3 Jul 2016

பரேலவிகள் - ரிளாகானிகள்.

பரேலவிகள் - ரிளாகானிகள் 

பித்அத்தை அங்கீகரிப்பவர்கள், நவீன அனுஷ்டானங்களை இஸ்லாமிய வணக்க வழிபாடுகளைப் போன்று பாவித்துச் செய்யும் அனாச்சாரமான கொள்கைக்கு ஹிஜ்ரீ 14ஆம் நூற்றாண்டில் புத்துயிரூட்டியவர் அஹ்மது ரிளாகான் என்பவராவார்.

உ.பி.யின் பரேலி எனும் ஊரில் ஹிஜ்ரீ 1272 ஷவ்வால் (கி.பி. 1856 ஜூன் 14) அன்று பிறந்தார். தகப்பனார் பெயர் நகீஅலீ. இவருக்குத் தாயார் வைத்த பெயர் அம்மன் மியான். தந்தை வைத்த பெயர் அஹ்மது மியான். பாட்டனார் தான் அஹ்மது ரிளா என்று பெயர் வைத்தார். இந்தப் பெயரே பிரபலமானது. இதனால் இக்கொள்கைக்கு "ரிளாகானிய்யத்'' என்று கூறுவர். ஊரின்பால் தொடர்பு படுத்தி "பரேலவிய்யத்'' என்றும் கூறுவர்.
காதியானியிடம் ஆரம்பக் கல்வி
இவர் தனது ஆரம்பக் கல்வியை, தன்னை நபி என வாதிட்ட பொய்யன் மிர்ஸா குலாம் காதியானியின் சகோதரர் மிர்ஸா குலாம் காதிர் பேக்கிடமே கற்றார். இவர் பொய்யர், இஸ்லாமிய உண்மைக் கோட்பாடுகளுக்கு எதிரானவர் என்பதற்கு இதுவே போதுமான சான்றாகும்.

ஐயமும் தெளிவும்
ஐயம்:

 ரிளாகான் பரேலவிக்கு முன்பே இந்தியாவில் பித்அத், அனாச்சாரங்கள் தோன்றி விட்ட போது, தேவ்பந்த் உலமாக்கள் பரேலவிகளை மட்டும் சாடுவதற்கு, மறுப்பு கொடுப்பதற்குக் காரணம் என்ன?

தெளிவு:

 நியாயமான கேள்வி தான். இதற்கான விடையை சரியாக அறிய வேண்டுமெனில், பரேலவிகளுக்கு முன், பரேலவிகளுக்குப் பின் இருந்த இந்திய முஸ்லிம்களின் நிலையைத் தெரிந்து கொள்ள வேண்டும்.
இரண்டு வித்தியாசங்கள்
பரேலவிகள் தோன்றுவதற்கு முன்பே பித்அத், அனாச்சாரங்கள் இருந்து வந்த போதிலும் பரேலவிகளுக்கும் அதற்கு முந்தைய பித்அத்வாதிகளுக்கும் இரண்டு வித்தியாசங்கள் உள்ளன.

முதல் வித்தியாசம்:

பரேலவிகளுக்கு முன் எந்த ஆலிமும் பித்அத்தை இஸ்லாத்தின் போதனையாகவோ, மார்க்கத்தின் ஓர் அங்கமாகவோ கூறியதில்லை. இந்த பரேலவிகள் தான் முதன் முதலில் பித்அத்திற்கு இஸ்லாமிய வடிவம் கொடுத்து, இஸ்லாத்தின் ஓர் அங்கம் போல் ஒரு மாயையை ஏற்படுத்தினார்கள்.

இரண்டாவது வித்தியாசம்:

பித்அத்தைக் கண்டித்து சுன்னத்தை நிலைநாட்டும் உண்மையான உலமாக்களை முதன் முதலில் காஃபிர்கள் என்று முத்திரை குத்தியது பரேலவிகள் தான்.

நன்றி: மனாருல் ஹுதா
அக்டோபர் & நவம்பர்

0 comments:

Post a Comment

 

makkah live

Sample Text

madina live