Pages

24 Mar 2017

தேவ்பந்த் உலமாகளின் கனவு குறித்த குற்றச்சாட்டிற்க்கு தக்க பதில்.

பரேலவிகளின் வாதம்:

தேவ்பந்த் உலமாக்கள் அண்ணல் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
அவர்களுக்கும் இப்ராஹிம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கும் தொழவைத்தார்கள்.

நமது மறுப்பு:

 ரிளாகான் பரேல்வி அண்ணலாருக்கு இமாமாக நின்று தொழவைத்தார் என
கூறினோம்.இதற்கு மறுப்பு அளிக்க புகுந்த தமிழக பரேல்வி ஜவ்வாத் ரப்பானி அஃலா
ஹள்ரத் அவர்கள்,
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு தொழவைத்தாக பொய்யை
புகுத்துகிறீர்கள் என நம்மின் மீது பழிசுமத்தினார்.நாம் அதற்கு பரேல்வி
நஸீருத்தீன் ஸய்யாலவி ரிளாகான் அண்ணலாருக்கு  தொழவைத்ததை ஏற்றுக்கொண்டதை கூறி
மறுப்பளித்தோம்.பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு தொழவைப்பது
பாவமா? அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் மற்றும் அபூபக்கர் ரளி தொழவைக்கவில்லையா?
என்று கேட்டார்.அதற்கு நாம் பரேல்வி ஷஃனே ஹபீப் நூலின் வாசகத்தை முன்வைத்து
மறுப்பளித்தோம்.அது மட்டுமின்றி பரேல்விகளுக்கு மத்தியில் இதில் உள்ள
முரண்பாடுகளை அம்பலப்படுத்தினோம்.
இதற்கு பதிலளிக்க முடியாமல்!

ஜவ்வாத் ரப்பானி அவர்கள் தேவ்பந்த் பெரியோர்கள் அண்ணல் நபி  ஸல்லல்லாஹு அலைஹி
வஸல்லம் அவர்களுக்கு இமாமத் செய்துள்ளார்கள்.இப்ராஹிம் அலைஹிஸ்ஸலாம்
அவர்களுக்கு இமாமத் செய்துள்ளார்கள் என இரு நிகழ்வை முன்வைத்து நம்மின் மீது
குற்றம் சுமத்துகிறார்கள். இந்த இரு நிகழ்வுகளும் கனவுடன்
சம்பந்தப்பட்டது.கனவை முன்வைத்து ஷரீஅத் ரீதியாக சட்டம் எடுப்பது நம்மிடத்தில்
ஏற்புடையதல்ல.இதனை பரேல்விகளும் ஏற்றுக்கொள்கின்றனர்.இதனை குறித்து விரிவாக
அறிய நமது தளத்தில் உள்ள இந்த கட்டுரையை பார்க்கவும்! (
http://ummathemuhammedhiya.blogspot.in/2017/02/blog-post_9.html?m=1)

கேள்வியும் பதிலும்:

ரிளாகான் பரேல்வி சம்பந்தமான நிகழ்வும் கனவுதானே பிறகு
அதனை மட்டும் குற்றம் சுமத்துவது ஏன்?

பதில்:

பரேல்விகளின் கொள்கை என்னவெனில் குறிப்பாக நல்லோர்களின் ஜனாஸா
தொழுகையில்  நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்களது பரிசுத்தமான
உடலுடன் வருகை தருகிறார்கள்.(ஜாஅல் ஹக்)


ரிளாகான் பரலேவி அவரது மல்பூஜாதில் எழுதியுள்ள நிகழ்வு:

  மெளலவி பரகாத் அஹ்மத் ஸாஹிப் மரணமான போது மெளலவி ஸய்யித் அமீர் அஹ்மத்
(ரஹ்)அவர்களின் கனவிலே நபி (ஸல்) அவர்களை சந்தித்தார்கள்.நபி (ஸல்)
அவர்கள்குதிரையில் சென்று கொண்டிருந்தார்கள்.எங்கு செல்கிறீர்கள்? 'எனஸய்யித்
அஹ்மத் (ரஹ்) கேட்ட பொழுது அதற்கு அண்ணலார் அவர்கள் பரகாத் அஹ்மத்அவர்களின்
ஜனாஸா  தொழுகைக்கு செல்கிறேன் என்றார்கள் இதன் பிறகு ரிளாகான்பரலேவி
கூறுகிறார் அல்ஹம்துலில்லாஹ்! இந்த ஜனாஸாவிற்கு நான்தான் தொழவைத்தேன்.

(ஆதாரம்
மல்பூஜாத் இரண்டாவது பாகம்)

ரிளாகான் பரலேவி எழுதிய நிகழ்வானது கனவுதான் எனினும் தொழவைத்த நிகழ்வுவிழிப்பு
நிலையிலாகும்.இதில் பெருமையுடன் அல்ஹம்துலில்லாஹ் என கூறுகிறார்.

பரேல்விகளின் கொள்கைப்படி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஜனாஸாவில்
கலந்து கொண்டுள்ளார்கள்.ரிளாகான் பரேல்வி தொழவைத்துள்ளார்.அதற்கு பெருமையுடன்
அல்ஹம்துலில்லாஹ் என கூறியுள்ளார்கள்.

ஆனால் தேவ்பந்த் பெரியோர்களின்
நிகழ்வானது முழுக்க கனவுடன் சம்பந்தப்பட்டது.ரிளாகான் பரேல்வியின் நிகழ்வு
கனவு மற்றும் விழிப்புடன் சம்பந்தப்பட்டது.அது மட்டுமின்றி பரேல்விகளைப்
போன்று நபி   ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  நல்லோர்களின் ஜனாஸா தொழுகையில் கலந்து
கொள்வார்கள் என்கிற கொள்கை தேவ்பந்த் பெரியோர்களுக்கு கிடையாது.

No comments:

Post a Comment