Pages

7 May 2017

பரேல்விகளின் திரிபுகள் தொடர் -5

ஹஜ்ரத் அக்தஸ் பீர் மெஹ்ரே அலி அவர்களின் மக்தூபாதில் கடிதங்கள் வருகிற
நிகழ்வு (கருத்து)

நபி (ஸல்) அவர்கள் முஹ்தாரே குல் (அனைத்து விஷயங்களிலும் சுய அதிகாரம்
பெற்றவர்) என்ற கொள்கையை தவறு என்கிறார்கள்.அதற்குரிய ஆதாரமாக கூறுகிறார்கள்
பெருமானார் (ஸல்) அவர்களின் பெரிய தந்தை அபூதாலிப் அவர்கள் ஈமானில் வரவேண்டும்
என ஆசைப்பட்டார்கள்.எனினும் நிறைவேறவில்லை.எனவே நபி (ஸல்) அவர்களுக்கு இந்த
அதிகாரம் இல்லையெனும் போது நல்லோர்களுக்கு இந்த அதிகாரம் எப்படி கிடைக்கும்?
அல்லாஹ் அனைத்துவித அதிகாரங்களையும் நபி ஸல் அவர்களுக்கு நல்லோர்களுக்கும்
கொடுத்துவிட்டு சும்மா உட்கார்ந்து கொண்டானா?
(மக்தூபாதே தய்யிபாதே மஃரூபா பிமெஹ்ரே சிஷ்திய்யா பக்கம்:127)


ஹஜ்ரத் பீர் மெஹ்ர் அலி ஷாஹ் ஸாஹிப் அவர்கள் மக்தூபாதில் கூறுவதானது  பரேல்விய
நூதன கொள்கையான முஹ்தாரே குல் (அனைத்து சுயவிருப்பம்
பெருமானார் (ஸல்) அவர்களுக்கு உண்டு) என்பதற்கு முற்றிலும் எதிராக
உள்ளது.இதனால் 1996 லே வெளியிட்ட பதிப்பில் பெரியோரின் தவறு என்பதை ஏற்றவாறு
முழுமையாக நீக்கிவிட்டனர்.

மெளலவி ஹஸனைன் ரிஜா அவர்கள் அஃலா ஹஜ்ரதின் 'வஸாயா ஷரீப்' எழுதினார்.அதில்
வருகிற நிகழ்வு :

மெளலவி அஹ்மத் ரிஜாகான் அவர்களின் பற்றற்ற வாழ்வு இறையச்சம்
அறியப்பட்டு இருந்தது.நான் சில பெரியோர்கள் கூறுவதை கேட்டேன்: "அன்னாரை
பார்ப்பதால் ஸஹாபாக்களின் ஜியாரத்தின் ஆர்வம் குறைந்துவிட்டது"
.(வஸாயா ஷரீஃப்
பக்கம்:24 பழைய பதிப்பு)


இதனின் புதிய பதிப்பானது வெளியிடப்பட்ட பொழுது அதனை
நீக்கிவிட்டனர்.எழுத்தாளரின் தவறு என்பதாக பிதற்றியுள்ளனர்.தேவ்பந்த்
பெரியோர்களின் நூலில் எழுத்தாளரின் தவறை கூட இணைவைப்பாக அவமரியாதையாக
சித்தரிப்பார்கள்.ஆனால் பரேல்விய பெரியோர்களின் தவறுகளில் மட்டும்
எழுத்தாளரின் தவறு என்பதாக சமாதானம் கூறிக்கொள்கின்றனர்.

புதிய பதிப்பில் :

மெளலவி அஹ்மத் ரிஜாகான் அவர்களின் பற்றற்ற வாழ்வு இறையச்சம்
அறியப்பட்டு இருந்தது.நான் சில பெரியோர்கள் கூறுவதை கேட்டேன் அன்னாரை
பார்ப்பதால் ஸஹாபாக்களின் ஜியாரத்தின் ஆர்வம் அதிகமானது.(வஸாயா ஷரீஃப்
பக்கம்:45,46)


இதன் பிறகு 1996 ம் வருடம் யாஸீன் அஹ்தர் மிஸ்பாஹி அதில் திரிபுகள் மற்றும்
புரட்டல் செய்து கருத்தை மாற்றினார்.

அதில் வரும் வாசகம்:

நான் சில பெரியோர்கள் கூறுவதை கேட்டேன்.அஃலா ஹஜ்ரத் அவர்கள் அண்ணல் நபி ஸல்
அவர்களை பின்பற்றுவதை பார்த்து ஸஹாபாக்களின் ஜியாரதின் திருப்தி
ஏற்பட்டது.அதாவது அஃலா ஹஜ்ரத் கிப்லா அவர்கள் ஸஹாபாக்களின் இறையச்சம் மற்றும்
பற்றற்ற வாழ்விற்கு பூரணமான முன்மாதிரியாக பூரணத்தை வெளிப்படுத்துபவராக
இருந்தார்கள் .
(வஸாயா ஷரீஃப் பர் இஃதிராஜாதே மவ்ஜவாபாத் பக்கம்:60 யாஸீன்
அஹ்தர் மிஸ்பாஹி)

கவனியுங்கள்! ஒரு பொய்யை மறைக்க எத்தனை பொய்களை பரேல்விகள் புனைகிறார்கள்!
எந்தளவிற்கு கருத்துக்கள் திரிக்கப்படுகிறது.

ஹஜ்ரத் ஷேர் முஹம்மத் ஷர்கபூரி அவர்களின் வாழ்வில் நடந்த நிகழ்வுகளில் ஒன்றை
அவர்களின் குறிப்பிடத்தக்க சேவகர் ஜனாப் சூஃபி முஹம்மத் இப்ராஹிம்
எழுதியுள்ளார்கள்:(சுருக்கம்) 

மெளலானா மெளலவி அன்வர் அலி ஷாஹ் ஸாஹிப் அவர்கள்
தனது தோழர் மெளலவி அஹ்மத் அலி ஸாஹிப் முஹாஜிர் லாஹுர் அவர்களை சந்திக்க
ஷர்கபூருக்கு வந்திருந்தார்.ஹள்ரத் மியா ஸாஹிப் அவர்களை மிகவும்
விருப்பத்துடன் சந்தித்தார்கள்.அன்னார் அவர்களிடம் பேசினார்கள்.ஷாஹ் ஸாஹிப்
அவர்கள் அமைதியாக இருந்தார்கள்.பிறகு அன்னார் ஷாஹ் ஸாஹிப் அவர்களை சங்கையுடன்
வழியனுப்பி வைத்தார்கள்.விடைபெறும் போது ஷாஹ் ஸாஹிப் அவர்கள் அன்னாரிடம்
கூறினார்கள்
தாங்கள் என் முதுகின் மீது தங்கள் கரத்தால் தடவுங்கள்! அன்னார் அவ்வாறே
செய்தார்கள்.
அதன் பிறகு அன்னார் கூறினார்கள்: ஷாஹ் ஸாஹிப் அவர்கள் பெரும் ஆலிமாக இருந்தும்
என்னைப் போன்ற சாதாரண நபரிடத்தில் முதுகை தடவும் படி கூறியுள்ளார்கள்.மேலும்
ஹஜ்ரத் மியா ஸாஹிப் கூறினார்கள் தேவ்பந்தில் நான்கு நூர் உள்ளது. அவர்களில்
ஒருவர் ஷாஹ் ஸாஹிப் அவர்கள் (கஜீனா மஃரிபத் தலைப்பு:13 பக்கம்:86 மக்தபா
ஸீல்தான் ஆலம்கீரி உர்து பாஜார் லாஹுர்)



புதிய பதிப்பில் இதனை முற்றிலும் நீக்கிவிட்டனர்.


சில பதிப்பாளர்களின் தவறுகளை
கூட தேவ்பந்த் பெரியோர்களின் மோசடி என்பதாக விமர்சிப்பவர்களான பரேல்விகளுக்கு
இந்த திரிபானது கண்களுக்கு தென்படவில்லையா?

No comments:

Post a Comment