27 Jan 2016

தேவ்பந்த்: ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஹாளிர் ,நாளிர் ரா?

ஷரஹ் ஷபாவில் سرفراز خان صفدر (ரஹ்)மோசடி செய்துள்ளார்களா?

பரலேவிகள், ஹள்ரத் இமாம் அஹ்லுஸ்ஸுன்னா பித்அத்துகளை களையெடுப்பவராக திகழ்ந்த "ஸர்பராஸ் கான் ஸப்தர்" (ரஹ்) அவர்கள் மீது சுமத்தும் குற்றச்சாட்டும் அதற்கு பதிலும்:

அல்லாமா முல்லா அலி காரி (ரஹ்) அவர்கள் காளி இயாள் (ரஹ்) அவர்களின் "ஷரஹ் ஷிபாவில்" உள்ள வாக்கியத்திற்கு விளக்கம் கொடுக்கிறார்கள் அதில் அல்லாமா முல்லா அலி காரி (ரஹ்)அவர்களின் அசலான வாக்கியமானது.

 لان روحه صلى الله حاضرة فى بيوت اهل الاسلام

 ஏனெனில் நபி (ஸல்) அவர்களின் உயிரானது இஸ்லாமியர்களின் வீடுகளிலே விஜயம் செய்கிறது.இவ்வாறு உள்ள இந்த வாசகத்தின் ஆரம்பத்தில் لا (இல்லை) என்ற இணைத்து மோசடி செய்துள்ளார்கள்.

 لا لان روحه حاضرة فى بيوت اهل الاسلام

 நபி ஸல் அவர்களின் உயிரானது இஸ்லாமியர்களின் வீடுகளிலே விஜயம் செய்வதில்லை.


தெளிவான பதில்:

அல்ஹம்துலில்லாஹ்! தேவ்பந்த் உலமாக்கள் அஹ்லுஸ்ஸுன்னா வல் ஜமாத் கொள்கைகளை குர்ஆன்,சுன்னா மற்றும் ஸஹாபாக்களின் நிலைப்பாடுகள் என  தெளிவான ஆதாரங்களின் மூலம்  நிரூபித்துள்ளார்கள்.எந்த ஒரு வாக்கியத்திலும் மோசடி செய்ய வேண்டிய தேவை சத்திய உலமாக்களுக்கு ஒரு போதும் கிடையாது.மோசடி என்பது பரலேவிகளின் ஊறிப்போன பழக்கமாகும்.இன்ஷா அல்லாஹ் அதனை பிறகு நிரூபிப்போம்!

மெளலானா ஸர்பராஸ் சப்தர் (ரஹ்) அவர்கள் தனது நூலான ஆன்கோ கி டன்டக்انکھوں کی( ٹھنڈک ) எழுதியுள்ளார்கள் அதில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்:

  சில பிரதிகளில் لا (இல்லை) என்ற வார்த்தையானது விடுப்பட்டுள்ளது.இதனை ஹள்ரத் போகிற போக்கில் கூறவில்லை மாறாக தெளிவான ஆதாரங்களின் மூலம் நிரூபித்துள்ளார்கள்.



நபி (ஸல்)அவர்களின் உயிரானது இஸ்லாமியர்களின் வீடுகளிலே விஜயம் செய்யும் என்ற வாசகத்தின் மூலம் சிலர் ஏமாந்து விட்டனர்.ஆனால் இது எதார்த்திற்கு எதிரானது. முஹத்திஸ் ஜலீல் ஷைகுல் ஹதீஸ் மதரஸா மஜாஹிருல் உலூம் ஸஹாரான்பூர் ஹள்ரத் மெளலானா யஹ்யா ஸாஹிப் காந்தலவி (ரஹ்) அவர்களின் சிறிய கட்டுரையில் علم غيب رسول ன் மூன்றாம் பக்கத்தில் (ஹள்ரத் மெளலானா ரஷீத் அஹ்மது கங்கோஹி ரஹ் அவர்களும் உண்மைப்படுத்தியுள்ளார்கள்).

ஷரஹ் ஷபாவின் சில பிரதிகளில் புத்தகத்தின் பதிப்பகத்தாரின் தவற்றின் காரணமாக لا (இல்லை) என்பது விடுபட்டுவிட்டது ஷரஹ் ஷபா மற்றும் சரியான கையெழுத்து பிரதியிலும் அச்சிடப்பட்ட பிரதியிலும் இந்த விஷயமானது தெளிவாகிறது.அவரின் வேறு நூல்களின் மூலமும் உறுதிப்படுத்தப்படுகிறது. இதன் மூலம் நமக்கு விளங்குகிறது.மெளலானா அவர்கள் கையெழுத்து மற்றும் அச்சுப் பிரதிகளுடன் ஒப்பிட்டுப் பார்த்து வாதிடுகிறார்கள்.
எனவே நாமும் அவரின் ஆய்வின் மீது நம்பிக்கை கொள்கிறோம்.
 ( ملا علی قاری اور مسئلہ علم غيب و حاضر و ناظر)



மெளலானா ஸர்பராஸ் ஸப்தர் (ரஹ்)அவர்கள் யூகத்தின் பேரில் சொல்லவில்லை மாறாக தெளிவான ஆதாரத்தின் மூலம் நிறுவியுள்ளார்கள்.


 அல்லாமா முல்லா அலி காரி (ரஹ்)அவர்களின் நூலான الدرة المضيئة فى الزيارة المصطفوية அதில் எழுதியுள்ளார்கள் :

நபி (ஸல்) அவர்களை ஜியாரத் செய்வதில் மிகப்பெரிய நன்மையானது ஜியாரத் செய்பவர் நபியின் கப்ருக்கு அருகில் நின்று கொண்டு நபி (ஸல்) அவர்கள் மீது ஸலாமும் ஸலவாத்தும் சொன்னால் அதனை நபியவர்கள் வெளிப்படையில் செவிமடுப்பார்கள்.எவரின் உதவியின்றி (மலக்குமார்களின்) ஸலாம் சொல்வார்கள்.இதற்கு மாற்றமாக நபியை விட்டு தூரமாக இருந்து ஸலாம் கூறினால் ஸலவாத் ஓதினால் (மலக்கின்) உதவியின்றி அடையாது.ஸஹீஹான ஹதீஸில் வந்துள்ளது யார் என் கப்ருக்கு அருகில் நின்று கொண்டு ஸலாம் சொல்வாரோ நான் அதனை செவிமடுக்கிறேன்.யார் தூரமாக ஸலாம் சொல்வாரோ (ஸலாமானது) எத்திவைக்கப்படும்.

இதன் மூலம் முல்லா அலிகாரி ரஹ் அவர்களின் தெளிவான வாசகத்தின் மூலம் நபி ஸல் அவர்கள் ஹாளிர்,நாளிர் கொள்கையை முற்றிலும் மறுத்துள்ளார் என்பதை விளங்கமுடிகிறது.

0 comments:

Post a Comment

 

makkah live

Sample Text

madina live