Pages

21 Sep 2016

அப்துர் ரஹ்மான் காரி (ரலி) என்ற சஹாபியை காபிர் என்று சொல்லும் அஹமது ரிழா கான் பரேல்வி.வழிகேடான கொள்கையை கொண்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் தலைவர் பீஜே அவர்கள்
ஜகாத் விஷயத்தில் ஒட்டுமொத்த உம்மத்திற்கும் முரண்பாடான நிலைப்பாட்டை
எடுத்தார்.ஜகாத் விஷயத்தில் ஒரு நபித்தோழரை அவர்  நபித்தோழர் அல்ல என்பதாக
கூறினார்.

இதனை விட ஒருபடி மேலாக அஹ்லுஸ்ஸுன்னா வல் ஜமாஅத்தின் போர்வையில்
ஒளிந்து கொண்டிருக்கும் ஆங்கிலேயே அடிவருடிகளான பரலேவிகளின் தலைவர் "ரிளாகான்
பரலேவி" அவர்கள் ஒரு நபித்தோழரை காபிர் என்பதாக விமர்சித்துள்ளார். ஆனால்
வழக்கம் போல் பரலேவிய ஆதரவாளர்கள் வாய்மூடி மெளனியாக உள்ளனர். ஏனெனில்
இஸ்லாத்தின் மீது இருக்கும் பிரியத்தை விட அவர்களுக்கு  ரிளாகானின்
பிரியம்தான் பெரியது. ஒரு போதும் இந்த விமர்சனத்திற்கு  எதிராக பரலேவிகள் கொதித்தெழ போவதில்லை.

இனி
ரிளாகான் பரலேவி "மல்பூஜாத்" எனும் அவரது நூலில் எழுதியிருப்பதைப் பார்ப்போம்!

  ஒரு தடவை அப்துர் ரஹ்மான் அப்துல் காரி என்கிற இறைநிராகரிப்பாளன்
இருந்தான்.தனது தோழர்களுடன் அண்ணல் நபி ஸல் அவர்களின் ஒட்டகங்களை தாக்கியதுடன்
மேய்ப்பாளரையும் கொலை செய்தான்.
(மல்பூஜாத் இரண்டாம் பாகம் சுருக்கம்)

ரிளாகான் பரலேவி அவரது மல்பூஜாதில் நபித்தோழரை கடுமையாக விமர்சித்துள்ளார்.

காபிர்,பன்றி,
ஷைத்தான்,திருடன் என சகட்டுமேனிக்கு விமர்சித்துள்ளார்.
கடும் விமர்சனமும்,அவதூறும் நிரம்பிய நூலை பரலேவிகள் மகிழ்ச்சியுடன்
வெளியிட்டுள்ளனர்.
பல பதிப்புகள் வெளியிடப்பட்டது.
பல வருடங்களாக அவதூறு நிரம்பிய வாசகங்களை எந்த ஒரு பரலேவியும் நீக்கவில்லை.

அது மட்டுமின்றி அஃலா ஹள்ரத் ரிளாகான் அவர்களின் மல்பூஜாத்தை படித்து ஈமானை
புதுப்பித்துக்கொள்ளுங்கள்!
என முஸ்லிம்களிடம் வேண்டுகோள் வைக்கப்பட்டது.

நடுநிலையோடு சிந்தித்துப்
பாருங்கள்!

அண்ணலாரின் தோழரின் மீது அவதூறை அள்ள வீசியுள்ள மல்பூஜாத்தை படிப்பதால்
ஈமானில் புத்துணர்ச்சி உண்டாகுமா? அல்லது ஈமான் அறவே இல்லாமல் போகுமா?

முழு உலகமும் எடுத்து செயல்படுத்த வேண்டிய உயர்ந்த நூல் மல்பூஜாத் என்பதாக
அதனின் முன்னுரையில் எழுதப்பட்டுள்ளது. அண்ணலாரின் ஆருயிர் தோழரை பகிரங்கமாக
பன்றி,ஷைத்தான் என்பதாக விமர்சித்துள்ளார்.எனினும் பரலேவிகளில் எவருக்கும்
ஈமானிய ரோஷமும், இறைஉணர்வும் இல்லாமல் போனதால் மெளனம்
காக்கின்றனர்.பரலேவிகளுக்கு ஈமானிய ரோஷம்,இறைஉணர்வு தேவ்பந்த் பெரியோர்களுக்கு
எதிராக மட்டும்தான்.

ஆனால் உண்மையில் அது ஈமானிய ரோஷமல்ல மாறாக சத்திய
உலமாக்களான தேவ்பந்த் பெரியோர்கள் மீதுள்ள காழ்ப்புணர்ச்சியும்,குரோதமும்
அன்றி வேறில்லை.

அஃலா ஹள்ரத் ரிளாகான் கூறுகிறார்:

 எனது மார்க்கம்,பாதையில் செல்லுங்கள் எனது
மார்க்கமானது எனது நூல்கள் தான் இதன் பேரில் அமல் செய்வது அனைத்து பர்ளுகளை
விட மேலான பர்ளாகும்.
[حیات اعلی حضرت  ]ஆக நாயகத்தின் தோழரை ஷைத்தான்,பன்றி, திருடன் என்று சொல்வதானது அனைத்து
பர்ளுகளை விட உயர்ந்தது
அஃலா ஹள்ரத் சொல்லின் மூலம் புரியமுடிகிறது. (அல்லாஹ் பாதுகாப்பானாக)

நாயகத்தின் தோழரை கீழ்த்திரமாக விமர்சித்த ரிளாகான் பரலேவியை
பரலேவிகள், இமாம்,முன்னோடி,தீனை உயிர்ப்பித்தவர்,சுன்னத் வல் ஜமாஅத்தை
சேர்ந்தவர்,ஹனபி,முஃப்தி,பெரும் மார்க்க மேதை,மெளலானா,சுன்னாவை
உயிர்பிப்பவர்,நாயகத்தின் நேசர்,ஹதீஸ் கலை வல்லுனர்,திருக்குர்ஆன்
விரிவுரையாளர் என்பதாக கொண்டாடுகின்றனர்.இதற்கு நேர் எதிராக ரிளாகான் பரலேவி
அபூஜஹ்லை விட கேடு கெட்டவராகதான் இருக்கமுடியும்.

பதாவா ரஷீதிய்யாவில்
நபித்தோழர்களை விமர்சிப்பவர் அஹ்லுஸ்ஸுன்னாவை விட்டு வெளியேறியவர் என்பதில்
எழுத்தாளரின் தவறுதலின் காரணமாக خارج  ہوگا (வெளியேறிவிடுவார்) என்பதானது خارج
نہ ہوگا வெளியேற மாட்டார்  என மாறிவிட்டது.இதற்கு எதிராக பரலேவிகள்
வானத்திற்கும் பூமிக்கும் குதித்தனர்.

அஹ்மத் ரிளாகான் விஷயத்தில் மட்டும்
பரலேவிகள் சத்தியத்தை மூடிமறைக்கின்றனர். இனி அப்துர் ரஹ்மான் காரி என்பவர்
யார் என்பதை ஆராய்வோம்!

قال ابن معين هو ثقة و قيل له صحبة

(1)இப்னு மயீன் கூறுகிறார்: அவர் பலமானவர்.மேலும் நபித்தோழர் என்பதாகவும்
கூறப்படுகிறது.

(2)ஸஹீஹுல் புகாரியில் இவரின் ஒரு ரிவாயத் இடம் பெற்றுள்ளது

(3) இவ்வாறே அப்துர் ரஹ்மான் காரி ரளி அவர்கள் மூத்த நபித்தோழர்களிடமிருந்து
அறிவித்த ஹதீஸ்கள் நூல்களில் இடம்பெற்றுள்ளன.

(3)عن عروة بن زبير عن عبد الرحمان بن عبد القاري انه قال خرجت مع عمر بن
الخطاب ليلة فى رمضان الى المسجد

உர்வா இப்னு ஜுபைர் அவர்கள் அப்துர் ரஹ்மான் அப்துல் காரி அவர்களிடமிருந்து
அறிவிக்கிறார்கள் நான் ரமளானில் ஒரு இரவில் உமர் ரளி அவர்களுடன் பள்ளிக்கு
சென்றேன்.

(4)இது மட்டுமின்றி அல்லாமா இப்னு ஹஜர் அஸ்கலானி ரஹ் அவர்களும் அப்துர்
ரஹ்மான் அப்துல் காரி ரளி அவர்களை ஸஹாபி என்பதாக கூறியுள்ளார்கள் .

عبد الرحمان
بن عبد بغير اضافة القارى بتشديد الياء يقال له رؤية

 (تقريب التهذيب)

இப்னு ஹஜர் ரஹ் அவர்களின் ஆய்வின் படி அப்துர் ரஹ்மான் அப்துல் காரி ஸஹாபி
என்பது நிரூபணமாகிறது.

எனினும் அப்துர் ரஹ்மான் அப்துல் காரி ஸஹாபி என்பதில் கருத்து வேறுபாடுகள்
உள்ளது.சிலர் ஸஹாபி என்கின்றனர்.சிலர் தாபியி என்கின்றனர்.எனினும் இரு
சாராரும் சுவனவாசிகள் என்பதில் சந்தேகமில்லை. அப்துர் ரஹ்மான் அப்துல் காரி
அவர்கள்,நபி ஸல் அவர்களின் காலத்தில் பிறந்தவர் எனினும் நபி ஸல் அவர்களை
சந்திக்கவில்லை.இமாம் வாகிதி ரஹ் அவர்கள்,அவரை ஸஹாபி என்கின்றார்.ஆனால் சரியான
கருத்து அவர் தாபியி மேலும் அவர் உமர் ரளி அவர்களை சந்தித்தது
நிரூபணமாகியுள்ளது.
اكمال فى اسماء) 
الرجال لصاحب
لمشكاة)

முக்கிய குறிப்பு: 

இமாம் வாகிதி ரஹ் அவர்களின் ஆய்வு கண்ணோட்டத்தின்படி
அப்துர் ரஹ்மான் அப்துல் காரி உறுதியாக ஸஹாபி என்பதாக
நிரூபணமாகியுள்ளது.பரலேவிய அறிஞர் மெஹர் அலி அவர்கள் வாகிதி (ரஹ்) அவர்களை
ஹாபிளுல் ஹதீஸ்,பலமானவர்,ஹதீஸ் கலை அறிஞர்,ஹதீஸில் அமீருல் முஃமினீன் என
புகழ்ந்துள்ளார்.(ديوبندى مذهب)

வாகிதி ரஹ் அவர்களின் விஷயத்திலே பத்ஹுல் கதீர்,ஷர்ஹு ஹிதாயா,உயூனுல் அஸர்
லிப்னி ஸய்யிதின்னாஸ் என்ற நூலின் ஆதாரத்துடன் "அமீருல் முஃமினீன்" என்ற
பட்டத்துடன் குறிப்பிட்டுள்ளார்.(ديوبندى مذهب )

     அப்துர் ரஹ்மான் அப்துல் காரி அவர்கள் தாபியாகவே இருக்கட்டும் தாபியை
காபிர் என்பதாக கூறுவது முறையா? நபி (ஸல்) அவர்களின் ஒட்டகங்களை தாக்கி
மேய்ப்பாளரை கொன்றவன் உண்மையில் அப்துர் ரஹ்மான் ஃபுஜாரி இவன்தான் காஃபிர்
அறியாமையின் காரணமாக அப்துர் ரஹ்மான் அப்துல் காரியை காபிர் என்பதாக பெரும்
அபாண்டத்தையும்,பழியையும் சுமத்தியுள்ளார்.இதனைப் பற்றிய முழுமையான சம்பவத்தை
பின்வரும் லிங்கில்
பார்வையிடவும்.

library.islamweb.net/newlibrary/display_book.php?bk_no=1&ID=853&idfrom=3443&idto=3444&bookid=1&startno=1


http://xn--mlcvnce4ac1emw6ewci.library.islamweb.net/newlibrary/display_book.php?bk_no=1&ID=853&idfrom=3443&idto=3444&bookid=1&startno=1>
(அரபி லிங்க்)

www.tamililquran.com/muslimdisp.php?start=3684 
(தமிழ் லிங்க்)

  நபித்தோழர்கள்,தாபியீன்கள்,தபாஅத்தாபியீன்களின் அந்தஸ்து:

   கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் கூறினார்கள்:
என் தோழர்களை திட்டாதீர்கள். ஏனெனில் உங்களில் ஒருவர் உஹது மலையளவு தங்கத்தை
(இறைவழியில்) செலவு செய்தாலும் அவர்கள் செலவு செய்த ஒரு கைக்குவியல் அல்லது
அதில் பாதியளவைக் கூட (அவரது) அந்த தருமம் எட்ட முடியாது.

ஹழ்ரத் அபூசையீத் அல்குத்ரீ (ரலியல்லாஹு அன்ஹு)
ஸஹிஹுல் புகாரி - 3673,  ஸஹிஹுல் முஸ்லிம் -2541,  மிஷ்காத் - 6007

   கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் கூறினார்கள்:
மக்களில் சிறந்தவர்கள் என் தலை முறையினர் (ஸஹாபாக்கள்) அவர்களுக்குப் பிறகு
(சிறந்தவர்கள்) அவர்களையடுத்து வருபவர்கள். (தாபிஈன்கள்) அவர்களுக்கும் பிறகு
(சிறந்தவர்கள்) அவர்களையடுத்து வருபவர்கள். (தப அத்தாபிஈன்கள்) பின்னர் ஒரு
சமுதாயத்தார் வருவார்கள். அவர்களுடைய சாட்சியம் அவர்களுடைய சத்தியத்தை
முந்திக் கொள்ளும். அவர்களுடைய சத்தியம் அவர்களுடைய சாட்சியத்தை முந்திக்
கொள்ளும்.

ஹழ்ரத் அப்துல்லாஹ் பின மஸ்ஊத் (ரலியல்லாஹு அன்ஹு)
​ஸஹிஹுல் புகாரி - 3651

      கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் கூறினார்கள்:
மக்களிடையே ஒரு காலம் வரும். அப்போது மக்களில் ஒரு குழுவினர் புனிதப்
போருக்குச் செல்வார்கள். அப்போது (அவர்கள் யார் மீது படையெடுத்துச்
செல்கிறாரோ) அவர்கள் உங்களிடையே அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)
அவர்களுடன் தோழமை கொண்டவர்கள் இருக்கின்றனரா என்று கேட்பார்கள். ஆம்
இருக்கிறார்கள் என்று (போர் செய்யச் சென்ற) அவர்கள் பதில் சொல்வார்கள். உடனே
போருக்குச் சென்ற அவர்களுக்கு வெற்றி அளிக்கப்படும். பிறகு மக்களிடையே ஒரு
காலம் வரும். மக்களில் ஒரு குழுவினர் புனிதப் போர் புரியச் செல்வார்கள்.
(அவர்களிடம்) உங்களிடையே அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)
அவர்களின் தோழர்களுடன் தோழமை கொண்டவர்கள் இருக்கின்றார்களா என்று
கேட்கப்படும். போருக்குச் சென்றவர்கள் ஆம் இருக்கிறார்கள் என்று சொல்வார்கள்.
உடனே அவர்களுக்கு வெற்றியளிக்கப்படும். பிறகு மக்களிடையே ஒரு காலம் வரும்.
மக்களில் ஒரு குழுவினர் போருக்குச் செல்வார்கள். அப்போது அவர்களிடம்
அல்லாஹ்வின் தூதருடைய தோழர்களிடம் தோழமை கொண்டிருந்தவர்களுடன் தோழமை
கொண்டவர்கள் (தாபியீன்கள்) உங்களிடையே இருக்கின்றனரா என்று கேட்கப்படும்.
அதற்கு அவர்கள் ஆம் இருக்கிறார்கள் என்று பதிலளித்தார்கள். உடனே அவர்களுக்கு
வெற்றியளிக்கப்படும்.

ஹழ்ரத் அபூசயீத் அல் குத்ரீ (ரலியல்லாஹு அன்ஹு)
​​ஸஹிஹுல் புகாரி - 3649

     கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் கூறினார்கள்:
எனது தோழர்களை விடயத்தில் அல்லாஹ்வை அஞ்சுங்கள். எனது தோழர்கள் விடயத்தில்
அல்லாஹ்வை அஞ்சுங்கள். எனக்குப்பின் அவர்களை உங்களது பேச்சுக்கு
ஆளாக்கிக்கொள்ளாதீர்கள். எவர் அவர்களை நேசிக்கின்றனரோ அவர் என்னை
விரும்புவதாலேயே அவர்களை நேசம் கொண்டார். இன்னும் அவர்களை கோபிப்பவர்கள்
என்னைக் கோபிப்பதாலேயே அவர்களைக் கோபித்தனர். அவர்களுக்கு நோவினை செய்வோர்
என்னையே நோவினை செய்கின்றனர். எவன் என்னை நோவினை செய்வானோ, அவன் அல்லாஹ்வை
நோவினை செய்தவனாகும். அல்லாஹ்வை நோவினை செய்பவன் சமீபத்தில் வேதனை
அளிக்கப்படுவான்.

ஹழ்ரத் அப்துல்லாஹ் பின் முகப்பல் (ரலியல்லாஹு அன்ஹு)
திர்மிதி 3797, மிஷ்காத்

      கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் கூறினார்கள்:
எனது தோழர்களை எவரேனும் ஏசப்பேசக் கண்டால் (அல்லது கேட்டால்) இந்த கெடுதிக்காக
அல்லாஹ்வின் சாபம் அவர்கள் மீது உண்டாகட்டும் எனச் சொல்லுங்கள்.

ஹழ்ரத் இப்னு உமர் (ரலியல்லாஹு அன்ஹு)
திர்மிதி, மிஷ்காத்

  கண்மணி நபி ஸல் அவர்கள் கூறினார்கள்:
எனது தோழர்களை கண்ணியப்படுத்துங்கள்! அவர்கள் உங்களை விட சிறந்தவர்களாக
திகழ்கிறார்கள்.பிறகு அவர்களை அடுத்து வருபவர்களை (தாபியீன்கள்)
கண்ணியப்படுத்துங்கள்!பிறகு அடுத்து வருபவர்களை (தப்அத்தாபியீன்கள்)
கண்ணியப்படுத்துங்கள்!

ஹள்ரத் உமர் ரளி அன்ஹு அவர்கள் மிஷ்காத்

   அஹ்மத் ரிளாகான் பரலேவி ஆய்வின்றி எதார்த்தமாக  எழுதவில்லை திட்டமிட்டுதான்
நபித்தோழரை அல்லது தாபியை காபிர்,ஷைத்தான்,திருடன் என விமர்சித்துள்ளார்
என்பதற்கு பின்வரும் அவரின் வாசகமே சான்றாக அமைந்துள்ளது.

ایک بار عبد الرحمان قاری کہ کافر تھا اپنے ہمراہئوں کے ساتھ حضور اقدس صلی
اللہ علیہ و سلم کے اونٹوں پر آپڑا چرانے والے کو قتل کیا اور اونٹ لے گیا اسے
قرات سے قاری نہسمچھیں بلکہ قبیلہ بنی قارہ سے

அப்துர் ரஹ்மான் காரி என்ற
காபிர் இருந்தான்.தனது தோழர்களுடன் நபி ஸல் அவர்களின் ஒட்டகத்தை தாக்கியதுடன்
மேய்ப்பாளரை கொலை செய்தான்.
ஒட்டகத்தையும் ஓட்டி சென்று விட்டான்.கிராஅத் என்பதன் காரணமாக அவனை காரி எண்ணி
விடாதீர்கள்.மாறாக அவன் பனூ காரா என்ற கபீலாவை சேர்ந்தவன்.

பிறகு பல ஆண்டுகள் கழித்து  பரலேவிகள், அஹ்மத் ரிளாகான் நபித்தோழர் அல்லது
தாபியின் மீது அள்ளி வீசிய அபாண்டத்தை,அவதூறை, அருவருக்கத்தக்க விமர்சனத்தை
சத்தமின்றி அப்துர் ரஹ்மான் காரி என்பதை அப்துர் ரஹ்மான் ஃபுஜாரி என மாற்றி
சில வாசகத்தை எடுத்து விட்டனர்.அஹ்மத் ரிளாகானின் மானம் காத்தனர்.

ஆதாரம் :

No comments:

Post a Comment