Pages

4 Jul 2021

பரேல்விகளின் மோதல்கள் !


வாசகர்களே! பரேல்விகளுக்கு மத்தியில் உள்ள மோதல்களின் தொடர்களை வாசித்து வருகிறோம்.பொதுவாக கருத்து வேறுபாடுகள் மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட ஒன்றுதான்.ஆனால் 
பரேல்விகளின் கருத்து மோதல்கள் குப்ர்,இணைவைப்பு,அவமரியாதை போன்றவையாகும்.எனவே இந்த கருத்து மோதல்களை சாதரணமாக எடுத்து கொள்ளமுடியாதவை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

ஹனீப் குரைஷி Vs அஷ்ரப் ஸிய்யாலவி 

ஹனீப் குரைஷி எழுதியுள்ளார் :
ஸவூதி நாட்டின் வஹ்ஹாபிகளிடமிருந்து கிடைக்கும் மொழிப்பெயர்ப்புகள்,
திருக்குர்ஆன் விளக்கவுரைகள் இலவசமாக கிடைக்கப் பெறுகின்றன. இவர்களை சேர்ந்தவர்களின் மொழிப்பெயர்ப்புகளை தவிர்ந்துகொள்ள வேண்டும்.ஏனெனில் பல இடங்களில் இறைத்தன்மை,
நுபுவ்வத் விஷயத்தில் களங்கம் கற்பிக்கப்படுகிறது.உதாரணமாக ஸவூதியில் இலவசமாக கிடைக்கும் தப்ஸுரின் 1098 ஆம் பக்கத்தில் சூரா கஸஸின் 68 வசன எண்ணிற்கு கீழே எழுதப்பட்டுள்ளது. நுபுவ்வத்திற்கு முன்பாக நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுக்கு (தாம்) ரிஸாலத்திற்கு தேர்ந்தெடுக்கப்படுவோம் எனும் எண்ணம்,சந்தேகம் இல்லை.(ஆதாரம்:குஸ்தாகி கோன் பக்கம்:197)

பரேல்வி அறிஞர் அஷ்ரப் ஸிய்யாலவி எழுதியுள்ளார்:
தன் மீது வேதம் தொடரும்,
இறங்கும்,ரசூல் ஆகுவோம் என்பது குறித்து அன்னாருக்கு  ஆசை (எண்ணம்) இல்லை.
(ஆதாரம்: தஹ்கீகாத் பக்கம்:168)

மற்றோர் இடத்தில் எழுதியுள்ளார்: 
நாம் படைப்புகளின் பக்கம் அனுப்பப்படுவோம்.உம்மீது குர்ஆன் இறக்குவோம் என்பது அன்னாருக்கு தெரியவில்லை.
(ஆதாரம்:தஹ்கீகாத் பக்கம்:170)

மற்றோர் இடத்தில் எழுதியுள்ளார்:
உமக்கு வஹி இறங்குவதற்கு முன்பாக உம்மீது வஹி இறக்கப்படும் எனும் எண்ணம் (உமக்கு) இல்லை.(ஆதாரம்:தஹ்கீகாத் பக்கம்:170)
மற்றோர் இடத்தில் எழுதியுள்ளார்: நுபுவ்வத்தின் இடத்தில் ஆக்குவது, மதிப்புமிக்க ரிஸாலதின் கண்ணியத்தை பெறுதல்,அல்லாஹ்விடத்தில் உரையாடும் தகுதி பெறுதல் நீர் (முஹம்மதே) ஆதரவு, எதிர்ப்பார்ப்பு  வைக்கவில்லை. 
(தஹ்கீகாத் பக்கம்:172)

பரேல்வி யார்கான் நயீமி Vs ஹனீப் குரைஷி 

யார்கான் நயீமி எழுதியுள்ளார்:
ஒரு தடவை அல்ல.மாறாக பலதடவை சூனியம் செய்யப்பட்டார்.இதனால் அன்னாரின் சுயநினைவு,உணர்வு இல்லாமல் ஆனார்.
(ஆதாரம்:நூருல் இர்ஃபான் பக்கம்:448/ஷுஅரா 153)

ஹனீப் குரைஷி எழுதியுள்ளார்: நபிமார்கள், நல்லோர்கள், நெருக்கடியான மலக்குகளின் விஷயத்தில் அவர்கள் உணர்வற்று விட்டார்கள் என்பது தவறாகும்.நெருக்கமான வானவர்களின் மீது அல்லாஹ்வின் அச்சம் மற்றும் அவனின் மதிப்பு மேலோங்குவது சத்தியமாகும்.எனினும்,அவர்களை உணர்வற்று விடுவார்கள் என்பதாக கூறுவது அவர்களின் கண்ணியத்தில் களங்கமும், அவமதிப்புமாகும்.
(குஸ்தாகி கோன் பக்கம்:92)

மஜ்ஹருல்லாஹ் Vs பைஜ் அஹ்மத் உவைஸி 

பரேல்வி மஜ்ஹருல்லாஹ் எழுதியுள்ளார்:
அய்யூப் (அலை) அவர்களின் சோதனையானது அன்னாரின் அனைத்து குழந்தைகளும் மரணம்.அனைத்து செல்வமும் அழிந்துவிட்டது.உடல் முழுவதும் புழு ஏற்படும் அளவிற்கு நோய்வாய்ப்பட்டார்கள்.
(ஆதாரம்:தப்ஸீரே மஜ்ஹரே குர்ஆன் 2/981)

பைஜ் அஹ்மத் உவைஸி எழுதியுள்ளார்:
சில இஸ்ராயில் அறிவிப்புகளில் வருகிறது.அவர்களின் உடலில் புழு வந்துவிட்டது.இப்படிப்பட்ட அறிவிப்புகள் ஆதாரத்திற்கு ஏற்கத்தக்கதல்ல.அதில் தூதர் (அலை) அவர்களை கண்ணியத்தை குறைப்பதும், குறையும் உள்ளது.
(ஆதாரம்:அன்பியாயே கிராம் கி குர்ஆனி துஆயே பக்கம்:15) 

குறிப்பு: அன்பியாயே கிராம் கி குர்ஆனி துஆயே எனும் நூல் இணையத்தில் நாம் தேடிய வரை கிடைக்கவில்லை.இன்ஷா அல்லாஹ் கிடைத்த பிறகு இணைக்கப்படும்.

No comments:

Post a Comment