23 Jan 2016

பரேல்விகளின் குற்றச்சாட்டுக்கு தக்க பதில் : 3

பதாவா ரஷீதிய்யாவில் பரலேவிகளால் எழுப்பப்படும் குற்றச்சாட்டும் அதற்கான பதிலும் : 

எந்த நபர் ஸஹாபாக்களில் யாரையாவதை தக்ஃபீர் செய்வாரோ அவர் சபிக்கப்பட்டவராவார்.அவர் மஸ்ஜிதில் இமாமத் செய்வது ஹராமாகும்.இந்த பெரும் பாவத்தின் காரணமாக அஹ்லுஸ்ஸுன்னாவை விட்டு வெளியேறமாட்டார்.
(பதாவா ரஷீதிய்யா 128)

இதனை வைத்து கொண்டு பரலேவிகளால் எழுப்பப்படும் வாதமானது நபித்தோழர்களை காபிர் என்பதாக கூறுபவர்கள் அஹ்லுஸ்ஸுன்னாவை விட்டும் வெளியேறமாட்டார்கள் என்பதன் மூலம் தேவ்பந்திகள் ஸஹாபாக்களின் விஷயத்தில் அவமரியாதையாக நடந்து கொள்கிறார்கள் இதற்கு சரியான பதிலை இனி காண்போம்!

இது எழுத்தாளரின் தவற்றால் நிகழ்ந்தது.இது தவறுதலாக எழுதப்பட்டது என்பதற்கு சரியான தெளிவான சான்றுகள் உண்டு.

இன்று நவீன பரேலவிகள்  இல்லை இதில் தான் نہ என்ற வார்த்தை விடப்பட்டுள்ளது .மற்ற எல்லா கிதாபுகளிலும் இந்த வார்த்தை உள்ளது என்கிறார்கள்.

TALIFAAT-E-RASHEEDIA-PAGE-128.png

 சரியான வாசகம் 👆

தஃலீஃபாது ரஷீதிய்யா👆

1)அசல் வார்த்தையானது இந்த இடத்தில் அஹ்லுஸ்ஸுன்னாவை விட்டும்  வெளியேறமாட்டார் என்று இருந்தால் இறுதியான வார்த்தையின் ஆரம்பத்தில் استدراك (ஆனால்)என்ற வார்த்தையானது வந்திருக்க வேண்டும். அதாவது இவ்விதமாக لیکن وہ اپنے کبیرہ کے سبب اہل سنت سے نہ خارج ہوکا ஆனால் அவ்வாறு வரவில்லை.

2) அதே பத்வாவில் சபிக்கப்பட்டவர் என்று உள்ளது.

3)அதே பத்வாவில் இமாமாக ஆக்குவது ஹராம் என்று சொல்லப்பட்டுள்ளது. அஹ்லே சுன்னாவாக இருந்திருந்தால் சபிக்கப்பட்டவர்,ஹராம் என்று சொல்லி இருக்ககூடாது.எனவே இது எழுத்தாளரின் தவறினால் ஏற்பட்டது என்பதை தெளிவாக அறியமுடிகிறது.

அதே பதாவா ரஷீதிய்யாவில் மற்றோர் இடத்தில் :

 ராபிளியாக்களை அதிகமான உலமாக்கள் காபிர் என்கின்றனர்.         எனவே அவர்களைப் பின்பற்றி ஜனாஸா தொழுவது கூடாது.
( தஃலீஃபாது ரஷீதிய்யா 234)

talifaat-e-rasheedia-page-234

 மற்றொரு பத்வா ஸஹாபாக்களை காபிர் என்பவர் அஹ்லுஸ்ஸுன்னாவிலிருந்து நீங்கிவிட்டார்.குர்ஆனை மறுப்பவராகிவிடுகிறார்.( தஃலீஃபாது ரஷீதிய்யா, ஹிதாயத்துஸ்ஷீஆ 596)

hadyatush-shiya-page-29
talifaat-e-rasheedia-page-550

ஒரு தடவை மெளலவி முஹம்மது ஹஸன் அவர்கள் ரவாபிள்களின் தக்ஃபீரைப் பற்றி ரஷீத் அஹ்மது கங்கோஹி ரஹ் அவர்களிடத்தில் கேட்டார்கள் அதற்கு நம்முடைய ஆசிரியர் ஷாஹ் அப்துல் அஜீஜ் அவர்களின் கருத்தின் படி காபிர்களுக்கு சமம் சிலர் அஹ்லுல் கிதாபிற்கு சமம் என்கின்றனர்.சிலர் முர்தத் என்கின்றனர் என்பதாக பதில் அளித்தார்கள்.தங்களின் கருத்து என்ன? என்பதாக கேட்டார்.
ராபிளியாக்களின் உலமாக்கள் காஃபிர் அறியாதவர்கள் பாவிகள்.
(தத்கிரதுர் ரஷீத் 2/284)



ஆக ஸஹாபாக்களை அவமரியாதை செய்பவரை பிறகு எப்படி அஹ்லுஸ்ஸுன்னாவிலிருந்து வெளியேறியவர் அல்ல என்று சொல்லியிருப்பார்கள்? இதன் படி குற்றச்சாட்டு சுமத்துபவர்கள் குர்ஆனில் அச்சுப்பிழை ஏற்பட்டால் அல்லாஹ்வின் தவறு என்பார்களா? அல்லாஹ் பாதுகாப்பானாக!

0 comments:

Post a Comment

 

makkah live

Sample Text

madina live