Pages

28 Nov 2017

மீலாத் விழா குறித்து பரேல்விகளின் விதண்டாவாதமும் அதற்கு நமது தக்க மறுப்பும்.

 மீலாத் விழா மற்றும்
மீலாத் கொண்டாட்டம் குறித்து குர்ஆன்,ஹதீஸ், ஸஹாபாக்களின் வழிமுறை, இமாம்களின் நடைமுறைகளைக் கொண்டு நிரூபிக்கமுடியாமல் நன்மையான காரியம்தானே! நன்மையான காரியத்தை தடுப்பதற்கு நீங்கள் யார்? அல்லாஹ் ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தடுத்துள்ளார்களா? என்பதாக பரேல்விகள் அறிவுப்பூர்வமாக வாதம் எழுப்புவதாக நினைத்துக்கொண்டு அறியாமை நிறைந்த வாதங்களை எழுப்புகின்றனர்.



நமது தக்க மறுப்பு:

  பரேல்விகளிடத்தில் நமது கேள்விகள்

(1) பாங்கில் حي علی خير العمل 
(நல்ல அமலின் பக்கம் வாருங்கள்!)
என்று கூறுவதை அல்லாஹ், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தடுத்துள்ளார்களா? ஒரு போதும் இல்லை.பிறகு நீங்கள் ஏன் கூறுவதில்லை? நல்ல அமலின் பக்கம் வாருங்கள் என்று அழைப்பது குற்றமா? பாவமா? நல்ல செயல்தானே?

(2)பாங்கின் இறுதியில் லா இலாஹ இல்லல்லாஹ்விற்கு பிறகு முஹம்மது ரசூலுல்லாஹ் என்று கூறுவதை அல்லாஹ், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தடுத்துள்ளார்களா? ஒரு போதும் தடைசெய்யவில்லை.பிறகு நீங்கள் ஏன் கூறுவதில்லை? முஹம்மது ரசூலுல்லாஹ் என்று கூறுவது நன்மையான செயல் இல்லையா?

(3) பாங்கின் இறுதியில் லா இலாஹ இல்லல்லாஹ் இரு தடவை சொல்வதை அல்லாஹ், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தடுத்துள்ளார்களா? ஒரு போதும் தடைசெய்யவில்லை.பிறகு நீங்கள் ஏன் கூறுவதில்லை? லா இலாஹ இல்லல்லாஹ் என்று கூறுவது நன்மையான செயல் இல்லையா?



(4) காயிப் ஜனாஸா தொழுவதை அல்லாஹ், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தடுத்துள்ளார்களா? ஒரு போதும் தடைசெய்யவில்லை.பிறகு நீங்கள் ஏன் தொழுவதில்லை?

(5) பாங்கில் اشهد ان امير المؤمنین و امام المتقین علیا ولی اللہ என்று கூறுவதை அல்லாஹ், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தடுத்துள்ளார்களா? ஒரு போதும் தடைசெய்யவில்லை.பிறகு நீங்கள் ஏன் கூறுவதில்லை? அலி (ரளி) அவர்கள் முஃமீன்களின் தலைவர் இல்லையா? பயபக்தியாளர்களின் இமாம் இல்லையா அல்லாஹ்வின் நேசர் இல்லையா?
சாட்சி  கூறுவது நன்மையான செயல் இல்லையா?

(6) மஃரிப் பாங்கிற்கு பிறகு ஜமாஅத் தொழுகைக்கு முன்பாக இரண்டு ரக்அத் நபில் தொழுவதை அல்லாஹ், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தடுத்துள்ளார்களா? ஒரு போதும் தடைசெய்யவில்லை.பிறகு நீங்கள் ஏன் தொழுவதில்லை? நபில் தொழுவது நன்மையான செயல் இல்லையா?

(7)ஈத் தொழுகைக்கு முன்பாக பின்பாக ஈத்கா திடலில் இரண்டு ரக்அத் நபில் தொழுவதை அல்லாஹ், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தடுத்துள்ளார்களா? ஒரு போதும் தடைசெய்யவில்லை.பிறகு நீங்கள் ஏன் தொழுவதில்லை? நபில் தொழுவது நன்மையான செயல் இல்லையா? குற்றமான செயலா? பாவமான செயலா?

(8) ஈத் ஜமாஅத்திற்காக பாங்கு,இகாமத் கூறுவதை அல்லாஹ், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தடுத்துள்ளார்களா? ஒரு போதும் தடைசெய்யவில்லை.பிறகு நீங்கள் ஏன் பாங்கு, இகாமத் கூறுவதில்லை? பாங்கு,இகாமத்  கூறுவது நன்மையான செயல் இல்லையா?

(9)பாங்கில் ترجیع
(ஷஹாதத்தை மெதுவாக கூறிய பிறகு சப்தமாக) கூறுவதை அல்லாஹ், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தடுத்துள்ளார்களா? ஒரு போதும் தடைசெய்யவில்லை.பிறகு நீங்கள் ஏன் கூறுவதில்லை? கலிமா ஷஹாதத் கூறுவது நன்மையான செயல் இல்லையா?

(10) இமாம்,முக்ததி சப்தமிட்டு ஓதும் தொழுகையில் ஆமீன் சப்தமிட்டு சொல்வதை அல்லாஹ், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தடுத்துள்ளார்களா? ஒரு போதும் தடைசெய்யவில்லை.பிறகு நீங்கள் ஏன் சப்தமிட்டு ஆமீன் கூறுவதில்லை?  ஆமீன் சப்தமிட்டு கூறுவது நன்மையான செயல் இல்லையா?

(11) தொழுகையில் நெஞ்சின் மீது கைகட்டுவதை அல்லாஹ், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தடுத்துள்ளார்களா? ஒரு போதும் தடைசெய்யவில்லை.பிறகு நீங்கள் ஏன் நெஞ்சில் கைகட்டுவதில்லை?

(12) பர்ளான தொழுகைகள் உதாரணமாக மஃரிப் ழுகையில் நான்காவது ரக்அத்தை சேர்த்தி தொழுவதை அல்லாஹ், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தடுத்துள்ளார்களா? ஒரு போதும் தடைசெய்யவில்லை.பிறகு நீங்கள் ஏன் நான்கு ரக்அத் தொழுவதில்லை? தொழுவது  நன்மையான செயல் இல்லையா?

(13) பர்ளு தொழுகையில் ஸுப்ஹானகல்லாஹும்ம விற்கு பதிலாக அல்லாஹும்ம பாயித் பைனி வ பைன கதாயா ஓதுவதை அல்லாஹ், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தடுத்துள்ளார்களா? ஒரு போதும் தடைசெய்யவில்லை.பிறகு நீங்கள் ஏன் கூறுவதில்லை? பாவத்தை விட்டு விலக துஆ செய்வது நன்மையான செயல் இல்லையா?

( 14)குனூத், வித்ரின் ருகூவிற்கு பிறகு ஓதுவதை அல்லாஹ், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தடுத்துள்ளார்களா? ஒரு போதும் தடைசெய்யவில்லை. நீங்கள் ஏன் ருகூவிற்கு பிறகு குனூத் கூறுவதில்லை? குனூத் ஓதுவது  நன்மையான செயல் இல்லையா?



(15)ஈத் தொழுகையில் அதிகப்படியான 12 தக்பீர்கள் கூறுவதை அல்லாஹ், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தடுத்துள்ளார்களா? ஒரு போதும் தடைசெய்யவில்லை.பிறகு நீங்கள் ஏன் கூறுவதில்லை? தக்பீர் கூறுவது நன்மையான செயல் இல்லையா? பாவமான செயலா?

(16)ஜனாஸா தொழுகையில் சூரா பாத்திஹா ஓதுவதை அல்லாஹ், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தடுத்துள்ளார்களா? ஒரு போதும் தடைசெய்யவில்லை.பிறகு நீங்கள் ஏன் கூறுவதில்லை? சூரா பாத்திஹா ஓதுவது நன்மையான செயல் இல்லையா?

(17) ஜனாஸா தொழுகையில் தக்பீர்கள் சொல்லும் போது கையை உயர்த்துவதை அல்லாஹ், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தடுத்துள்ளார்களா? ஒரு போதும் தடைசெய்யவில்லை.பிறகு நீங்கள் ஏன் கையை உயர்த்துவதில்லை ? கையை உயர்த்துவது நன்மையான செயல் இல்லையா?

(18)முதல் இருப்பில் தஷஹ்ஹுத்திற்கு பிறகு தரூத்  ஓதுவதை அல்லாஹ், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தடுத்துள்ளார்களா? ஒரு போதும் தடைசெய்யவில்லை.பிறகு நீங்கள் ஏன் கூறுவதில்லை? தரூத் ஓதுவது நன்மையான செயல் இல்லையா?

(19)ஸஜ்தா திலாவத் வணக்கமாகும்.ஸுரா ஹஜ்ஜில் இரண்டு ஸஜ்தா உள்ளது.இரண்டாவது ஸஜ்தா செய்வதை அல்லாஹ், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தடுத்துள்ளார்களா? ஒரு போதும் தடைசெய்யவில்லை.பிறகு நீங்கள் ஏன் இரண்டாவது ஸஜ்தா செய்வதில்லை? ஸஜ்தா செய்வது நன்மையான செயல் இல்லையா?

ஆக, இந்த சந்தர்ப்பங்களில் மேற்கூறிய அமல்களை ,
நன்மையான காரியங்களை அல்லாஹ்,நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தடுக்கவில்லையெனும் போது
நீதமான செயல் என்னவெனில் மேற்கூறிய அனைத்து நல்ல அமல்களையும் செய்ய வேண்டும்.அல்லது அத்துணை அமல்களையும் பாவமான காரியங்கள் என்பதை ஏற்கவேண்டும்.
அல்லாஹ் பாதுகாப்பானாக!

குறிப்பு:

நாம் மேற்கூறிய அமல்கள் அனைத்தையும் ஹனபி மத்ஹபின் பேரில் கடைப்பிடிக்கிறோம்.இங்கு பரேல்விகளின் விதண்டாவாதத்திற்கும் அறியாமைக்கும் மறுப்பாக தான் கேள்விகளை எழுப்பினோம்.பித்அத்தான செயல்களுக்கு மார்க்க வடிவம் கொடுப்பது,முட்டுகொடுப்பது போன்ற செயல்களுக்கு மறுப்பளித்து அவர்களின் உண்மை முகத்தை தோலுரித்து நடுநிலையாளர்களுக்கு புரியவைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் எழுதப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment