8 May 2017

பரேல்விகளின் திரிபுகள் தொடர்-6 (முஸ்லீம் லீக் பற்றி பரேலவிகளின் நிலைபாடு)

மெளலவி அஹ்மத் ரிஜாகானின் மல்பூஜாத்தில் 221பக்கம் பாகம் 2 ல் வருகிறது சாப்பிடும் போது பிஸ்மில்லாஹ் மறந்துவிட்டால் ஓதும் துஆவானது
بسم اللہ  علی اولہ و آخرہ 
என்று தவறாக உள்ளது.
மல்பூஜாதின் அனைத்து பதிப்புகளிலும் தவறான துஆ உள்ளது.புதிய பதிப்பில் அஃலா ஹஜ்ரத்தின் தவற்றை மறைக்க சரியான துஆ எழுதி சரி செய்துவிட்டனர்.
(மல்பூஜாத் பாகம்:2 பக்கம்:294)
அஹ்மத் ரிஜாகான் கலீபா மெளலவி அபுல்ஹஸனாத் காதிரியின் நூலில் "அவ்ராகே ஙம்மில்" ஆதம் (அலை) அவர்கள் குறித்து அவமரியாதை ஏற்படுத்தும் விதமாக எழுதியுள்ளார்

ஆதம் அலை ஆட்சி அதிகாரத்தின் பேரில் சுவனத்தில் இருந்தார்கள்.
ஆதம் (அலை) கிரீடம் அணியப்பட்டு கண்ணியமாக இருந்தார்.இன்று இழிவில் அகப்பட்டுக்கொண்டார்.(அவ்ராகே ஙம் பக்கம்:2 முதல் பதிப்பு 1348)
புதிய பதிப்பில் வாசகத்தை பின்வருமாறு திரிபு செய்து மாற்றிவிட்டனர்.

ஆதம் அலை ஆட்சி அதிகாரத்தின் பேரில் சுவனத்தில் இருந்தார்கள்.ஆதம் (அலை) கிரீடம் அணியப்பட்டு கண்ணியமாக இருந்தார்.இன்று சோதனைகளில் அகப்பட்டுக் கொண்டார் (ஜியாஉல் குர்ஆன் 2008)
அஹ்மத் ரிஜாகானின் தர்ஜுமாவில் அஹ்மத் யார் குஜராத்தி ஓரக்குறிப்பாக விளக்கவுரையில் எழுதியுள்ளார்: 


ஷைத்தானின் சிறப்பம்சத்தை வெளிப்படுத்துகிறார் ஏனெனில் நான் பழைய இறைஞானி மார்க்க அறிஞர் வணக்கசாலி மேலான தேவ்பந்தியாக இருக்கிறேன்.மேலும் இதுவரை ஆதம் அலை அவர்கள் எதையும் கற்கவில்லை.வணக்கம் புரியவில்லை.(தப்ஸீர் நூருல் இர்பான் பக்கம் 730 பாகம் 23)அஹ்மத் யார் குஜராத்தி இங்கு ஷைத்தானை மேலான தேவ்பந்த் என்பதாக கூறி தனது காழ்ப்புணர்ச்சியை இனவெறியை வெளிப்படுத்தியுள்ளார். எனினும் நயீமி பதிப்பகத்தினரால் வெளியிடப்பட்ட நூருல் இர்பானில் தேவ்பந்த் என்பதை நீக்கிவிட்டனர்.
(நூருல் இர்பான் பக்கம் 550 நயீமி குதுப்கானா)
யார் அஹ்மத் குஜராத்தியின் இந்த பொய்யால் வெட்கப்பட்டு பின்னால் வந்த பரேல்விகள் அதனை நீக்கிவிட்டனர்.

நூருல் இர்பானில் ஓர் இடத்தில் அஹ்மத் யார் அவர்கள் பெருமானார் (ஸல்) அவர்களின் மீது அவமரியாதை நடந்துள்ளார் .

நபி (ஸல்) அவர்கள் சிலைகளின் பெயரில் அறுத்த மாமிசத்தை நுபுவ்வத்திற்கு முன்பாக  சாப்பிட்டுள்ளார்கள்.
(நூருல் இர்பான் பாகம் 15 ஸுரா கஹ்ப் ஹாஷியா பக்கம் 799)


இதனால் 'பீர் பாய்' பதிப்பகத்தினரின் செயலைப் பாருங்கள்! 

நபி ஸல் அவர்கள் சிலைகளின் பெயரில் அறுத்த மாமிசத்தை நுபுவ்வத்திற்கு முன்பாக  சாப்பிட வில்லை.
(நூருல் இர்பான் பக்கம்:471,பீர் பாயி கம்பெனி லாஹுர்)
கவனமாக பாருங்கள்! 
அசலான வாக்கியத்தில் னா (இல்லை) என்பது இல்லை.எனினும் பரேல்விகள் அவமரியாதையை மறைப்பதற்காக نہ வை இடையில் சொருகி திரித்துள்ளார்கள். கைசேதம் அல்லாஹ்வின் அச்சத்தை குறித்து கவலைப்படாமல் மார்க்கரீதியாக மோசடி செய்துள்ளனர்.எனினும் திருட்டானது பிடிக்கப்பட்டுவிட்டது.

1942 லே பரேல்விகள் அஹ்மத் ரிஜாகான் ஒரு பத்வா அத்தலாயிலுல் காஹிரா என்ற பெயரில் பம்பாயில் வெளியிட்டனர். அதில் ஆல் இன்டியா முஹம்மடன் எஜுகேஷன் கான்ஃபிரன்ஸ் மற்றும் முஸ்லீம் லீக் குறித்து கேட்கப்பட்டது.
(பக்கம்:3 ) அவர்களுக்கு உதவி செய்வது.அதனுடன் ஒன்றிணைவது.இந்த பத்வாவின் பேரில் அஹ்மத் ரிஜாகான் உடன் எண்பது பரேல்விய உலமாக்கள் கையொப்பமிட்டுள்ளனர்.அதில் முஸ்லிம் லீக் பானி மற்றும் அவரின் ஜமாஅத்தின் மீது குஃப்ர் பத்வா அளித்துள்ளனர்.அவர்களுக்கு உதவி செய்வது உபகாரம் செய்வது ஹராம் என்பதாக தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.எனினும் ரிஜா பவுண்டேஷன் செயலை பாருங்கள் ஒட்டுமொத்தமாக முப்பது பாகங்களாக வெளியிட்டனர்.15ம் பாகத்திலே ஆல் இண்டியா முஹம்மது டன் பெயரை குறிப்பிட்டு நேர்மையை நிரூபித்துள்ளனர்.எனினும் முஸ்லிம் லீகின் பெயரை நீக்கிவிட்டனர்.பாருங்கள் பக்கம் 103,104 பாகம்:15முக்கிய குறிப்பு: 

பரேல்விகள் இந்தியா பிரிவதற்கு முன்பாக முஸ்லிம்லீக் மாற்றமாக
 زریں بخیہ دری الجوابات السنية احكام نوريہ شرعیہ تجانب اہلسنت 
பெயரில் பத்வா வெளியிட்டனர்.அதில் முஹம்மத் அலி ஜின்னாஹ் நரகநாய் ராஃபிஜி காஃபிர் முர்தத் என சொல்லப்பட்டுள்ளது.முஸ்லீம் லீகிற்கு உதவி உபகாரம் ஹராம் என கூறப்பட்டுள்ளது.


இன்றைய பரேல்விகள் அவர்களின் பெரியோர்களின் தீர்ப்புகளை ஏன் சாமானியர்களுக்கு முன்பாக கூறுவதில்லை?

0 comments:

Post a Comment

 

makkah live

Sample Text

madina live