Pages

27 Jun 2021

ஷாஹ் இஸ்மாயில் ஷஹீத் தெஹ்லவி அவர்களின் மீது சுமத்தும் குற்றச்சாட்டும் ! பதிலும் !


அனைத்து காரியங்களும் அல்லாஹ்வின் விருப்பத்தின் பேரில் நடைபெறுகிறது.
நபி விருப்பத்தால் எந்த ஒன்றும் நிகழ்வதில்லை.(தக்வியதுல்ஈமான்:58)
(தேவ்பந்தியத் கே புத்லான் கா இன்கிஷாப் பக்கம்:68)

வாசகர்களே ! அசலில் தக்வியதுல் ஈமானில் உள்ள வாசகத்தின் கருத்தை முழுமையாக கூறாமல் ஒரு பகுதியை எடுத்து குற்றம் சுமத்துகின்றனர். 

அதுமட்டுமின்றி நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் விரும்புவதால் எது ஒன்றும் நிகழாது என்பதாக  தலைப்பிட்டு நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுக்கு ஒட்டுமொத்த எந்த ஒரு  விருப்பமும் இல்லை என ஷாஹ் ஸாஹிப் (ரஹ்) அவர்கள் கூறுவதாக தவறாக சித்தரிக்கின்றனர்.

ஹள்ரத் ஷாஹ் ஷஹீத் (ரஹ்) அவர்கள் கூறுவதை முழுமையாக பார்த்தால் உண்மை புரிந்துவிடும்.

அல்லாஹ்வின் மாண்பில் எந்த ஒரு படைப்புக்கும் தலையீடு இல்லை.எவ்வளவு பெரியவராக,நெருக்கமானவராக இருந்தாலும் சரி உதாரணமாக அல்லாஹ்,தூதர் நாடினால் வேலை நடைபெறும் என சொல்லப்படாது.
ஏனெனில் அனைத்து இயக்கங்களும் அல்லாஹ்வின் விருப்பத்திற்கு ஏற்ப நடைபெறும் தூதர் விரும்புவதால் ஒன்றும் நிகழாது........(இதனின் இறுதியில் உள்ள வாசகத்தை கவனியுங்கள்) தீனின் விஷயத்தில் இவ்வாறு கூறினால் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை.ஏனெனில் அல்லாஹ், தனது தூதருக்கு தீனின் அனைத்து விஷயங்களையும் கூறிவிடுகிறான்.மக்களை,
தூதரை பின்பற்றும் படி கட்டளையிடுகிறான்.
(தக்வியதுல் ஈமான் பக்கம்:122)

ஷாஹ் இஸ்மாயில் ஷஹீத் (ரஹ்) அவர்களின் நோக்கம் உலக இயக்கத்தில் அல்லாஹ்வின் விருப்பத்தின் பேரில் நடக்கிறது.யாரின் தலையீடும் இல்லை என்பது தான்.இதனை உண்மையான முஃமீன் மறுக்கமுடியுமா?

குர்ஆனில் அல்லாஹ் கூறுகிறான்:
مَا يَفْتَحِ اللّٰهُ لِلنَّاسِ مِنْ رَّحْمَةٍ فَلَا مُمْسِكَ لَهَا  وَمَا يُمْسِكْ ۙ فَلَا مُرْسِلَ لَهٗ مِنْ بَعْدِهِ  وَهُوَ الْعَزِيْزُ الْحَكِيْمُ‏

அல்லாஹ் தன் அருளை மனிதர்களுக்குத் திறந்து விட்டால் அதனைத்  தடுத்து விடக்கூடியவன் ஒருவனுமில்லை. அவன் (தன் அருளைத்) தடுத்துக்கொண்டால் அதனை அனுப்பக் கூடியவனும் ஒருவனுமில்லை. அவன் (அனைவரையும்) மிகைத்தவனும் ஞானமுடையவனாகவும் இருக்கிறான்.
(அல்குர்ஆன் : 35:2)

قُلِ ادْعُوا الَّذِيْنَ زَعَمْتُمْ مِّنْ دُوْنِهٖ فَلَا يَمْلِكُوْنَ كَشْفَ الضُّرِّ عَنْكُمْ وَلَا تَحْوِيْلًا‏
(நபியே! இணைவைத்து வணங்குபவர்களை நோக்கி) நீங்கள் கூறுங்கள்: அல்லாஹ்வையன்றி (வேறு தெய்வங்கள் இருப்பதாக) நீங்கள் எண்ணிக் கொண்டிருக்கிறீர்களே அவைகளை நீங்கள் (உங்கள் கஷ்டங்களை நீக்க) அழையுங்கள். (அவ்வாறழைத்தால்) அவை உங்களுடைய யாதொரு கஷ்டத்தை நீக்கி வைக்கவோ அல்லது (அதனைத்) தட்டிவிடவோ சக்தியற்றவை (என்பதை) அறிந்து கொள்வீர்கள்.
(அல்குர்ஆன் : 17:56)

அல்லாஹ் தெளிவாக அறிவித்துள்ளான்.வானங்கள் பூமியை இயக்குபவன் அல்லாஹ் மட்டும் தான்.அதில் அவனை தவிர வேறு யாரும் இணையாளன்,உதவியாளன் இல்லை.

ஷைக் அப்துல் ஹக் முஹத்திஸ் (ரஹ்) அவர்கள் எழுதியுள்ளார்கள்:
முதல் விஷயம் தவ்ஹீத்.அல்லாஹ் ஒருவன், அனைத்து குணங்களும் பரிபூரணமாக உள்ளவன்,இந்த முழு பிரபஞ்சத்தில் லாபம், நஷ்டம்,நலவு,தீமை, கொடுப்பது,தடுத்துக் கொள்வது நிகழ்வுகளில் அனைத்தும் அவனின் கட்டளை,விதியின் பேரில் உள்ளது என்பதை அடியான் நம்பிக்கை கொள்ளவேண்டும்.
இந்த கொள்கையின் மூலம் அடையும் நன்மை அடியானின் கவனமானது அனைத்து படைப்புகளின் நன்மை,தீமை அவைகளில் இருந்தாலும் சரி இல்லையென்றாலும் சரி துண்டிக்கப்படவேண்டும்.
(அஷிய்யத்துல் லம்ஆத் 1/75, ஆதாரம்:இஆனத் இஸ்திஆனத் பக்கம்:73)

ஷாஹ் அப்துல் அஜீஜ் முஹத்திஸ் தெஹ்லவி (ரஹ்) அவர்கள் எழுதியுள்ளார்கள்:
நெருக்கமான விஷயம் மனிதன்,ஜின் இந்த அடியார் (முஹம்மது)மீது பெரும் கூட்டம் முண்டியத்து கொண்டு இருக்கின்றனர்.ஏதேனும் அடியான் அவரிடத்தில் குழந்தை கேட்கிறான்.உணவு கேட்கிறான்.உலகத்தின் தேவைகளை வேண்டுகிறான். இந்த பெரும் கூட்டத்தின் காரணமாக சிரமம்,தொல்லை அளிக்கின்றனர்.மேலும் தாங்களே ஷிர்கில்,குப்ரில் அகப்பட்டுக்கொள்கின்றனர்.
அந்த அடியாரின்  திக்ர்,வணக்கத்தின் பரிபூரணத்தின் காரணமாக 
இறைவனின் நூர் உள்மனதில்
இறங்கியுள்ளது என்பதாக கருதுகிறார்கள்.எவ்வாறெனில் இந்த அடியார் இறைவனின் செயல்பாடுகளில் இணையாகிவிட்டார்.அந்த அடியாரின் கண்ணியம்,ஆற்றல், அந்தஸ்து அல்லாஹ்வின் சமூகத்தில் உண்டாகிவிடுகிறது.இவர் கூறுவதை அல்லாஹ் செய்கிறான்.எவ்வாறெனில் விருந்தாளி,விருந்தளிப்பவரின் மதிப்பை போன்று. உலகவிரும்பிகள் முயற்சிக்கிறார்கள் அரசர்,தலைவர்,நீதிபதி,தளபதி வீட்டிற்கு வருகிறார்கள். அவரிடத்தில் பிரச்சனை தீர,தேவைகள் நிறைவேற கோருகின்றனர்.இதே தவறான  சிந்தனையில் அடியான் அல்லாஹ்வின் விஷயத்தில் பெரியோரை வழிபடுதல்,கப்ரை வழிபடுதலில் அகப்பட்டுகொள்கிறான்.இதில் மனிதன்,ஜின் கூட்டாக இருக்கின்றனர்.எனவே நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுக்கு நபித்துவத்தின் பொறுப்பை எடுத்துரைக்குமாறு கூறினான்.இந்த விஷயத்தில் உமது பொறுப்பை அஞ்சி இரு சாரார்களுக்கு தெளிவாக கூறும்படி அல்லாஹ் கூறினான் நான் பிரார்த்திப்பதெல்லாம் என்னுடைய இறைவனைத் தான்; அன்றியும், நான் அவனுக்கு எவரையும் இணை வைக்க மாட்டேன்.ஏனெனில் எனது உள்ளத்தை இருளிலிருந்து தனது நூர் எனும் தஜல்லியின் மூலம் ஒளியூட்டினான்.மேலும் ஒரு போதும் அவனுடன் யாரையும் இணையாக்கி கொள்வதில்லை.நானும் அவனுடன் இணையில்லை.எனது இறைவனின் அழைப்பில் ஈடுபடுகிறேன்.என்னை அழையுங்கள் அல்லது என்னை அவனுடன் இணையாக கருதுங்கள் என்பதாக மற்றவர்களுக்கு எப்படி நான் அனுமதிக்கமுடியும்? இந்த இருசாரார்களும் உம்மை இணையாக கருதி தங்களது நன்மை,தீமை உம்மிடத்தில் ஆதரவு வைத்து அழைத்தால் நிச்சயமாக நான் உங்களுக்கு நன்மையோ, தீமையோ, செய்ய சக்தி பெற மாட்டேன் என தெளிவாக கூறிவிடுங்கள்.
இடைத்தரகர்,ஜின்கள்,வழிகெட்டவர்களின் ஆன்மாக்கள், உலக வாசிகளுக்கு பலனளிக்கும் எனும்  பேராசை மற்றும் தீங்குதரும் அச்சத்தால் ஏமாற்றுகின்றன.தாங்கள்தான் நன்மை,தீமை அளிக்க உரிமையாளர் என வெளிப்படுத்துகின்றன.இப்போது இந்த பொய் அழிந்துவிட்டது.ஏதேனும் பிரச்சனை,துன்பத்தின் போது அவனின் கோபத்திலிருந்தும் உம்மின் சமூகத்தை பிடித்து பாதுகாப்பு வேண்டினால் தெளிவாக பகிரங்கமாக கூறிவிடுங்கள் “நிச்சயமாக அல்லாஹ்வை விட்டும் ஒருவரும் என்னைப் பாதுகாக்க மாட்டார்; இன்னும், அவனையன்றி ஒதுங்குந் தலத்தையும் நான் காணமுடியாது.(கருத்து,ஆதாரம்:தப்ஸீரே அஜீஜி பக்கம்:294,295/ பரேல்விய அறிஞரின் ஜவாஹிரே அஜீஜி உர்து தர்ஜுமா தப்ஸீரே அஜீஜி பக்கம்:310,311,312)

பரேல்விகளே கண்திறந்து பாருங்கள் ஷாஹ் இஸ்மாயில் ஷஹீத் (ரஹ்) அவர்கள் கூறியதை தான் ஷாஹ் அப்துல் அஜீஜ் (ரஹ்) அவர்கள் விரிவாக விளக்கமாக கூறியுள்ளார்.அன்னாரின் கொள்கைதான் எங்களின் கொள்கை என்பதாக பரேல்விகளின் வாதமானது பொய்யை தவிர வேறில்லை.

No comments:

Post a Comment