29 Aug 2015

பெண்கள் ஜமாதில் செல்லலாமா?

நாம் ஏற்க்கனவே சொன்னது போல ஜமாதில் செல்வது மார்க்க கல்வியை கற்று தன் சீர்திருத்தம் செய்ய வேண்டும் என்பதற்க்காகவே. தன் சீர்திருத்தம் என்பது ஆண்களுக்கு மட்டுமல்ல பெண்களுக்கும் கடமையே!

ஒருவன் சீர்திருத்தம் அடைய வேண்டுமென்று சொன்னால் அதற்க்கு மார்க்க கல்வி முக்கியமான ஒன்று.
அதையே இந்த ஹதீஸ் நமக்கு தெளிவு படுத்துகிறது.

"கல்வி கற்பது முஸ்லிமான ஆண், பெண் அனைவருக்கு ம் கட்டாயக் கடமையாகும் " (அல்- ஹதீஸ், புகாரி)

" ஒருவன் கல்வி கற்பதற்காக ப் புறப்பட்டு வெளிக்கிளம்பும் போது மலக்குகள் மண்ணில் உள்ளவர்கள், விண்ணிலுள்ளவர்கள் மட்டுமன்றி கடலிலுள்ள மீன்கள் உட்பட அவனுக்காக துஆ பிரார்த்தனை செய்கின்றன . (அபூதாவூ த் 3634)

ஒரு முறை ஒரு சஹாபிய பெண் நபி (ஸல் ) அவர்களிடம் வந்து எப்போதும் உங்களை சுற்றி ஆண்களே இருக்கிறார்கள் அதனால் எங்களால் உங்களை நெருங்கி வந்து மார்க்கத்தில் எங்களுக்கு தோன்றகூடிய சந்தேகத்தை கேட்க முடியவில்லை என சொன்னதும் நபி (ஸல் ) அவர்கள் அவர்களுக்கு என்று வாரத்தில் ஒரு நாளை ஒதுக்கினார்கள் என்பது ஹதீஸில் காணக்கிடைக்கிறது.
இன்னும்,
"மூன்று
மனிதர்களுக்கு(அல்லாஹ் விடத்தில்) இரண்டு விதக்கூலிகள் உண்டு.ஒருவர் வேதத்தையுடையவர்களில் உள்ளவர்.
இவர் தமது (சமூகத்திற்கு அனுப்பப்பட்ட) தூதரையும் முஹம்மதையும் நம்பியவர்.
மற்றொருவர் தமது இறைவனுக்குச் செய்யவேண்டிய கடமைகளையும் தமது
எஜமானனுக்குச் செய்யவேண்டிய கடமைகளையும் நிறைவேற்றும் அடிமை.
மூன்றாமவர் தம்மிடத்தில் உள்ள ஒரு அடிமைப் பெண்ணுக்கு ஒழுக்கப் பயிற்சி அளித்து,அந்தப் பயிற்சியை அழகுறச்செய்து,அவளுக்குக் கல்வியைக் கற்பித்து,அதை
அழகுறக் கற்றுத் தந்து பின்னர் அவளை அடிமையிலிருந்து விடுவித்து கொண்டவர்.
இம்மூவருக்கும் இரண்டுவிதக் கூலிகள் உண்டு''
என்று நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்:அபூமூஸா(ரலி)
நூல்:புகாரீ (97)

மேலும் அல்லாஹ் குர்ஆனில் கூறும் போது..

ﻭَﺍﻟْﻤُﺆْﻣِﻨُﻮﻥَ ﻭَﺍﻟْﻤُﺆْﻣِﻨَﺎﺕُ ﺑَﻌْﻀُﻬُﻢْ ﺃَﻭْﻟِﻴَﺎﺀُ ﺑَﻌْﺾٍ ۚ ﻳَﺄْﻣُﺮُﻭﻥَ ﺑِﺎﻟْﻤَﻌْﺮُﻭﻑِ ﻭَﻳَﻨْﻬَﻮْﻥَ ﻋَﻦِ ﺍﻟْﻤُﻨﻜَﺮِ ﻭَﻳُﻘِﻴﻤُﻮﻥَ ﺍﻟﺼَّﻠَﺎﺓَ ﻭَﻳُﺆْﺗُﻮﻥَ ﺍﻟﺰَّﻛَﺎﺓَ ﻭَﻳُﻄِﻴﻌُﻮﻥَ ﺍﻟﻠَّﻪَ ﻭَﺭَﺳُﻮﻟَﻪُ ۚ ﺃُﻭﻟَٰﺌِﻚَ ﺳَﻴَﺮْﺣَﻤُﻬُﻢُ ﺍﻟﻠَّﻪُ ۗ ﺇِﻥَّ ﺍﻟﻠَّﻪَ ﻋَﺰِﻳﺰٌ ﺣَﻜِﻴﻢٌ

9:71. முஃமினான ஆண்களும் முஃமினான பெண்களும் ஒருவருக்கொருவர் உற்ற துணைவர்களாக இருக்கின்றனர்; அவர்கள் நல்லதைச் செய்ய தூண்டுகிறார்கள்; தீயதை விட்டும் விலக்குகிறார்கள்; தொழுகையைக் கடைப்பிடிக்கிறார்கள்; (ஏழை வரியாகிய) ஜகாத்தை (முறையாகக்) கொடுத்துவருகிறார்கள்; அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் வழிப் படுகிறார்கள்; அவர்களுக்கு அல்லாஹ் சீக்கிரத்தில் கருணை புரிவான் - நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனாகவும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்
நன்மையை ஏவுவது தீமையை தடுப்பது ஆண், பெண் இருவரின் மீதும் கடமை என மேலுள்ள வசணம் பறைசாற்றுகிறது.

33:33. (நபியின்
மனைவிகளே!) நீங்கள்
உங்கள் வீடுகளிலேயே
தங்கியிருங்கள்;
முன்னர் அஞ்ஞான
காலத்தில் (பெண்கள்)
திரிந்து
கொண்டிருந்ததைப்
போல் நீங்கள்
திரியாதீர்கள்;
தொழுகையை
முறைப்படி
உறுதியுடன்
கடைப்பிடித்து
தொழுங்கள்; ஜகாத்தும்
கொடுத்து வாருங்கள்.
அல்லாஹ்வுக்கும்,
அவனுடைய
தூதருக்கும்
கீழ்படியுங்கள்;
(நபியின்)
வீட்டையுடையவர்களே!
உங்களை விட்டும்
அசுத்தங்களை நீக்கி,
உங்களை முற்றிலும்
பரிசுத்தமாக்கிவிடவே
அல்லாஹ்
நாடுகிறான்.

இந்த வசணத்தை அடிப்படையாக வைத்து தான் தப்லீக் ஜமாதில் செல்லும் பெண்களை வீடுகளில் தங்க வைக்கப்பட்டு மார்க்கம் போதிக்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் அந்த ஊரில் உள்ள பெண்களுக்கும் ஜமாத்தில் வந்த பெண்களின் வீட்டிற்க்கு அனுபப்பட்டு அங்கு நடைபெறும் பெண்களின் பயான் மூலம் பெண்களை சீர்திருத்தம் செய்ய ஒரு வாய்பாக அமைகிறது.

மேலும் தப்லீக் ஜமாதில் செல்லும் பெண்கள் அல்லாஹ்வும் ,நபியவர்களும் கூறிய முழுமையான முகம் மறைப்புள்ள ஹிஜாபை அணிந்து தான் ஜமாதில் செல்கிறார்கள் என்பது நாம் அறிந்த ஒன்றே அல்ஹம்துலில்லாஹ்!

தப்லீக் ஜமாதில் ஊர் விட்டு ஊர் செல்லும் பெண்கள் தனக்கு மஹரமான ஆணின் துணையுடன் தான் பிராயம் செய்கிறார்கள் என்பது தின்னம்.

''மணமுடிக்கத்தகாத
ஆண் துணையில்லாமல்
ஒரு பெண் பயணம்
செய்யக் கூடாது.
மணமுடிக்கத்தகாத
ஆண் துணையுடன்
பெண் இருக்கும்
போதுதான் ஆண்கள்
அவளைச் சந்திக்க
வேண்டும்'' என்று
நபி (ஸல்) அவர்கள்
கூறினார்கள்.
அறிவிப்பவர் :
இப்னு அப்பாஸ்
(ரரி)
நூல் : புகாரி (1862)

0 comments:

Post a Comment

 

makkah live

Sample Text

madina live