27 Jun 2021

பரேல்விய கருத்து மோதல்கள் !


பைஜுல் ரஸுல் Vs அஹ்மத் யார்தான் நயீமி 

பைஜுல் ரஸுல் பரேல்வி எழுதியுள்ளார் :
சந்தேகமின்றி நபிமார்களின் இறுதியானவர் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுக்கு பிறகு ஏதேனும் நபி பிறப்பது ஷரீஅத் ரீதியாக (محال) அசாத்தியமானது.மேலும் அறிவுரீதியாக சாத்தியமுள்ளது.(ஆதாரம்:பதாவா பைஜுல் ரஸுல் 1/9)

அஹ்மத் யார்கான் நயீமி எழுதியுள்ளார்: 
நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுக்கு பிறகு நுபுவ்வத்தில் சாத்தியமுண்டு என்பதாக ஏற்பதும் அவர் காபிர் தான்.
(இல்முல் குர்ஆன், பக்கம்:99)

இக்திதார் அஹ்மத் பரேல்விvs 
பரேல்வி Vs அஹ்மத் யார்கான் நயீமி

இக்திதார் அஹ்மத் பரேல்வி எழுதியுள்ளார்:
ஸலாமின்றி தரூத் ஷரீப் ஓதுவது குர்ஆனின் சட்டத்திற்கு எதிரானது.இதனால் மக்ரூஹ் தஹ்ரீம்.ஒவ்வொரு மக்ரூஹ் தஹ்ரீம் பெரும் பாவமாகும்.
(ஆதாரம்:தன்கீதாத் அலா மத்பூஆத் 210)

அஹ்மத் யார்கான் நயீமி எழுதியுள்ளார்: صلى الله تعالى على خير خلقه و نوره و عرشه سيدنا محمد و آله و أصحابه اجمعين امين برحمتك يا ارحم الراحمين 
(ஆதாரம்:ஜாஅல் ஹக் பக்கம்:)

பரேல்வி கவ்கப் நூரானி Vs பரேல்வி ரிஜாகான் பரேல்வி 

கவ்கப் நூரானி பரேல்வி எழுதியுள்ளார்: இந்துக்களின் ஹோலி, தீபாவளி போன்றவைகளின் உணவு  அனுமதி 
(ரஷீத் அஹமது கங்கோஹி (ரஹ்) கிதாப் பதாவா ரஷீதிய்யா 2/123)
இதனை குறித்து விமர்சிக்கிறார்.👇👇

இதனை ரஸுலின் விரோதி,ஈமான் இல்லாதவர்தான் கூறமுடியும்...............
மேலும் கூறுகிறார்:
தங்களுக்கு திகைப்பு ஏற்படும்.இப்படிப்பட்ட விஷயத்தை யார் கூறமுடியும்? எழுதமுடியும்? தன்னைத்தானே முஸ்லிம்,முஃமீன் என்பதாக கூறுபவர் ஒரு போதும் இப்படிப்பட்ட விஷயத்தை கூறமாட்டார் என்பதாக தாங்களே கூறுவீர்கள்.எனினும் வேதனை என்னவெனில் இந்த விஷயத்தை அறிவற்ற நாட்டுப்புறத்தான் கூறவில்லை.தன்னைத்தானே இக்காலத்தின் ஆலிம், முழுமையாக விளக்கமுடையவர் முஜத்திதே மில்லத்..... (ஆதாரம்:தேவ்பந்த் ஸே பரேல்வி பக்கம்:36,37)

 தேவ்பந்த் அறிஞர் ஹழ்ரத் மெளலானா ரஷீத் அஹ்மத் (ரஹ்) அவர்களை கடுமையாக சகட்டுமேனிக்கு விமர்சிக்கிறார்.அந்த விமர்சனம் அப்படியே ரிஜாகான் பரேல்வியின் மீது திரும்பும் ஆச்சரியத்தை பாருங்கள்
👇👇👇👇👇👇👇

பரேல்விகளின் தலைவன் அஹ்மத் ரிஜாகான் பரேல்வி எழுதியதை பாருங்கள்

கேள்வி:
காபிர் ஹோலி,தீபாவளி இனிப்பு போன்றவைகளை பங்கிட்டால் வாங்குவது கூடுமா? கூடாதா?

பதில்:
அந்த நாள் வாங்காதீர்.அடுத்த நாள் வாங்கி கொள்ளுங்கள் (ஆதாரம்:மல்பூஜாத், முதல் பகுதி பக்கம்:163)

இல்யாஸ் காதிரி Vs பரேல்விய முஹம்மதுல்லாஹ் ததா 

பரேல்வி அறிஞர் எழுதியுள்ளார்:
அல்லாஹ் ஹாஜிர்,நாஜிர் என கூறமுடியுமா? முடியாதா? பதில்: முடியாது.அல்லாஹ் عالم الغيب والشهادة மறைந்திருந்தப்பதை,வெளிப்படுவதை அறிபவன்.அவனை விட்டும் எந்த ஒன்றும் மறைந்ததில்லை.அவன் கேட்பவனாக,பார்ப்பவனாக,மிக அறிந்தவனாக,மிக தெரிந்தவனாக இருக்கிறான்.
(குப்ரிய்யாதே கலிமாத் கே பார மே ஸுவால் ஜவாப் 571)

பரேல்விய அறிஞர் முஹம்மதுல்லாஹ் ததா எழுதியுள்ளார்:
நாம் கான் ஸாஹிபிடத்தில் இதனை கேட்டோம் அல்லாஹுத்தஆலா ஒவ்வொரு இடத்திலும் ஹாஜிர்,நாஜிர் ஏற்க வேண்டுமா? இல்லையா? ஏற்கவில்லையானால் தெளிவான குப்ர்.ஏனெனில் அல்லாஹ் والله على كل شهيد (ஆதாரம்:தன்வீருல் கவாதிர்  பக்கம்:70)

குலாம் முயீனுத்தீன் பரேல்வி Vs இல்யாஸ் காதிரி பரேல்வி 

குலாம் முயீனுத்தீன் பரேல்வி எழுதியுள்ளார்:

زمانے میں بہروپیا بن آ یا

நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் காலத்திலே நிறமாறியவராக வந்தார்.(ஆதாரம்:அஸ்ராருல் முஸ்தாக் 27)

முக்கிய குறிப்பு: உர்துமொழி அகராதி நூலில் بہروپیا என்பதற்கு பல அர்த்தங்கள் உண்டு.எந்த அர்த்தமும் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுக்கு பொருந்திவராது.ஒரு வாதத்திற்கு நல்ல தீய இருவித அர்த்தங்கள் வந்தாலும் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுக்கு பயன்படுத்தக்கூடாது என்பதுதான் பரேல்விகளின் நிலைப்பாடாகும்.

 இல்யாஸ் காதிரி நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களை بہروپیا என்பதாக கூறுவது கடுமையான இறை நிராகரிப்பு .
(ஆதாரம்:குப்ரிய்யாதே கலிமாத் கே பார மே ஸுவால் ஜவாப் பக்கம்:225)

1 comments:

  1. how to make money betting on soccer (with some strategies)
    If you can make money betting on football games, you're well in the งานออนไลน์ right place. How do I bet? It is a very simple process but it can

    ReplyDelete

 

makkah live

Sample Text

madina live