12 Nov 2015

பரேல்விகள் ஆங்கிலேயர்களால் தோற்றிவிக்கப்பக்கவர்களே!



பரேலவிகள் அன்றே ஆங்கிலேயர்களுக்கு விலை போனவர்கள்
மனாருல் ஹுதா இதழில் வெளியான,பரேலவிகள் ஒரு வரலாற்றுப் பார்வை என்ற கட்டுரையின் சில பகுதிகளை இங்கே தருகின்றோம்.
👇👇👇👇👇
ரிளாகான் பரேலவியின் காஃபிர் ஃபத்வா ஒரு வரலாற்றுப் பார்வை

இந்தியாவில் முன்பிருந்தே ஆலிம்களுக்குப் பஞ்சமில்லை. ஆனால் பல பாகங்களில் பிரிந்து வட்டார அளவில் மட்டும் தம் பணிகளைச் செய்து வந்தார்கள். கி.பி. 18ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நாளுக்கு நாள் ஆங்கிலேயரின் எழுச்சி ஒரு புறம், மறுபுறம் அரசியல், ஆன்மீகம், பொருளாதாரம், கல்வி,ஒழுக்கம் எல்லா மட்டத்திலும் முஸ்லிம்களின் வீழ்ச்சி. இதைக் கவனத்தில் கொண்டு நாட்டின் பல பாகங்களில் பிரிந்து கிடக்கின்ற பல்வேறு சிந்தனை கொண்ட அனைத்து உலமாக்களும் ஒரு பொதுத் திட்டத்தின் அடிப்படையில் ஒன்றிணைந்து கூட்டமைப்பாக செயல்படலாம் என்று முடிவானது.

நத்வத்துல் உலமா

இதனடிப்படையில் மௌலானா முஹம்மது அலீ மூங்கீரி (ரஹ்) அவர்களின் பெரும் முயற்சியால் (கி.பி. 18ம் நூற்றாண்டு பிற்பகுதி) ஹிஜ்ரீ 1311ல் கான்பூரில், நாட்டின் அனைத்துப் பகுதியிலிருந்தும் பல்வேறு சிந்தனை கொண்ட முக்கிய உலமாக்கள் கூடினார்கள். இந்த அமைப்பிற்கு நத்வத்துல் உலமா (உலமாக்கள் சங்கம்) என்றும் பெயரிடப்பட்டது. அநேகமாக இந்திய வரலாற்றில் அதற்கு முன்பு இவ்வாறு அனைத்து உலமாக்களும் கூடிய சரித்திரம் இல்லை.

வெளிநடப்பு

அனைத்து உலமாக்களும் ஓரணியில் திரண்ட பின் இனி இந்திய முஸ்லிம்களுக்குப் பிரகாசமான எதிர்காலம் தான் என்று உறுதியாக நம்பப்பட்டது. ஆனால் அந்த முதல் கூட்டத்திலேயே ஒரே ஒரு நபர் மட்டும் ஏதோ காரணம் கூறி வெளிநடப்புச் செய்து,கூட்டத்தைப் புறக்கணித்தார். அவர் தான் அஹ்மது ரிளாகான் பரேலவி.

புறக்கணித்தது மட்டுமன்றி நத்வத்துல் உலமாவின் அனைத்து ஆலிம்களையும் காஃபிர் ஃபத்வா கொடுத்து, சொல்ல முடியாத அசிங்கமான வார்த்தைகளால் வசை பாடி நூலுக்கு மேல் நூல் எழுதினார். கிட்டத்தட்ட நூறு நூல்கள் எழுதி பல்லாயிரக்கணக்கான பிரதிகள் அச்சிட்டு விநியோகித்தார்.

இவ்வளவுக்கும் அவர் சொன்ன காரணம் இது தான். அதாவது, "70 காரணங்களால் காஃபிராகி விட்ட ஷாஹ் இஸ்மாயீலை ஏற்ற வஹ்ஹாபிகளையும் நத்வாவில் இணைத்ததால் எல்லா ஆலிம்களும் காஃபிராகி விட்டனர்''

ஆங்கிலேயரின் மனசாட்சி

இங்கு நன்கு கவனிக்க வேண்டும். ஷாஹ் இஸ்மாயீல் தெஹ்லவீ அவர்களுக்கும்,அவர்களது படைக்கும் வஹ்ஹாபிகள் என்று பொய்ப் பிரச்சாரம் செய்தது ஆங்கிலேயர்கள் தான். அதே பெயரை ரிளாகானும் பயன்படுத்துகின்றார்.

மேலும் இந்தியாவின் அனைத்து உலமாக்களும் சேர்ந்து ஆரம்பித்த நத்வத்துல் உலமா அமைப்பை ரிளாகான் என்ற ஒரு தனிநபர் மட்டும் எதிர்த்து நூல் எழுதவும், அந்த அமைப்பையே இல்லாமல் செய்யவும் முடிந்தது என்றால் ஆங்கிலேயருடன் அஹ்மது ரிளாகான் பரேலவிக்கு ஆங்கிலேயரின் மனசாட்சியாகச் செயல்படும் அளவுக்குத் தொடர்பு இருந்தது என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

நத்வத்துல் உலமா அமைப்பு மட்டும் துவங்கிய வீரியத்தோடு செயல்பட்டு இருந்தால்,இந்தியாவின் சரித்திரமே மாறி முஸ்லிம்கள் அசைக்க முடியாத சக்தியாக மாறி இருப்பார்கள்.

ஒட்டுமொத்த இந்திய முஸ்லிம்களுக்கும் காலம் காலம் நஷ்டத்தை ஏற்படுத்திய இந்த அஹ்மது ரிளாகான் பரேலவி முஸ்லிம்களின் எதிரி என்பதில் என்ன சந்தேகம் இருக்க முடியும்?....

...இதே ரிளாகான் பரேலவி தான் ஆங்கிலேயர்களுக்கு எதிராக உலமாக்களும் முஸ்லிம்களும் போரிட்டு வீர மரணம் அடைந்து கொண்டிருந்த வேளையில்,இந்தியா தாருஸ்ஸலாம் - இஸ்லாமிய நாடு தான்; முஸ்லிம்கள் ஆங்கிலேயரை எதிர்த்துப் போர் செய்யக் கூடாது என வலியுறுத்தினார். அதற்காக ஆங்கிலே யரைப் புகழ்ந்தும்,ஆங்கிலேயருக்கு எதிரான போரைக் கண்டித்தும் பல நூல்களை எழுதி ஆயிரக்கணக்கில் அச்சடித்து விநியோகித்தார்.

ஆங்கிலேயர்களுடன் போரிடுவது நம் கடமை என்று மார்க்கத் தீர்ப்பு கொடுத்த மௌலானா அப்துல் அஜீஸ் அவர்களையும் அன்னாரின் சீடர்களையும் இவர் காஃபிர் - இறை மறுப்பாளர் என்று ஃபத்வா கொடுத்தார்.

இப்போது சொல்லுங்கள். பரேலவிய்யத் ஆங்கிலப் பிள்ளையா? இல்லையா?

தனது ரிளாகான் என்ற பெயரை அப்துல் முஸ்தபா என்று மாற்றிக் கொண்டார்.

இத்தகைய தவறான கோட்பாடுகளையும்,சிந்தனையும் கொண்ட இவராலும் இவரது சீட கோடிகளாலும் பரப்பப்பட்டதே பரேலவிய்யத் ரிளாகானிய்யத்.

0 comments:

Post a Comment

 

makkah live

Sample Text

madina live