறுதி எல்லை
அளவிற்கு தாழ்த்தி கொள்வதற்கு (பணிவதற்கு) சொல்லப்படும்.( ﺗﻔﺴﻴﺮ ﻣﻬﺎﺀﻡ )

இமாம் ராஜி (ரஹ்) அவர்கள்

ﺍﻥ ﺍﻟﻌﺒﺎﺩﺓ ﻋﺒﺎﺭﺓ ﻋﻦ ﻧﻬﺎﻳﺔ ﺍﻟﺘﻌﻈﻴﻢ

வணக்கத்தின்
பொருளானது சங்கை செய்வதில் இறுதி எல்லையாகும்.


 பரலேவிகள் ஷைகிற்கு
எந்தளவிற்கு சங்கை செய்கிறார்கள் என்பதை பார்ப்போம்!

அஃலா ஹள்ரத் தனது ஷைக்
மற்றும் வழிகாட்டுபவருக்கு இறுதி எல்லை அளவிற்கு சங்கை செய்து
கொண்டிருந்தார்.பரலேவி மஸ்லகின் பிரபல்யமான அறிஞர் நயீமுத்தீன் முராதாபாதி
"கஸாயினுல் இர்பான்" என்ற நூலில் எழுதுகிறார்:

வணக்கம் என்பது இறுதி எல்லை
(எட்டும்) அளவிற்கு சங்கை செய்வதாகும்.அடியான் தனது அடிமைத்தனத்தை மற்றும்
வணக்கத்திற்குரியவனை ஏற்றுக்கொண்டு,நம்பிக்கையின் பெயரில் செயல் புரிவதாகும்.
(கஸாயினுல் இர்பாஃன்)

ஆக வணக்கத்தின் அசலானது சங்கை செய்வதில் இறுதி
எல்லையாகும்.

இதனால்தான் ஸய்யித் அஹ்மத் ஷஹீத் (ரஹ்) அவர்கள்,அல்லாஹ்
அல்லாதவர்களுக்கு சங்கை தனது விருப்பத்தின் பேரில் மற்றவருக்கு சங்கை செய்வதில் இறுதி எல்லை
அளவிற்கு தாழ்த்தி கொள்வதற்கு (பணிவதற்கு) சொல்லப்படும்.( ﺗﻔﺴﻴﺮ ﻣﻬﺎﺀﻡ )

இதனால்தான் ஸய்யித் அஹ்மத் ஷஹீத் (ரஹ்) அவர்கள்,அல்லாஹ்
அல்லாதவர்களுக்கு சங்கைசெய்வதானது தொழுகையில் நோக்கத்துடன் அமைந்திருப்பதை
தடுத்துள்ளார்கள்.

 பரலேவி அறிஞர் ரிளாகானின் வாதத்தை வைத்தே பதிலடி:

நபிமார்களின் கப்ருகளில் தொழுவது சம்பந்தமான ஆய்வை முன்வைக்கிறார் அதனின்
சுருக்கமான கருத்தானது தொழுகையில் கப்ருக்கு செய்யும் சங்கையானது அல்லது
கஃபாவிற்கு பகரமாக தொழுகையிலே கப்ரை முன்னோக்குவதானது ஹராமாகும்.அல்லாஹ்
பாதுகாப்பானாக! வணக்கம் என்ற வகையில் இருந்தால் தெளிவான இணைவைப்பும்
குப்ருமாகும். கஃபாவிற்கு முன்னால் இந்த நிய்யத்துடன் தொழுவதானது கஃபாவின்
புறத்தில் இல்லை மாறாக கஃபாவிற்கு ஸஜ்தா செய்கிறார் அல்லது கஃபாவை சங்கை
செய்யும் விதத்தில் தொழுகிறார் இவ்வாறு தொழுவதானது சந்தேகமின்றி
ஹராமாகும்.கஃபாவை வணங்குவதாக இருந்தால் இஸ்லாம் பறிபோய்விடும்.இதனால்
கஃபாவிற்கு குறையல்ல. மாறாக நிய்யத்தின் குறையாகும்.(குல்லிய்யாத் மகாதீபே
அஹ்மத்)

பரலேவிகளிடத்தில் ஒரு கேள்வி:

நபி (ஸல்) அவர்களுக்கு சங்கை செய்வதை
ஹராம் என்கிறார்.தொழுகையில் ஓர்முகச்சிந்தனையுடன் நபி (ஸல்) அவர்களை
முன்னோக்குவதானது ஹராம் என்கிறார்.தொழுகையிலே வணக்கம் என்ற விதத்தில்
முன்னோக்குவது தெளிவான இணைவைப்பு என்கிறார் இதற்காக ரிளாகானிற்கு எதிராக
தீர்ப்பு அளிக்க தயாரா?

பரலேவிய மெளலவி உமர் அஜ்ரவி கூறுகிறார்:

 ﺑﺎﻟﻤﺆﻣﻨﻴﻦ
ﺭﺅﻭﻑ ﻭ ﺭﺣﻴﻢ
என தொழுகையில் இந்த ஆயத்தை ஓதும் பொழுது நபி (ஸல்) அவர்களின்
நினைவானது உள்ளத்தில் வந்தால் குர்ஆனை மறுப்பதாகுமா? இல்லையா? (மிக்யாஸ்
ஹனஃபிய்யத்)

 பரலேவிய அறிஞர் உமர் வைத்த வாதமானது தேவ்பந்த் உலமாக்களுக்கு
மட்டும் எதிரானதல்ல மாறாக ரிளாகான் பரலேவிக்கும் எதிரான வாதமாகும் ரிளாகான்
பரலேவியின் கருத்துப்படி:

தொழுகையிலே கப்ரு வாசிக்கு சங்கை செய்வதானது ஹராம்.
அல்லது தொழுகையானது கஃபாவிற்கு சங்கை செய்வதாக இருந்தால் எந்த வித
சந்தேகமின்றி ஹராமாகும்.இதன் மூலம் பரலேவிய அறிஞர் உமர் வைத்த வாதமானது
ரிளாகானின் மீது திரும்புகிறது.எவ்வாறெனில் நாம் பரலேவிய அறிஞர் உமர்
அவர்களிடம் வினா எழுப்புகிறோம்!

ﺑﺎﻟﻤﺆﻣﻨﻴﻦ ﺭﺅﻭﻑ ﻭ ﺭﺣﻴﻢ என்ற வசனத்தை
தொழுகையில் நபி ஸல் அவர்களின் கப்ருக்கு அருகில் ஓதும் பொழுது நபி (ஸல்)
அவர்களின் சிந்தனை வரும்.சங்கை செய்வதும் ஏற்படும். இதனை ரிளாகான் பரலேவி
ஹராம் என்கிறார் இந்த சமயத்தில் குர்ஆனை மறுப்பதாகுமா? ஆகாதா ? ஆக இதற்கு
பரலேவிகள் என்ன பதில் அளிப்பார்களோ அதுதான் நமது பதிலாகும்.மெளலவி ரிளாகான்
பரலேவி குல்லிய்யாத் மகாதீபில் கூறியுள்ளதானது(மேலே தெளிவாக கூறப்பட்டுள்ளது)

கஃபாவிற்கு சங்கை செய்யும் விதத்தில் தொழுவதானது ஹராம் என்கிறார் இதனை
முன்வைத்து சில கேள்விகள்:

 1) கஃபாவிற்கு முன்னால் ஒரு அடியான் நின்றால் சங்கை
செய்யும் எண்ணம் ஏற்படாதா?

2) நபி (ஸல்) அவர்களின் ரவ்லாவிற்கு முன்னாால்
நின்று தொழுதால் சங்கைசெய்தல் என்பதானது ஏற்படாதா?

3) கஃபாவை பற்றி அல்லாஹ்
கூறும் வசனங்களை ஓதும் பொழுது தொழுகையாளியின் சிந்தனையானது கஃபாவின் பக்கம்
செல்லாதா?

4) நபி ஸல் அவர்களின் மண்ணறைக்கு முன்பாக தொழுகும் போது நபி (ஸல்)
அவர்கள் குறித்து கூறப்படும் வசனங்களை தொழுகையாளி தொழுகையில் ஓதும் பொழுது நபி
ஸல் அவர்களுக்கு சங்கை செய்யும் எண்ணம் ஏற்படாதா இதனால் தொழுபவரின்
தொழுகையானது கூடுமா? கூடாதா? இந்த கேள்விக்கு பரலேவிகளின் பதில் என்னவோ
அதுதான் நமது பதிலுமாகும்.

நபி ஸல் அவர்களுடன் மாட்டை ஒப்பிட்டு சொல்வதானது
அவமரியாதை இல்லையா?

பதில்: ஏதேனும் விஷயத்தை நல்ல முறையில் விளங்க வைப்பதற்காக
கண்ணியமிக்க நபருடன் அருவருப்பானதை ஒப்பிடுவதானது நடைமுறையில் உள்ளதாகும்.

பரலேவிய அறிஞர் பீர் கரம் ஷாஹ் கூறுகிறார்கள்:

 சரியானதை விளக்கி சொல்வதற்காக
ஏதேனும் அருவருப்பான பொருளுடன் உதாரணத்தை கூறுவதானது அல்லாஹ்வின்
வழிமுறையாகும்.(ஆதாரம் யாளிஉல் குர்ஆன்)


தப்ஸீர் ஹஸனாத் பரலேவியர்களின்
பிரபல்யமான நூல் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது:

 எதைக்குறித்து உதாரணம்
சொல்லப்படுகிறது அந்த விஷயத்தை நல்ல முறையில் விளங்கி கொள்வதற்காகும்.ஏனெனில்
நோக்கமானது அந்த உதாரணத்தின் மூலம்தான் முழுமை பெறும்.உதாரணம் கூறப்படுவதானது
அற்பமாக இருந்தாலும் அதனை நல்லது என்பதாகதான் சொல்லப்படும் (ஆதாரம் தப்ஸீரே
ஹஸனாத்)

ﺍﺗﺨﺬﻭﺍ ﺍﺣﺒﺎﺭﻫﻢ ﻭ ﺭﻫﺒﺎﻧﻬﻢ ﺍﺭﺑﺎﺑﺎ ﻣﻦ ﺩﻭﻥ ﺍﻟﻠﻪ ﻭ ﺍﻟﻤﺴﻴﺢ ﺑﻦ ﻣﺮﻳﻢ

கருத்து: அவர்கள் அல்லாஹ்வையன்றி தமது மதபோதகர்களையும்,பாதிரிகளையும்,மர்யமின்
மகன் மஸீஹையும் கடவுளாக்கினர். ( சூரா அத்தவ்பா 31)

இந்த ஆயத்திலே
யஹுதி,நஸராக்கள் பாதிகரிகளுடன் மத போதகர்களுடன் ஈஸா (அலை) அவர்கள்
குறிப்பிடப்படுகிறார்கள்.இதனை முன்வைத்து எவரேனும் ஒருவர் மதபோதகர்களுக்கு
உள்ள அந்தஸ்துதான் ஈஸா (அலை) அவர்களுக்கும் உள்ளது என்று கூறினால்
ஏற்கமுடியுமா? அல்லாஹ் இவ்வாறு ஒப்பிட்டு கூறுவதானது அவமரியாதையா? அல்லாஹ்
பாதுகாப்பானாக!

 இவ்வாறு ஒப்பிட்டு கூறுவதற்குரிய காரணம் என்ன? இங்கு சட்டத்தை
விளக்குவதுதான் நோக்கமாகும்.அவர்கள், இறைவனாக மதபோதகர்களையும்,
பாதிரிமார்களையும்,ஈஸா அலைஅவர்களையும் ஆக்கிகொண்டனர்.மிஷ்காத் ஷரீபில் உள்ள
ஹதீஸ்

ﺍﻥ ﻗﻠﻮﺏ ﺑﻨﻰ ﺁﺩﻡ ﮐﻠﻬﺎ ﺑﻴﻦ ﺍﺻﺒﻌﻴﻦ ﻣﻦ ﺍﺻﺎﺑﻊ ﺍﻟﺮﺣﻤﺎﻥ ﻛﻘﻠﺐ ﻭﺍﺣﺪﺓ

கருத்து:
ஆதமின் மகனின் (சந்ததியினர்)உள்ளமானது அல்லாஹ்வின் விரல்களில்
இருவிரல்களுக்கு மத்தியில் ஒரே உள்ளத்தைப் போன்று உள்ளது. (ஆதாரம் மிஷ்காத்
ஷரீப்)

இதனின் விளக்கவுரையில் முல்லா அலி காரி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்
ﻳﺸﻤﻞ ﺍﻻﻧﺒﻴﺎﺀ ﻭ ﺍﻻﻭﻟﻴﺎﺀ ﻭ ﺍﻟﻔﺠﺮﺓ ﻣﻦ ﺍﻻﺷﻘﻴﺎﺀ .

 கருத்து:
நபிமார்கள்,நல்லோர்கள்,பாவிகள், துர்பாக்கியவான்களான காபிர்கள் அனைவரும் இதில்
உள்ளடங்குவார்கள். இங்கு நபிமார்கள்,நல்லோர்களுடன் காபிர்களை
கூறப்பட்டுள்ளதானது அவமரியாதையா? (ஆதாரம்:மிஷ்காத் ஷரீபின் விரிவுரை
மிர்காத்)

ஷைக் அப்துல் குத்தூஸ் கங்கோஹி அவர்கள் கூறுகிறார்கள்

 ﻟﻘﺪ ﺧﻠﻘﻨﺎ
ﺍﻻﻧﺴﺎﻥ ﻓﯽ ﮐﺒﺪ ﺍﯾﮟ ﺟﺎ ﺍﻭﻟﯿﺎﺀ ﺍﻧﺒﯿﺎﺀ ﺧﻮﺍﺹ ﻭ ﻋﻮﺍﻡ ﺑﺮﺍﺑﺮﺍﻧﺪ .

கருத்து :மனிதனை
நாம் கடுமையானவனாக படைத்தோம் இதிலே வலிமார்கள்,நபிமார்கள்,
குறிப்பானவர்கள்,சாமானியர்கள் அனைவரும் சரிசமமானவர்கள் (ஆதாரம் மக்தூபாத்)

பரலேவிய அறிஞர் முஃப்தி யார்கான் கூறுகிறார்:
 மூஸா அலை அவர்களின் கைத்தடியானது
பாம்பின் வடிவத்திலே உருமாறி அனைத்தையும் விழுங்கியது.இவ்வாறே நமது நபி ஸல்
அவர்கள் நூராக மனிதராக இருக்கிறார்கள். ஆதாரம் ( ﻣﺮﺁﺓ ﺍﻟﻤﻨﺎﺟﻊ )

அண்ணல் நபி
(ஸல்) அவர்களை மூஸா (அலை) அவர்களின் கைத்தடியுடன் ஒப்பிடுவது அவமரியாதை
இல்லையா? முஃப்தியார் கான் சூரா முஃமீனின் 97 ஆயத்தின் விளக்கம்: ரப் என்பது
பிரார்த்தனையாகும்.(ﻗﻞ ) நபியே சொல்லுங்கள் என்பதிலே அண்ணலாரின் நாவானது
சுட்டிகாட்டப்படுகிறது.அதாவது பிரியத்திற்குரியவரே! துஆவானது நாம் கூறியது
நாவானது உன்னுடையதாக இருக்கிறது துப்பாக்கியிலிருந்து தோட்டாக்கள்
சீறிப்பாய்வது போன்று (ஆதாரம் நூருல் இர்பான்)


இங்கு அண்ணலாருடன் தோட்டாவை
ஒப்பிட்டு கூறுவதானது அவமரியாதை...

0 comments:

Post a Comment

 

makkah live

Sample Text

madina live