25 Nov 2015

தப்லீக் ஜமாத் ஒரு அலஸல்
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாதுஹூ. ..

தப்லீக் ஜமாத் ..

தப்லீக் வேலை நபிமார்களின் வேலை. முஹம்மது நபி ( ஸல் ) அவர்களுக்கு பிறகு வேறு நபியில்லாததால் இந்த தப்லீக் நம்மீது பெறுப்பாக்கப்பட்டுள்ளது.(ஸஹாபாக்கள் உலகத்தில் எல்லா இடங்களிலும் சென்று தீனை பரப்பினார்கள்).

நபியவர்களும் ஸஹாபாக்களை உலகத்தில் எல்லா இடங்களிலும் தீனை பரப்புமாறு கட்டளையிட்டார்கள் என்பதை ஹதீஸில் காணமுடிகிறது.
தப்லீகை உருவாக்கியது இல்யாஸ் ( ரஹ் ) மௌலானா அவர்களா??

தப்லீகை உருவாக்கியது இல்யாஸ் ( ரஹ் ) அவர்கள் அல்ல ! மாறாக தப்லீகை புணர்நிர்மணம் செய்தது தான் இல்யாஸ் ( ரஹ் ) அவர்கள் ஆவார்கள்.

அதையே அவரின் புத்தகத்தில் எழுதுகிறார்:
       "பொது மக்கள் தான் இந்த உழைப்பிற்க்கு தப்லீக் என்று பெயர் வைத்துள்ளார்கள். இதற்கு நான் பெயர் வைத்திருப்பேயானால் " ஈமானி உழைப்பு "என பெயர் வைத்திருப்பேன்.

என்று மௌலானா இல்யாஸ் ( ரஹ் ) அவர்கள் தனது நூலிலே குறுப்பிடுகிறார்.

தப்லீகில் ஆறு நம்பர் ஏன்?

   சஹாபாகளின் தன்மைகள் எண்ணற்றவை அதாவது இஸ்லாமிய முறைப்படி வியாபாரம், சொல் ,செயல் இவை அனைத்தையும் இஸ்லாமிய முறைப்படி ஆக்கிக்கொண்டார்கள். இவைகளை உள்ளடக்கிய ஆறு நம்பரை தான் உலமாக்கள் வகுத்து தந்திருக்கிறார்கள் அவை.

தப்லீக் ஜமாஅத்தின் ஆறு நம்பர் என்று சொல்லப்படும் ஆறு அடிப்படை அம்சங்களும் வருமாறு :

1. கலிமா -லாயிலாஹ இல்லல்லாஹ் .
2. தொழுகை.
3. இல்மு – திக்ரு .
4. இக்ராம் -(பிற சகோதரர்களைக் கண்ணியப்படுத்தல் )
5. இக்லாஸ் - ( மனத்தூய்மை )
6.  தாவதே தப்லீக் . - (வக்தில் வெளிக்கிளம்பிச் செல்லல் )

இவையெல்லாம் சஹாபாகளிடத்தில் உள்ள தன்மைகள்.இவை ஒவ்வொன்றிர்க்கும் நோக்கம் ,சிறப்பு ,முயற்ச்சி என்று இருக்கும் அதாவது.

1.கலிமா - லாலாயிலாஹ இல்லல்லாஹ்.

இதன் நோக்கம்:
  வஸ்துகளின் மீதுள்ள நம்பிக்கையை எடுத்துவிட்டு அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைப்பது.

சிறப்பு:

٥٣- عَنْ رِفَاعَةَ الْجُهَنِيِّؓ قَالَ: قَالَ النَّبِيُّؐ : أَشْهَدُ عِنْدَ اللّٰهِ لاَيَمُوتُ عَبْدٌ يَشْهَدُ أَنْ لاٰ إِلٰهَ إِلاَّ اللّٰهُ وَأَنِّي رَسُولُ اللّٰهِؐ صِدْقاً مِّنْ قَلْبِهِ ثُمَّ يُسَدِّدُ إِلاَّ سَلَكَ فِي الْجَنَّةِ.

رواه احمد:٤/١٦


53.“வணக்கத்துக்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை; முஹம்மது (ஸல்) அவர்கள் அவனது தூதர் என்று எவர் உண்மையான உள்ளத்துடன் சாட்சி சொல்லித் தனது அமல்களையும் சரி செய்த நிலையில் மரணிப்பாரோ, அவர் நிச்சயம் சுவனம் செல்வார்’’ என நான் அல்லாஹ்விடம் சாட்சி சொல்கிறேன்’’ என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக ஹஜ்ரத் ரிஃபாஆ அல்ஜூஹனீ (ரலி) அறிவிக்கிறார்கள்.

(அஹ்மத்)

முயற்சி:
               ♡ இதனடிப்படையில் வாழ முயற்ச்சி செய்வதாகும்.

இது போல இந்த ஆறுக்கும் வரும்.இது குர்ஆன் ,ஹதீஸில் அடிப்பையில் இருந்தே.!

முஸ்லீம்களிடத்தில் உழைப்பு செய்யலாமா?

 செய்யலாம்....
சில நிகழ்ச்சிகள்

           அவற்றில் ஒரு சிலதை மட்டும் இங்கே குறிப்பிடுகிறேன் 'அள்லு'  'காரா'  வமிசத்தைச் சேர்ந்த சிலர் நபியவர்களின் சமூகத்தில் வந்து 'நாயகமே! எங்களது ஊரில் முஸ்லிம்கள் சிலர் இருக்கின்றார்கள் எங்களுக்கு மார்க்க விஷயங்களைப் போதிக்க இங்கிருந்து சிலரை அனுப்பி வையுங்கள்" என வேண்டிக் கொண்டார்கள் அதற்கிணங்க நபிகள் நாயகம்  (ஸல்) அவர்கள் ஆறு நபர்கள் கொண்ட ஜமாஅத் ஒன்றை அனுப்பி வைத்தார்கள் இந்த ஹதீஸை ஆஸிம் இப்னு உமர் (ரலி) அவர்கள் ரிவாயத் செய்துள்ளார்கள்


        ஹள்ரத் அபூமூஸா அஷ்அரி (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

நபிகள் நாயகம்  (ஸல்) அவர்கள் ஹள்ரத் முஆத் (ரலி) அவர்கள் அபூமூஸா  (ரலி) அவர்கள் ஆகிய இருவரையும் மார்க்க போதனைக்காக "எமன்" நாட்டிற்கு அனுப்பினார்கள்.

ஹள்ரத் அம்மாரிப்னு யாஸிர்  (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:

மார்க்க போதனைக்காக நபியவர்கள் கைஸ் வமிசத்தின் ஒரு சாரார் பக்கம் என்னை அனுப்பி வைத்தார்கள். நான் அங்குச் சென்ற போது. அம்மக்கள் காட்டு ஒட்டகை போல் வாழக் கண்டேன். அம்மக்களது வாழ்க்கையின் குறிக்கோளே ஒட்டகையாகவும், ஆடாகவும், இருக்கக் கண்டேன். எனவே நான் திரும்பி வந்து நபிகள் நாயகம்  (ஸல்) அவர்களிடம் அம்மக்களது குறிக்கோள் மறந்த வாழ்க்கை நிலையைப் பற்றிக் கூறினேன் அதைக் கேட்ட நபியவர்கள்

           அம்மார்! (அவர்களின் நிலை அப்படி யொன்றும் ஆச்சரியப் படத்தக்கதல்ல) இதை விட ஆச்சரியப்படத்தக்க ஒன்றை நான் கூறுகிறேன். கேளுங்கள்!  ஒரு சமுதாயம் தீனுடைய விஷயங்களை அறிந்திருக்கும். ஆனால் இதை விட மோசமான மறந்த நிலையில் வாழும" என்று கூறினார்கள்


        "ஹயாத்துஸ் ஸஹாபா" என்ற நூலில் இது போன்ற இன்னும் பல  ஹதீஸ்கள் எடுத்தெழுதப்பட்டுள்ளன .


3 ,40 நாட்கள், 4 மாதங்கள் என ஜமாதில் செல்வது?

வாழ்நாள் முழுவதும் ஜமாதில் செல்லலாம்!!

3 , 40 நாட்கள், 4 மாதங்கள் என ஜமாதில் செல்லலாம்.நபியவர்கள் தன் குடும்பத்தற்க்கு செய்யவேண்டிய கடமைகளையும் கூறியுள்ளார் கள். எனவே காலத்தையும் ,நேரத்தையும் ஒதுக்கி தான் ஜமாதில் செல்கிறார்கள்.

நன்மையை செய்தால் தீமை தானாக மறைந்துவிடும் என்று கூறலாமா??

இதை நாம் சொல்ல வில்லை அல்லாஹ் தனது திருமறையில் கூறுகிறான் :

 ﻭَﻟَﺎ ﺗَﺴْﺘَﻮِﻱ ﺍﻟْﺤَﺴَﻨَﺔُ ﻭَﻟَﺎ ﺍﻟﺴَّﻴِّﺌَﺔُ ۚ ﺍﺩْﻓَﻊْ ﺑِﺎﻟَّﺘِﻲ ﻫِﻲَ ﺃَﺣْﺴَﻦُ ﻓَﺈِﺫَﺍ ﺍﻟَّﺬِﻱ ﺑَﻴْﻨَﻚَ ﻭَﺑَﻴْﻨَﻪُ ﻋَﺪَﺍﻭَﺓٌ ﻛَﺄَﻧَّﻪُ ﻭَﻟِﻲٌّ ﺣَﻤِﻴﻢٌ

41:34. (நபியே!) நன்மையும் தீமையும் சமமாகமாட்டா. மிகச் சிறந்த நன்மையைக் கொண்டு நீர் தீமையைத் தடுப்பீராக! அப்போது உம்முடன் கடும் பகைமை கொண்டிருந்தவர்கூட உற்ற நண்பராய் ஆகிவிடுவதைக் காண்பீர்.        

  மற்ற வசணங்களில் அல்லாஹ் நன்மையை ஏவுங்கள்,தீமையை தடுங்கள் என்று கூறுகிறான்.ஆனால் இந்த வசணத்தில் கூறும்போது "நன்மையை கொண்டு தீமையை தடுப்பீராக" என்று கூறியுள்ளான்.

ஜமாத் செல்வது ஜிஹாதாகுமா?

தப்லீக் என்பது பள்ளிவாசலை மையமாக வைத்து செய்யப்படும் உழைப்பு. பள்ளியிலே தான் மார்க்க விஷயங்களையும் ஜமாதில் செல்பவர் கற்கவும் செய்கிறார்கள் .தன் சீர்திருத்தமும் அடைகிறார்கள் அல்லாஹ்வின் உதவியால். .

இதை பற்றி ஹதீஸின் கருத்துக்கள்.

ﺎﻝ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ " : ﻦ ﺟﺎﺀ ﻣﺴﺠﺪﻱ ﻫــــــﺬﺍ ﻟﻢ ﻳﺄﺗﻪ ﺇﻻ ﻟﺨﻴﺮ ﻳﺘﻌﻠﻤﻪ ﺃﻭ ﻳﻌﻠﻤﻪ ﻓﻬﻮ ﺑﻤﻨﺰﻟﺔ ﺍﻟﻤﺠﺎﻫﺪ ﻓﻲ ﺳﺒﻴﻞ ﺍﻟﻠﻪ. "

 ... ﺭﻭﺍﻩ ﺍﺑﻦ ﻣﺎﺟﺔ ‏‎ 

யார் கல்வி கற்றுக் கொள்ளும் நோக்கத்தில் அல்லது கற்று க்கொடுக்கும் நோக்கத்தில் என் பள்ளிக்கு வருவாரோ அவர் அல்லாஹ்வி ன் பாதையில் போர்செய்யும் போராளியின் அந்தஸ்து பெறுகிரார் என்றார்கள். அண்ணல் நபி(ஸல்) அவர்கள் அருளினார்கள்: எவர் கல்வியைத் தேடிப்புறப்பட்டாரோ அவர் அல்லாஹ்வின் பாதையில் உள்ளவர் ஆவார்., திரும்பி வரும் வரையில்!, (நூல்: திர்மிதி

அபூ ஹுரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: எவர் நமது இந்த மஸ்ஜிதுக்கு வந்து கல்வி கற்கிறாரோ அல்லது கற்றுக் கொடுக்கிறாரோ அவர் அல்லாஹ்வின் பாதையில் போர் புறிபவர் போன்றாவார் மேலும் கல்வி ஈடுபாடல்லாத வேறு நோக்கத்திற்காக வருபவருக்கு உவமை யாதெனில், ஒரு மனிதரைப் போன்றது., அவருக்கு ஒரு பொருள் பிடித்தமாக இருக்கிறது., ஆனால் அதை அடையும் பாக்கியம் அவருக்குக் கிடைக்கப் பெறவில்லை. (ஹாகிம்)

விளக்கம் தர அல்லாஹ் வே போதுமானவன்! 

0 comments:

Post a Comment

 

makkah live

Sample Text

madina live