20 Aug 2015

தப்லீக் ஜமாதில் குர்ஆன் வாசிக்கக்கூடாது என்று கூறுகிறார்களா??

தப்லீக் ஜாமத்தில் குர்ஆனின் மொழிபெயர்ப்பு வாசிக்க கூடாது ,அதன் விளக்கவுரைகள் வாசிக்க கூடாது, ஹதீஸ் விளக்கவுரைகள் வாசிக்க கூடாது என்று சொல்லிக் கொடுப்பதாக முட்டாள்தனமான கருத்துக்களை இந்த பக்கத்தில் ஒருவர் எம்மிடம் வினவி இருந்தார்.
அவரிடம் நாம் கேட்ட கேள்வி நீங்கள் தப்லீக் பணியில் சென்றிருக்கின்றீர்களா???

அவர் இது வரை சென்றது கிடையாது என்று பதில் அளித்தார்...



அப்படியாயின் இந்த கருத்தை எப்படி கூறினீர்கள் என்று கேட்டோம்,
இணையத்தில் ஏதோ ஆக்கத்தில் பதிவு செய்ய பட்டிருந்ததாக கூறினார்.
அல்லாஹு அக்பர்- யாரோ ஒருவர் கூறியதை கொண்டு பலரின் வாழ்வின் மாற்றதுக்கு காரணமான ஒரு ஈமானிய உழைப்பை பற்றி இந்தளவு அவதூறை பரப்புகின்ரீர்களே என்று வினவினோம்..
அல்லாஹ்வின் உதவியால் அவர் தன் கூற்றுக்கு மன்னிப்பு வேண்டிய பின் தப்லீக் ஜாமத்தின் நிறை , குறைகள் , இன்றைய செயற்பாடுகள் , அதன் நடவடிக்கைகள் பற்றி உரையாடி விட்டு, சில தெளிவுகள் பெற்ற பின் , இன்ஷா அல்லாஹ் தானும் அல்லாஹ்வின் பாதையில் குறிப்பிட்ட காலம் போவதற்கு முயற்சிப்பதாக கூறி விடை பெற்று சென்றார் ...


............................................................
.......................................
அன்பின் நண்பர்களே : அல்லாஹ்வின் மீது சத்தியமாக சொல்கின்றோம், தப்லீக் ஜாமத்தில் ஒரு போதும் குரான் விளக்கவுரைகள் வாசிக்க கூடாது, அதன் மொழி பெயர்ப்பு பார்க்க கூடாது,ஹதீஸ் விளக்கவுரைகள் வாசிக்க கூடாது என்று வழி காட்டுவது கிடையாது ....

ஆரம்ப காலத்தில் குரான் தர்ஜுமா வாசிக்க முன்னால் , குரானை ஓத கூட தெரியாத நிலையில் இருந்த பலர், குரானை ஓதுவதற்கு தன்னை தயார் படுத்திக் கொண்டார்கள் ...
இதனால் குரானை ஓதுவதற்கு மக்களை தாயார் படுத்துவதட்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுக்க பட்டது.
அந்த சந்தர்பத்தில் சில தப்லீக் ஜாமத்தை பற்றிய புரிதல் இல்லாத தப்லீக் ஜாமத்தில் இணைந்து கொண்ட ஒரு சிலர் குர்ஆன் தர்ஜுமா படிக்க முதல் தஹ்லீமில் உள்ள குரானின் சிறப்புகளை படிங்கள் என்ற கருத்தில் சில நேரங்களில் குரான் தர்ஜுமா படிக்காதீர்கள் என்ற வாசகங்களை உபயோகித்த நிலையில் தப்லீக் தலைமையகத்தால் இது கண்டிக்க பட்ட வரலாறுகளும் உள்ளன ....

எனவே நாம் சொல்ல வரும் விடயம் என்னவென்றால் தப்லீக் ஜமாஅத் ஒரு போதும் குரான் தர்ஜுமா படிக்க கூடாது ,தப்சீர்கள் வாசிக்க கூடாது, ஹதீஸ் விளக்க உரைகள் வாசிக்க கூடாது, நடைமுறையில் வாசிக்க கூடிய தஹ்லீம் மட்டுமே வாசிக்க வேண்டும் என்ற எந்த வழிகாட்டலும் ஒரு போதும் வழங்கப் பட வில்லை என்பதை தவறாக புரிந்து கொண்டுள்ள அன்பர்கள் விளங்கி கொள்ளவும் ...


அண்மை காலமாக ஒவ்வொரு நாளும் தப்லீக்கின் தலைமையகமான டில்லி மர்கசில் தற்போதைய அமீர் மௌலானா சாத் சாப் வலியுறுத்தும் ஒரு விடயத்தை இங்கு பகிர்கின்றோம்...






***"சகோதரர்களே அல்லாஹ்வின் பரிசுத்த வேதமான குரானில் பிராகசம் உண்டு , ஹிதாயத் உண்டு, அதை வெறுமனே ஓதுவதோடு நிறுத்திக் கொள்ளாதீர்கள் ஓதுவதன் மூலம் நன்மையை பெற்றுக் கொண்டாலும் குரான் எதிர் பார்க்கும் அந்த மற்றதை அடைந்து கொள்ள மாட்டீர்கள், கண்டிப்பாக அதன் மொழியாக்கத்தை படியுங்கள், அதன் தப்சீர்களை வாசியுங்கள், அல்லாஹ்வின் பாதையில் செல்ல கூடிய ஒவ்வொரு தாயிகளும் கண்டிப்பாக உங்கள் பைகளில் குரான் தர்ஜுமா, தப்சீர்களை வைத்துக் கொள்ளுங்கள், ஜாமத்தில் இதை தனிப்பட்ட ரீதியில் படிப்பதற்கு நேரம் எடுத்துக் கொள்ளுங்கள், மார்க்கத்தை படிப்பதற்கு முக்கியத்துவம் கொடுங்கள் "

-அண்மை காலமாக மௌலான சாத் சாப் தப்லீக் தலைமை மர்கசில் அடிக்கடி வலியுறுத்தி பேசக் கூடிய விடயமே இது......

எனவே அன்பின் இஸ்லாமிய நண்பர்களே குரானை படிபோம் , அதன் மொழியாக்கத்தை வாசிபோம் , தப்சீர்களை படிபோம் , ஹதீஸ் நூல்களை வாசிபோம் , ஹதீஸ் விளக்கங்களை அறிவோம் , சிறந்த விளக்கம் உள்ள உலமாக்களை அணுகுவோம்,தெளிவுகளை பெறுவோம் என்றும் குரான், சுன்னாவின் ஒளியில் ஈமானின் சுவையை பெற்றுக் கொள்வோம்,
அல்லாஹ்வின் பாதையில் என்றும் முயற்சிப்போம் ஈருலக வெற்றிக்காக ...

0 comments:

Post a Comment

 

makkah live

Sample Text

madina live