3 Dec 2017

மீலாது பித்அத்!

இமாம் இஸ்ஹாக் அஷ்ஷாதிபி (ரஹ்)அவர்கள் பித்அத்துகளை குறித்து பட்டியலிட்டவாறு கூறுகிறார்கள்:

 நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிறந்த நாளை ஈத் பெருநாளாக கொண்டாடுவது.



அல்லாமா முஹம்மது ரஷீத் ரிஜா அவர்கள் தப்ஸீர்  மனாரில் எழுதியுள்ளார்கள் :

மெளலித் சபைகள் பாவங்களின் கடைகளாகும்.மெளலீத் சபைகள் முழுவதும் வெறுக்கத்தக்கவைகள். முதலாம் நூற்றாண்டில் இல்லை.


ஷைக் அஹ்மத் ரூமி ரஹ் அவர்கள் மஜாலிஸுல் அப்ரார் என்ற நூலில் எழுதியுள்ளார்கள் :

தாவூஸ் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடமிருந்து அறிவிக்கிறார்கள்.
எதேனும் மாதத்தையோ நாளையோ பெருநாளாக ஆக்கவேண்டாம்.



இதனின் அடிப்படை என்னவெனில் எந்த நேரத்தையும் பெருநாளாக தேர்ந்தெடுப்பது முஸ்லிம்களுக்கு அனுமதியில்லை.
எனினும் ஷரீஅத்தில் வாரத்தில் ஜும்ஆ நாள், அய்யாமுத் தஷ்ரீக், பக்ரீத்,ரமளான் பெருநாளாக ஆக்கப்பட்டுள்ளது.
இதனை எந்த நாளும் பெருநாளாக தேர்ந்தெடுப்பது பித்அத்தாகும்.இதற்கு ஷரீஅத்தில் எந்தவொரு அடிப்படை இல்லை.
அதுமட்டுமின்றி இணைவைப்பாளர்களின் பெருநாளாகும்.

அவர்களுக்கு சில பெருநாள்கள் காலத்துடனும் இடங்களுடன் இருந்தது.இஸ்லாம் வந்த பிறகு அல்லாஹ்  அனைத்தையும் அழித்துவிட்டான்.
காலங்கள் பெருநாட்களுக்கு பகரமாக ரமளான் பக்ரீத் அய்யாமுஷ் தஷ்ரீக்கை பெருநாளாக நிர்ணயித்தான்.

 ரபீயுல் அவ்வல் 12-ஆம் நாளில் மீலாத் விழா கொண்டாடுபவர்கள் ரிஜாகான் பரேல்வியின் பார்வையில் பாவிகள் ரிஜாகான் பரேல்விக்கு எதிரிகள் பித்அத்வாதிகளின் தலைவர் அஹ்மத் ரிஜாகான் பரேல்வி அவரது சீடர்களுக்கு செய்த உபதேசம் :

எனது மார்க்கம்,வழிமுறை எனது நூல்களிலிருந்து அறியமுடியும்.இதன் பேரில் அமல் செய்வது அனைத்து பர்ளுகளை விட முக்கியமான பர்ளாகும்.
(வஸாயா ஷரீப்) 


    அஹ்மத் ரிஜாகான் பரேல்வி நபி ஸல்லல்லாஹு அலைஹி  வஸல்லம் அவர்களின் பிறப்பு  8-ஆம் தேதி மரணம் 12-ஆம் தேதி என கூறியுள்ளார்கள்.
(நுத்குல் ஹிலால்) 

அஹ்மத் ரிஜாகானின் சொல்லிற்கு மாற்றமாக பெருமானார் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்களின் இறந்த நாளை பெருநாளாக கொண்டாடுகின்றனர்.
ரிஜாகானின் நூலின் படி செயல்படும் மிகப்பெரும் பர்ளை மறுத்து பாவியாக  குற்றவாளியாக மாறிவிட்டனர்.
ரிஜாகான் பரேல்வியின் எதிரியாக உள்ளனர்.

 மீலாதுன் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஆங்கிலேய அரசின் கொடை அப்துல் ஹகீம் ஷரஃப் காதிரி எழுதியுள்ளார்கள்:


ரபியுல் அவ்வல் 12-ஆம் நாள் பொதுவாக மரணித்த நாளாக சொல்லப்பட்டு இருந்தது.ஹஜ்ரத் அல்லாமா தவக்குலி முயற்சியின் வெளிப்பாடு அரசாங்க பதிவில் மரணித்த நாள் பிறந்த நாளாக ஏற்கப்பட்டது.இந்த நாளில்தான் விடுமுறை விடப்படுகிறது.



 ஆங்கிலேயர்களும்  பெருநாளின் பிறந்த தினவிழாவும்:


ரபியுல் அவ்வல் மாதம் 12-ஆம் நாள் முழு இந்தியாவில் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மரணித்தநாளாக மக்கள் விளங்கி இருந்தார்கள் என்பதை பரேல்விகளும் ஏற்கிறார்கள்.


ரபியுல் அவ்வல் 12-ஆம் நாளில் விழாவோ கொண்டாட்டமோ சிந்தனையில் கூட இல்லை.

 பெருமானார் ஸல்ல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மரணித்த ரபியுல் அவ்வல் 12-ஆம் நாளை அரசாங்க கெஜட்டில், பதிவில் பிறந்த நாளாக மாற்றும்படி பரேல்விகளின் வழிகாட்டியான  ஆங்கிலேயர்களிடத்தில் நூரே பஹ்ஷ் தவக்குலியின் மூலமாக வேண்டுகோள் வைத்தார்கள்.அதனை ஆங்கிலேயர்களும் அங்கீகரித்தனர்.

ஆக பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மரணித்த நாளை பெருநாளாக கொண்டாட ஆங்கிலேயர்களின் திட்டத்திற்கு பரேல்விகள் ஒன்றுப்பட்டுள்ளனர்.

0 comments:

Post a Comment

 

makkah live

Sample Text

madina live