28 Jan 2016

பரேல்விகளின் குற்றச்சாட்டுக்கு தக்க பதில் : 4

மெளலானா அஷ்ரப் அலி தானவி ரஹ் அவர்களின் மல்பூஜாத்திலே பரலேவிகளால் சுமத்தப்படும் குற்றச்சாட்டும் அதற்கு தகுந்த மறுப்பும்:








நபி (ஸல்) அவர்களின் உருவத்திலே ஷைத்தான் கனவில் வரமாட்டான் என்பது சம்பந்தமாக கேள்வி கேட்கப்பட்டது. ஸஹாபாக்களிலே எவரையேனும் கனவில் பார்த்தால் உதாரணமாக அபூபகர் (ரளி) அன்ஹு உமர் ரளி அன்ஹு இவர்களின் உருவத்திலே ஷைத்தான் வரமுடியுமா? இதற்கு பதிலளித்தார்கள் பிரபல்யமான சொல்லின்படி நபிமார்களை தவிர கனவில் அனைவரின் உருவத்திலும் ஷைத்தான் வரமுடியும்.

இதனை முன்வைத்து பரலேவிகள் எழுப்புகிற குற்றச்சாட்டு அஷ்ரப் அலி தானவி அவர்கள் ஸஹாபாக்களுக்கு அவமரியாதை ஏற்படுத்தியுள்ளார்.

 நமது மறுப்பு: முதலில் நாம் ஒரு விஷயத்தை கவனம் வைக்கவேண்டும்! பெரியோர்களின் மல்பூஜாத்தை முன்வைத்து விமர்சிப்பதானது பரலேவிய பெரியோர்களிடத்தில் ஏற்கப்படாது.இதனை நாம் சுயமாக சொல்லவில்லை.

பரலேவிய அறிஞர் நூலில் குறிப்பிட்டுள்ளார்:

பெரியோர்களின் மல்பூஜாதிலே சில விஷயங்கள் அவர்களின் பக்கம் தவறுதலாக இணைக்கப்பட்டுவிடுகிறது.இதற்கு சாத்தியமும் உள்ளது.அசலான சம்பவம் ஒன்றாக இருக்கும்.எடுத்து சொல்பவரிடம் தவறு ஏற்பட்டுவிடலாம்.இது எவ்வாறெனில் ஹதீஸில் உள்ள அறிவிப்பாளர்கள் பலமாக இருப்பதுடன் சில சமயங்களில் ஹதீஸானது பலகீனமாக கருதப்படும்.(عبارات اکابر کا تحقیقی و تنقیذی جائزہ )  

 மற்றொரு பரலேவிய அறிஞர் குறிப்பிட்டுள்ளார்:
 மல்பூஜாத்தை முன்வைத்து அதற்குரியவரை குறை சொல்ல கூடாது.மல்பூஜாத்தானது வரலாற்று ரீதியாகவும்,எதார்தத்திலும் ஏற்கத்தக்கதல்ல.எனவே மல்பூஜாத்தை முன்வைத்து அல்லாஹ்வின் நேசர்களை எந்த குறையும் சொல்லப்படாது.
(رویئد اکابر تحقیقی و تنقیذی جائز حصہ اول)

முக்கிய குறிப்பு:
பரலேவிகள் தேவ்பந்த் உலமாக்களின் மல்பூஜாதில் விமர்சனங்களை வைப்பார்கள்.எனவே பரலேவிகளுக்கு எதிராக பல்வேறு விஷயங்களில் மேற்சொன்ன பரலேவிகளின் பெரியோர்களின் நிலைப்பாட்டை எடுத்து வைத்து அவர்களின் வாதங்களை முறியடிக்கலாம்.

பரலேவிகளின் முன்னோர்களிடம் மல்பூஜாதானது ஏற்கத்தக்கதல்ல எனும் போது அஷ்ரப் அலி தானவி (ரஹ்) அவர்களின் மல்பூஜாத்தை மட்டும் விமர்சிப்பதானது காழ்ப்புணர்ச்சியே தவிர வேறு எதுவாக இருக்க முடியும்? அஷ்ரப் அலி தானவி (ரஹ்) மீது எவ்வளவு பெரிய அபாண்டத்தை சுமத்துகிறார்கள்! பரலேவிகளுக்கு

கொஞ்சம் கூட வெட்கமில்லையா?

அடுத்து அஷ்ரப் அலி தானவி (ரஹ்)அவர்களைப் பற்றி பரலேவிய வழிமுறையைச் சேர்ந்த அறிஞர் மெளலவி ஃபைஜ் அஹ்மத் ஸாஹிப் எழுதியுள்ளார்:

மெளலவி தானவி ஸாஹிப்  முற்றிலும் மார்க்க ரீதியான கண்ணோட்டத்தில் நுணுக்கமாக அணுகுவது பொதுவான வழக்கமாகும்.(مہر منیر )

இந்த ஆதாரத்தின் மூலம் நாம் அறிய முடிகிறது.ஹள்ரத் மல்பூஜாதிலே கூறியது முற்றிலும் ஷரீஅத்தி ரீதியான கண்ணோட்டத்தில் நுணுக்கமான முறையில் அணுகியுள்ளார்கள். பரலேவிகள் இதற்கு மாற்றமாக வாதத்தை முன்வைத்து ஷரீஅத்திற்கு மாற்றம் செய்ய விரும்புகிறார்களா? அவ்வாறு இல்லையெனில்  அவர்களின் வழிமுறையைச் சேர்ந்த மெளலவி ஃபைஜ் அஹ்மத் ஸாஹிப் பொய்யர் என்பதாக ஏற்கவேண்டும் தயாரா?

அஷ்ரப் அலி தானவி (ரஹ்) எழுதியுள்ளார்கள்: 

பிரபல்யமான சொல் என்னவெனில் ஷைத்தான் கனவிலே நபிமார்களை தவிர அனைத்து உருவங்களிலும் வரமுடியும். அடுத்து பரலேவிய உலமாக்கள் இதற்கு எதிரான தெளிவான ஆதாரங்களை முன்வைத்து தானவி (ரஹ்) அவர்கள் சொன்னது தவறு என்பதை நிரூபிக்க முடியுமா? கியாமத் நாள் வரை அவகாசம் தருகிறோம்!

அஷ்ரப் அலி தானவி (ரஹ்) சொன்ன கருத்தானது சரியானது என்பதற்கு அடுக்கடுக்கான ஆதாரங்கள்:

ஹாபிள் இப்னுல் ஹஜர் (ரஹ்) கூறுகிறார்கள்:  

ஷைத்தான் எவரின் உருவத்தில் உருவெடுத்து கனவில் வருவதற்கு விரும்புகிறானோ அவனால் முடியும்.இதற்கு  அல்லாஹ் ஆற்றல் கொடுத்துள்ளான்.ஆனால் நபி ஸல் அவர்களின் உருவத்திலோ, வடிவத்திலோ வரமுடியாது.(فتح الباری باب کتاب التعبیر)

முல்லா அலி காரி (ரஹ்) கூறுகிறார்கள்:

 அல்லாஹ் நபிக்கு தனிச்சிறப்பை கொடுத்துள்ளான்.நபி (ஸல்) அவர்களை பார்ப்பதானது சரியாக இருக்கும்.ஷைத்தானுக்கு நபி (ஸல்) அவர்களின் உருவத்தில் வருவதானது தடுக்கப்பட்டுள்ளது.(حاشیہ مشکوة)


ஷைகு அப்துல் ஹக் முஹத்திஸ் தெஹ்லவி (ரஹ்) சில அறிஞர்கள் ஆய்வுடன் எழுதியுள்ளார்கள்:

ஷைத்தான் கனவிலே சில நபர்களிடத்தில் வந்து ஏமாற்ற முடியும்.நான் அல்லாஹ் என்பதாக ஆனால் நபியின் உருவத்தில் எப்பொழுதும் வரமுடியாது.(اشعة اللمعات كتاب الرويا )

இந்த அனைத்திலும் எதிர்மறைப் பொருள் (مفهوم مخالف) கொள்வதின் மூலம் இவ்வாறு கூறமுடியும்.

நபி (ஸல்) அவர்களின் உருவத்திலே ஷைத்தான் உருவம் எடுக்க மாட்டான்.அது அல்லாமல் ஒவ்வொருவரின் உருவத்திலும் கனவில் வரமுடியும்.  எதிர்மறை பொருள் கொள்வது சம்பந்தமான பாளில் பரலேவி ரிளாகானின் பத்வா:

ஸஹாபாக்கள் மற்றும் அவர்களுக்கு பிறகு உள்ள அறிஞர்களின் கூற்றிலே எதிர்மறை பொருள் கொள்வதானது கவனிக்கப்படும்.(فہارس فتاوی رضویہ)

 பரலேவிய மெளலவி ஃபைஜ் அஹ்மத் உவைஸி ஸாஹிப்  ஷைத்தான் எந்த நபியின் உருவத்தையும் தேர்ந்தெடுக்க முடியாது.மவாகிப் லதுன்யாவல் எழுதப்பட்டுள்ளது இது நபியின் தனிச்சிறப்பம்சங்களில் உள்ளது.

மாறாக ஃபைஜ் அஹ்மது உவைஸி இன்னும் ஒரு படி மேலே எழுதியுள்ளார் உலமாக்கள் இதனை நபி (ஸல்) அவர்களின் தனிச்சிறப்புகளிலே உள்ளது.நபி (ஸல்) அவர்களைத் தவிர மற்ற எந்த ஒரு நபருக்கும் இந்த தனிச்சிறப்பு கிடையாது.நபி (ஸல்) அவர்களை தவிர பெரும் பெரும் நபர்களின் உருவத்தை ஷைத்தான் தேர்ந்தெடுக்க முடியும்.(زائرین سرکار مدینہ)

 இந்த வாக்கியங்களை மீண்டும் மீண்டும் கவனித்துப் பாருங்கள்! தானவி (ரஹ்) மல்பூஜாத்தில் கூறியதற்கும் பரலேவிய அறிஞர் கூறியதற்கும் என்ன வித்தியாசம் உள்ளது? பரலேவிகள் நீதம் மற்றும் மார்க்கத்தின் அடிப்படைகளை செயல்படுத்தியவாறு அந்த அறிஞருக்கு எதிராக பத்வா கொடுக்க தயாரா? 

அஹ்மது ரிளாகான் பத்வா: நபி (ஸல்) அவர்களின் உருவத்தில் ஷைத்தான் உருவம் மாற முடியாது.நல்லோர்களின் உருவத்திலே வந்து ஏமாற்றம் முடியும்.இதற்கும் மேலாக தன்னைத்தானே இறைவன் என்பதாக வெளிப்படுத்த முடியும்.(فتاوی رضویہ)

 அடுத்து இது சம்பந்தமாக பரலேவிகளின் வாதங்களும் அதற்கான மறுப்பும்: 

கன்ஜுல் உம்மாலின் அறிவிப்பில் வருகிறது من رآني فى المنام فقد رآني فان الشيطان لا يتمثل بي ومن رآى ابابكر الصديق فقد رآه இந்த ஹதீஸின் மூலம் கனவில் அபூபகர் (ரளி) அவர்களை பார்த்தவர் அவரைதான் பார்த்தார் என வந்துள்ளது.

நமது பதில்:

கன்ஜுல் உம்மாலில் உள்ள ஹதீஸானது அறிவிப்பாளர் தொடர் அறவே இல்லை.பரலேவிகளுக்கு அவர்களின் பெரியோர்களின் கூற்றுகளுக்கு மட்டும் உறுதியான ஆதாரம் தேவை மற்றவர்களை விமர்சிக்கும் போது மட்டும் இது போன்ற அறிவிப்பாளர் தொடரில்லாதவை ஆதாரமா? அல்லாஹ்வின் பயமில்லையா? கொஞ்சமாவது வெட்கப்படுங்கள்! மற்றொரு ரிவாயத்தை எடுத்து வாதிடுகிறார்கள்.அந்த அறிவிப்பின் கருத்து கஃபாவின் தோற்றத்தில் வரமுடியாது என உள்ளது.

நமது பதில்: 

 இந்த அறிவிப்பானது ஆதாரப்பூர்வமானது அல்ல.

அடுத்த வாதம் فتاوی رضویہ நல்லோர்களின் உருவத்திலே வரமுடியும் என்றுதான் உள்ளது.உண்மையாளர்கள் என்பதாக இல்லை.மேலும் பதாவா ரிஜவிய்யாவிலே ஷைத்தான் தனது நாவின் மூலம் அல்லாஹ் என்பதாக வாதிடுவான் என்பதாகதான் உள்ளது.ஆனால் அல்லாஹ்வின் உருவத்திலே வரமுடியும் என்பது தேவ்பந்தியர்களின் பொய்யாகும்.

 நமது பதில்: 

 நபி ஸல் அவர்களை தவிர நல்லோர்களின் உருவத்திலே வரமுடியும் என்பதாக தான் பரலேவிகளின் அஃலா ஹள்ரத் கூறியுள்ளார் பரலேவிகளிடத்தில் ஹாபாக்கள் நல்லோர்கள் இல்லையா? ரிளாகானின் பதாவாவை நன்றாக கவனியுங்கள்! பொய் சொல்வது சத்திய உலமாக்களான தேவ்பந்தியினரா? அல்லது பரலேவியினரா? என்பதானது இதன் மூலம் விளங்க முடிகிறது.ரிளாகான் தெளிவாக எழுதியுள்ளார் خود الہ ظاہر سکتاہے ஷைத்தான் அல்லாஹ்வாக கனவில் வெளிப்படமுடியும்.

1 comments:

  1. தேவ்பந்தி தப்லீக் வஹாபிகளின் கலிமா
    அல் முஹன்னத்- 2
    தக்வியத்துல் ஈமான் மீது தேவ்பந்திகளின் கேள்வி
    தேவ்பந்தின் ஷிர்க்கை உண்டாக்கும் பெயர்கள் :
    அஷ்ரப் அலி தானவி கூறுகிறார் ,
    " லா இலாஹா இல்லல்லாஹு அஷ்ரப் அலி ரசூலுல்லாஹ் , அல்லாஹும்ம ஸல்லிஅலா செய்யதினா நபியினா அஷ்ரப் அலி என்று கூறுவதால் எந்த கேடும் இல்லை "
    [ரிஸாலா அல் இம்தாத் ,பக்கம் 35,சபர் மாதம் 1336 ஹிஜ்ரி ,ரூதத் ஏ முனாஜிரா கேயா,அல் புர்கான் வால்யூம் 3,பக்கம் 85 ]
    "லா இலாஹா இல்லல்லாஹு அஷ்ரப் அலி ரசூலுல்லாஹ் , அல்லாஹும்ம ஸல்லிஅலா செய்யதினா நபியினா அஷ்ரப் அலி என்று கூறுவது ஆகுமானதே ,அவ்வாறு கூறுவதால் ஷரீயத்தில் எந்த ஆட்சேபணையும் இல்லை "
    [ரிஸாலா அல் இம்தாத் ,பக்கம் 35, சபர் 1336, பதிப்பாளர்கள் இம்தாத் உல் மதாபே தானாபவன் ]
    அறிவார்ந்த இஸ்லாமிய சமூகமே இந்த தேவ்பந்தி தப்லீக் ஜமாத்தின் வெளிரங்க அமல்களைக் கண்டு உங்கள் ஈமானை இழந்து விடாதீர் .
    அவர்கள் நோக்கம் என்ன என்பதை தப்லீக் இயக்கத்தின் ஸ்தாபகார் மௌலவி இல்யாசே கூறுகிறார் , " எனது கருத்துகளை எவரும் விளங்கிக் கொள்ளவில்லை.ஜனங்கள் நினைகிறார்கள் .இது தொழுகைக்கு அழைக்கும் இயக்கம் என்று.நான் சத்தியமாக சொல்கிறேன் .இது ஒரு போதும் தொழுகைக்கு அழைக்கும் இயக்கமல்ல.மாறாக ஒரு புதிய கூட்டத்தை உண்டாக்குவதே இதன் நோக்கம் "
    [ நூல் : தீனி தஃவத் ,பக்கம் -234 ]
    இனி இவர்களின் முழுத்திட்டத்தை மௌலவி இல்யாஸ் இவ்வாறு கூருகிறார் ,
    "ஹஜ்ரத் மௌலானா அஷ்ரப் அலி தானவி அவர்கள் மிகப்பெரிய வேலை செய்திருக்கின்றார்கள் ,எனது மனம் விரும்புகிறது .கல்வி ,ஞானபோதனை அவர்களுடையதாகவும் ,தப்லீக் முறை என்னுடையதாகவும் இருக்கட்டும் .ஏனேனில் இவ்வாறு அவர்களுடைய (அஷ்ரப் அலி தானவியுடைய) போதனை விரிவாகி விடும் ."
    [நூல்:மல்பூஜாத்தே இல்யாஸ் ,பக்கம் -71,72]
    மேலும் இவர்கள் தானவியுடைய வஹ்ஹாபிய கொள்கைகளை வெளிப்படுத்தாது ,மறைமுகமாகவும் ,தந்திரமாகவும் போதிக்கின்றனர் என்பதையும் மௌலவி இல்யாஸ் பின்வருமாறு கூறுகின்றார் .
    " பொது மக்களிடம் இது விஷயம் கூறலாகாது .எங்கு அவசியமோ அங்கு நமது இரகசியங்களையும் ,நோக்கங்களையும் விளக்குவது பாதகமில்லை "
    [ நூல்: மல்பூஜாத்தே இல்யாஸ் ,பக்கம் -72]
    இத்தகைய வழிகேடர்களை விட்டும் அல்லாஹ் நம்மை அவன் ஹபீபின் பொருட்டால் காப்பானாக !!!

    ReplyDelete

 

makkah live

Sample Text

madina live