22 Jan 2016

பரேல்விகளின் குற்றச்சாட்டுக்கு தக்க பதில் :1

குற்றச்சாட்டு :1

ஹஜ்ரத் மௌலானா கலீல் அஹ்மத் அம்பேட்டவி (ரஹ்) அவர்கள் மீது!

" ரஸூலுல்லாஹி ﷺ அவர்களை விட இப்லீஸுக்கு அதிக இல்மு இருக்கிறது!" மௌலானா அவர்கள் பராஹீனெ காதிஆ என்ற தமது நூலில் இப்படி எழுதி இருக்கிறார்களாம்.

பதில் :

இந்தக் குற்றச்சாட்டு எவ்வவு அர்த்தமற்றது என்பதைப் பாருங்கள் : மௌலானா அவர்கள் உயிரோடு இருக்கும் போதே இதைப் பற்றி அவர்களிடம் கேட்க்கப்பட்டு பதில் சொல்லி இருக்கிறார்கள். அவர்களது பதிலை இங்கு நாம் சுருக்கமாக எழுதிகிறோம்.

மௌலவி அஹ்மத் ரஜாகான் சாஹிப் பரேலவி அவர்கள் என்மீது சாட்டியிருக்கும் இந்தக் குற்றச்சாட்டு முற்றிலும் அர்த்தமற்றது- அடிப்படையற்றது!  இப்லீஸ் என்ன?

 படைப்பினங்களது என்ற ஒன்றுக்காவது நாயகம் ﷺ அவர்களைவிட அதிக இல்மு உண்டு என்று கருதுபவனை நானும் எனது ஆசிரியப் பெருந்தகைகளும் ' காபிர்- முர்தத் - மஸ்ஊன் என்றே நம்புகிறோம்.

(அல்முஹன்னத் 18,19)

ஆதாரம்:
السؤال: أ ترون أن إبليس اللعين أعلم من سيد الكائنات عليه السلام وأوسع علما منه مطلقا؟ و هل كتبتم ذلك في تصنيف ما؟ وبم تحكمون على من اعتقد ذلك؟
الجواب: قد سبق منا تحرير هذه المسألة: أن النبي عليه السلام أعلم الخلق على الإطلاق بالعلوم و الحكم و الأسرار و غيرها من ملكوت الآفاق، و نتيقن أن من قال: ‘إن فلانا أعلم من النبي عليه السلام’ فقد كفر وقد أفتى مشايخنا بتكفير من قال: ‘إن إبليس أعلم من النبي عليه السلام’، فكيف يمكن أن توجد هذه المسألة في تأليف ما من كتبنا؟ غير أن غيبوبة بعض الحوادث الجزئية الحقيرة عن النبي عليه السلام لعدم التفاته إليه لا تورث نقصا ما في أعلميته عليه السلام بعدما ثبت أنه أعلم الخلق بالعلوم الشريفة اللائقة بمنصبه الأعلى، كما لا يورث الاطلاع على أكثر تلك الحوادث الحقيرة لشدة التفات إبليس إليها شرفاً وكمالاً علمياً فيه، فإنه ليس عليها مدار الفضل و الكمال، ومن ههنا لا يصح أن يقال: ‘إن إبليس أعلم من سيدنا رسول الله صلى الله عليه و سلم’، كما لا يصح أن يقال لصبي علم بعض الجزئيات: ‘إنه أعلم من عالم متبحر محقق في العلوم والفنون الذي غابت عنه تلك الجزئيات.’ ولقد تلونا عليك قصة الهدهد مع سليمان على نبينا وعليه السلام وقوله: ‘إني أحطت بما لم تحط به.’ ودواوين الحديث ودفاتر التفسير مشحونة بنظائرها المتكاثرة المشتهرة بين الأنام… ومبتدعة ديارنا يثبتون للذات الشريفة النبوية عليه ألف ألف تحية وسلام جميع علوم الأسافل الأراذل والأفاضل الأكابر قائلين: ‘إنه عليه السلام لما كان أفضل الخلق كافة فلا بد أن يحتوي على علومهم جميعها كل جزئي جزئي وكلي كلي’، ونحن أنكرنا إثبات هذا الأمر بهذا القياس الفاسد بغير نص من النصوص المعتدة بها، ألا ترى أن كل مؤمن أفضل و أشرف من إبليس فيلزم على هذا القياس أن يكون كل شخص من آحاد الأمة حاويا على علوم إبليس، ويلزم على ذلك أن يكون سليمان عليه السلام عالما بما علمه الهدهد …و اللوازم باطلة بأسرها كما هو المشاهد. وهذا خلاصة ما قلناه في البراهين القاطعة لعروق الأغبياء المارقين القاصمة لأعناق الدجالة المفترين، فلم يكن بحثنا فيه إلا عن بعض الجزئيات المستحدثة، ومن أجل ذلك أتينا فيه بلفظ الإشارة حتى تدل أن المقصود بالنفي و الإثبات هنالك تلك الجزئيات لا غير، لكن المفسدين يحرفون الكلام ولا يخافون محاسبة الملك العلام، وإنا جازمون أن من قال: ‘إن فلانا أعلم من النبي عليه السلام’ فهو كافر كما صرح به غير واحد من علمائنا الكرام، ومن افترى علينا بغير ما ذكرناه فعليه البرهان خائفا عن مناقشة الملك الديان و الله على ما نقول وكيل
இம்மாதிரியான எந்தக் கொள்கையும் ' பராஹீனெ காதிஆ" என்ற எனது நூலில் பகிரங்கமாகவோ மறைத்தோ அறவே கூறப்படவில்லை. எனது வாழ்வு முழுவதிலும் இப்படிப்பட்ட ஒரு கற்பனைகூட எழுந்தது கிடையாது. ஷைத்தான் அல்ல எந்த அவ்லியாவிற்கும் கூட நாயகத்தின் இல்மைவிட அதிகம் என்பது ஒரு பக்கம் இருக்கட்டும்.  சமமான அளவு இல்மு கூட இல்லை என்றே நான் கூறுவேன்.

 நான் கூறியதாகக் குற்றம் சாட்டப் படும் இந்தக் கொள்கை " கலப்பற்ற குப்ராகும்" இதைப் பற்றிய கேள்விக் கணக்கு கியாமத் நாளில் நடக்கும். நான் இது இது விஷயத்தில் முற்றிலும் தூயவன்; இதற்க்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது. (இறைவனே சாட்சி அவனே போதும்) முஸ்லிம்கள் "பராஹீனெ காதிஆ" வை நன்றாக பார்க்கட்டும். விஷயம் தெளிவாக உள்ளது.

(கலீல் அஹ்மத்)

" அன்வாரெ - ஸாதிஆ" வின் உண்மை சொரூபம்!

"அன்வாரெ- ஸாதிஆ" வின் ஆசிரியர்  محمدعبدالسمیع  அந்நூலில் நாயகம் ﷺ அவர்கள் மீலாது மஜ்லிஸுகளில் ஹாஜிராகிறார்கள் என்று கூறி அதற்கு குர்ஆன் ஹதீஸிலிருந்து மேற்கோளோ, ஆதாரமோ காட்டாமல் பாருங்கள் மலகுல் மௌத் இஸ்ராஹீல் உயிர் வாங்க ஷைத்தான் மக்களை வழிகெடுக்க ஒரு நேரத்தில் பல இடங்களில் ஹாஜிராகிறார்கள். அப்படியானால் நபி ﷺ மட்டும் ஏன் அப்படி ஹாஜராக கூடாது?  என்று எழுதி தமது கொள்கையை உறுதிப் படுத்த முயன்றுள்ளார்.

ஆதாரம் :

இதைத் தட்டிக் கேட்கிறார்கள் மௌலானா கலீல் அஹ்மத் அம்பேட்டவி அவர்கள். "மலகுல் மவ்த்", ஷைத்தானுடைய விஷயம், குர்ஆன், ஹதீஸ் ஆகியவற்றின் பகிரங்கமான ஆதாரம் கொண்டு நிரூபிக்கப்பட்ட விஷயம். கொள்கை சம்பந்தப்பட்ட விஷயங்களுக்கு இப்படிப்பட்ட ஆதாரம் தேவை. ஆதாரமின்றி நாமாக ஒன்றைக் கொள்கை (அகீதா) என நம்புதல் அர்த்தமற்ற விஷயம். ஆகவே தங்கள் தங்கள் கூற்றுக்கு ஆதாரம் தேவை. இதைத்தான் இந்த உபகாரிகள் " ரஸூலுல்லாஹ் ﷺ அவர்களை விட இப்லீஸுக்கு அதிக இல்மு இருக்கிறது என்று மௌலானா அவர்கள் கூறியதாக விபரீத விளக்கம் கூறுகிறார்கள்.

இன்னொரு உண்மை!

வாசகர்கள் நன்றாக கவணித்துப் பார்க்கட்டும் - சொல்லட்டும்! ஆதாரமற்ற கொள்கை - கோட்பாடுகளை உருவாக்கலாமா? மௌலானா அவர்கள் இதை எழுதிய இடத்திலையே பின்வருமாறும் எழுதியுள்ளார்கள்.

" நமது இந்த வாதம் " இல்மெ தாத்தீ" ( இறைவன் அளிக்காமலையே பெற்ற இல்ம்) நாயகமவர்களுக்கு உண்டு என்று யாராவது கூறினால் இன்றைய பாமரர்கள் நம்புவது போல் - அது சம்பந்தப்பட்டதேயாகும்"

அன்றி அவர்களை அல்லாஹ்ஹுதஆலா அந்த இடத்துக்கு ஹாஜிராக்குகிறான் என்று நினைத்தால் அது ஷிர்க் ஆகாது. ஆனால் மார்க்கத்தின் சரியான ஆதாரமின்றி இப்படிக் கொள்கை கொள்வது சரியல்ல.

அஹ்லுஸ்ஸுன்னத் வல் ஜமாஅத்தின் கொள்கை இதுவே தான் என்பதை யார் மறுக்க முடியும்? இதுவே மௌலானா அவர்களது கொள்கையும்,  தேவ்பந்த் ஆலிம்கள் அனைவரது கொள்கையும் ஆகும். என்பதே மேலே கூறியது கொண்டு வாசகர்கள் உண்மையைப் பூரணமாக உணர்ந்துக் கொள்ள முடியும் என்றே நம்புகிறோம்.

0 comments:

Post a Comment

 

makkah live

Sample Text

madina live