15 Oct 2015

🌻தப்லீக் எதிப்பு🌻** காரணங்கள்.... விளக்கங்கள்.....

**🌻தப்லீக் எதிப்பு🌻**
காரணங்கள்.... விளக்கங்கள்.....


உலமாக்கள் யார் தெரியுமா...?!?

இவர்கள் மிஹ்ராபில் முஹல்லா வாசிகள்  தொழுகையின் பாரிய  பொருப்பை தம் தோளில் சுமப்பவர்கள்.
மாரக்க விளக்கத்திற்க்காக மிம்பரில் நா வரண்டு போகும் அளவு பேசுபவர்கள்.
மார்க்க கல்வி நிலைக்கவும் தழைக்கவும் தலைமுறை உருவாக்கத்திற்க்காக தேய்ந்த பாய் என்றும் பாராமல் அமர்ந்து பாடம் நடத்துபவர்கள்.
கதம் ஃபாத்திஹா, மௌலுது, சலாத்துன்னாரிய்யா, போன்றவற்றில் மக்களின் மார்க்கத்தேவை அறிந்து கலந்தும்
சுப, துக்க நிகழ்ச்சிகளில் பங்கு பெற்றும்  பொது மக்களுக்கு உருதுணையாக இருப்பவர்கள்.
இப்படியாக,  அவாமுன்னாஸுக்காக  தம்மை அர்ப்பனித்து
அவர்களை கட்டிக்காத்து வந்த உலமாக்களுக்கு
 தப்லீக் காரர்களை மட்டும் பிடிக்காமல் போனது ஏன்...?


சிலர் 'கொள்கை' னு சொன்னாங்க..
இல்லை, கொள்கையும் இல்லை ஒரு கொழுக்கட்டையும் இல்லை.
அசல் காரணம்...
மார்க்க விளக்கம், தேடல், குர்ஆன் படித்துக்கொடுப்பது ஆகியவற்றில் உலமாக்கள் தனிக்காட்டு ராஜாக்களாக வலம் வந்தது ஒரு காலம்.

  பிறகு தப்லீக் ஜமாத்தில் சென்றுவர மக்கள் மன்றத்தில் ஒரு மாற்றம் ஏற்பட்டது. அப்படி சென்று வந்தவர்கள்
ஒவ்வொரு முஸ்லிமும் அடிப்படையாக தெரிந்திருக்க வேண்டிய ஃபர்ளுகள் தெரிந்து கொண்டது மாத்தரம் அல்ல..
சுன்னத்தான நடைமுறைகளையும் பேண ஆரம்பித்து விட்டார்கள்.
அவாம் என்பது ஆலிமின் கைத்தடி அல்ல.
சராசரி முஸ்லிமாக இருந்தாலும் ஆலிம்களுக்கு ஈடாக அனைத்து கடமைகளும் பொருப்புகளும் தமக்கும் உண்டு என்ற விழிப்புணர்வு பெற்றார்கள்.
தாமே சுயமாக  செய்து கொள்ள வேண்டிய அமல்களையும் ஆலிம்களை சார்ந்திருக்க வேண்டியவற்றையும் பிரித்தறிந்தார்கள்.
முத்தாய்ப்பாக மார்க்க விஷயங்களை மக்கள் முன்னிலையில் பேச ஆரம்பித்தார்கள். மஸாயில்களை உலமாக்கள் மட்டுமே பேச வேண்டும், இது அல்லாதவற்றை பேசுவதற்கு ஆலிமாக இருக்க தேவையில்லை
என்ற நிலை எதார்த்தமாக விளங்கலானது.

இந்த காலகட்டத்தில்  தனிக்காட்டு ராஜாக்கள் தம் சிம்மாசனத்தில் ஒரு பகுதி பறிபோவதை உணர்ந்தார்கள்.

1) நம்மடைய பிரசங்க மேடையை பங்கு போட்டுக்கொண்டார்கள்.
2) தோற்றத்திலும், நடை உடை பாவனையிலும் சில சமயம் நம்மையே ஓவர்டேக் செய்கிறார்கள்.
3) குடும்பம், தொழில்களுக்கு மத்தியில் மார்கப்பணி செய்கிறார்கள்.
4) அதற்கு யாதொரு பகரமும் பெற்றுக்கொள்வதில்லை.. மட்டுமல்ல இதற்காக தமது பொருளாதாரத்தை ஈடுபடுத்துகிறார்கள்.
5) தம் (ايصال ثواب போன்ற) மார்க்க விஷயங்களில் ஆலிம்களை சார்ந்திருப்பதில்லை.
6) தாம் பல்லாண்டுகலாக செய்ய முடியாத அல்லது செய்ய நாடாத அல்லது செய்ய எண்ணிப்பாராத சில மாற்றம்,  மறுமலர்ச்சிகளை ஏற்படுத்தியது.
7) வடக்கை சார்ந்திருப்பது.

இப்படியாக (அவாம்களை) ஆளும் வர்க்கமாக இருந்த ஆலிம் வர்க்கத்தினர் தமக்கு பின்னடைவை உணர்ந்தார்கள்.

தமக்கு ஈடாக இந்த தப்லீக்காரர்களை பார்த்தது தான் இவர்கள் செய்த மாபெரும் சரித்திர தவறு.
மந்தைகளில் சிலது விவரமாக நடப்பது போல் பிரிந்து  சென்றால் ஆட்டிடையன் அவற்றை சாதுரியமாக மீண்டும் கட்டுக்குள் கொண்டு வந்துவிடுவான்.
அந்த பக்குவம் கூட ஆலிம்களிடத்தில் எப்படி இல்லாமல் போனது...?
தமக்கு பின்னால் நின்று தொழுகையில் தம்மை இமாமாக ஏறுக்கொண்ட சிலர் மேதாவித்தனமாக நடந்து கொள்வது போல் தெரிந்தால் உலமாக்களின் உன்னதத்தை அவர்கள் உளத்தில் பதிய வைத்து ஆலிம்கள் தம் ஹாகிமிய்யத்தை நிலைநாட்டியிருக்க வேணடும்.
அதை விடுத்து விலகி போகக்கூடியவர்களை விரட்டியடிப்பது அறிவுடமை அல்லவே.
நபிமார்களின் உண்மை வாரிஸு தாரர்கள் பல தரப்பட்ட மக்களை அரவனைத்து கட்டிக்காத்து ஒரு கொடையின் கீழ்  அனைவரையும் கொண்டு வர பார்ப்பார்கள்.
இந்த நடைமுறையை கையாளாமல் விட்டது உலமாக்கள் செய்த இரண்டாவது மாபெரும் சரித்திர தவறு.

அடுத்ததாக போனவர்கள் தொலைந்து  போகட்டும்...
இருப்பவர்களையாவது நமக்கு கீழாக நிலை படுத்திக்கொள்ளலாம் என்று நினைத்து அவர்கள் கையில் எடுத்த ஆயுதம் தான் 'கொள்கை சீர்கேடு'.
தப்லீக் ஜமாத்தினர் கொள்கை (அந்த பெரியார் அப்படி சொன்னார், இவர் இப்படி சொன்னார் என்று ) தப்லீக் கொள்கை நிலைபாடு அல்லாதவற்றை அவர்களுடன் இணைத்து கூறி (வஹ்ஹாபி பட்டம் கட்டி) மக்கள் மன்றத்தில் பீதி உண்டாக்கினார்கள்.
சிலவற்றுக்கு காலம் பதில் சொல்லும் என்பது போல இந்த பீதியுண்டாக்கும் வேலை பிசுபிசுத்து போனது.
காரணம், பல்லாண்டுகளாக தப்லீக் காரர்களின் பயான்கள், பிரசங்கங்கள், பிரச்சாரங்கள், உபதேசங்களை கேட்ட மற்றும் அவர்களின் நடை, உடை, பாவனைகளை பார்த்த பொதுமக்கள் அந்த (பெரியார்கள்) பேச்சுக்களுக்கும் தப்லீகிற்கும் சமந்தம் இல்லை (வஹ்ஹாபி என்பது அபான்டம்) என்றும்  விளங்கிக்கொண்டார்கள்.

இப்பொழுது அடுத்த (சரித்திர என்று சொல்ல முடியாது) தவறை செய்து கொண்டிருக்கிறார்கள்.
அதாவது நூற்றாண்டை நெருங்கிக்கொண்டிருக்கும் இந்த உழைப்பை
நேற்று (சில வருடங்கள் முன்) பிறந்த பீஜேக்காரன்களோடு தொடர்பு படுத்தி கொண்டிருக்கிறார்கள்.
இதே மூச்சாக சிலர் கங்கனம் கட்டி கோதாவில் இறங்கி பாடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
கியாம நாள் வரையும் (சாத்தியமில்லாத இணைப்பை)  ஒட்ட முடியாத உறவை ஒட்ட வைக்க பகீரத பிரயத்தனம் செய்து கொண்டிருக்கிறார்கள்.
நீரையும் நெருப்பையும் ஒன்று சேர்க்க
அறிவிலித்தனமாக முயற்சிக்கின்றார்கள்.
அதற்கு பதிலாக பிரயோஜமாக ஏதேனும் காரியத்தில் ஈடுபட்டால் காலமும் நேரமும் வீணாகுவதை தவிர்க்கலாம்.
ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணம் நடத்திய பலமொழிப் பருப்பு இங்கு வேகாது.
சுன்னத் ஜமாத் என்பது யாருடைய அப்பன் வீட்டு சொத்து இல்லை.
அதில் சேர்ப்பதர்கும் நீக்குவதற்கும் எந்த கொம்பனுக்கும் அதிகாரம் கொடுக்கப்படவில்லை.
எனவே இது போல கொள்கை, கொழுக்கட்டை என்ற  கருத்துரைகள் தேவையற்றது.

இங்கு ஒன்றை குறிப்பிட்டே ஆக வேண்டும்.
சில பல வருடங்கள் இந்த உழைப்பில் ஈடுபட்ட சிலர் தம்மை அல்லாமா போல கருத்திக்கொண்டு மேதாவித்தனமாக நடந்து கொள்கின்றார்கள். இது தவறு தான்.
இது தப்லீகில் கற்பிக்கப்படுவது அல்ல, மாறாக தனி மனித தவறுகள். அதற்கு தப்லீக் பொருப்பாகாது.
இதை வைத்து அந்த உழைப்பை யாரும் குறை கூறினால் அது அவர்களுடைய  குறைமதியின் வெளிப்பாடு.
العوام كالانعام
என்ற கூற்றை அறிந்த உலமாக்கள் தப்லீக் காரர்களின் தவறுகளை பூதக்கண்ணாடி வைத்து பெரிது படுத்துவதை விடுத்து இல்மின் மகத்துவம் அவர்கள் விளங்க வழிகோளலாம்.
அது தான் தற்காலத்தின் தேவையும் கூட.
அல்லாஹ் நம்முடை அமல்களை ஏற்று நம்மை பொருந்திக்கொள்வானாக..
     اللهم أحينا علي اهل السنة والجماعة وأمتنا علي الإيمان والتوبة.
           آمين. يا رب العالمين.

0 comments:

Post a Comment

 

makkah live

Sample Text

madina live